BREAKING NEWS
Search

ரஜினி உயரே உயரே செல்வதை ரசிப்பவன்… அவரை சங்கடப்படுத்த விரும்பாதவன் நான்! – கலைப்புலி தாணு

ரஜினி உயரே உயரே செல்வதை ரசிப்பவன்… அவரை சங்கடப்படுத்த விரும்பாதவன் நான்! – கலைப்புலி தாணு

மிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களில் நிஜமான ஜென்டில்மேன் என்றால், சட்டென்று சுட்டுவிரல் நீட்டி ஒருவரைச் சொல்லலாம்… அவர் தாணு. கலைக்காக கணக்குவழக்கில்லாமல் செலவு பண்ணும் புலி!

சூப்பர் ஸ்டார் ரஜினியை ‘பைரவி’யில் ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் பெரியவர் கலைஞானம் என்றால், ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை மக்களின் ஏகோபித்த ஆதரவோடு சூட்டி அழகு பார்த்தவர், பைரவியை விநியோகித்த கலைப்புலி தாணு.

இருவரின் நட்பும் மிகவும் பக்குவமானது… எந்த நிலையிலும் பங்கப்படாதது. விஜய்காந்தை வைத்து தாணு எடுத்த தெருப்பாடகன் (பின்னர் ‘புதுப்பாடகன்’) படத்துக்கு அவர் சென்னையில் வைத்த பிரமாண்ட கட் அவுட்டுக்களைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் தாணுவின் விளம்பர பிரமாண்டமும், ரஜினியை எப்போதும் உயர்த்தி வைத்துப் பார்க்கும் அவரது குணமும்.

‘மனிதர்களில் நடிகரைப் பார்த்திருக்கிறேன்… ஆனால் நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் ரஜினி!’ என்பதை செல்லுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பவர் தாணு.

பாடல் வெளியீட்டுக்கு ரஜினி வந்ததற்கே இந்த கட் அவுட்.. அவரே நடிச்சிருந்தா...!!

சமீபத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் ஜெர்மன் அரங்குக்கு அழைத்து, தன் மகன் கல்யாணத்துக்கான அழைப்பிதழை ஒவ்வொருவருக்கும் தன் கையால் கொடுத்தார் தாணு.

அப்போது, திருமண ஏற்பாடுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, யாரெல்லாம் வருவார்கள்… என்பது குறித்து பேச்சு வந்தது.

தாணு சொன்னார், “ரஜினி சார் எங்கிருந்தாலும் திருமணத்தன்று சென்னையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வதாகக் கூறிவிட்டார். அவர் சொன்னதைச் செய்துவிடுவார்”, என்றார்.

அப்போது, உடனிருந்த ஒரு பிஆர்ஓ, நீங்க ரஜினிக்கு எவ்வளவோ நெருக்கமா இருக்கீங்க.. அவரும் யார்யாருக்கோ படம் பண்ணியிருக்கார்.. உங்களுக்கு ஏன் பண்ணலை?” என்றார்.

அது பிரஸ் மீட் அல்ல… அதிகாரப்பூர்வ பேட்டியும் அல்ல. தனிப்பட்ட முறையில் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த ஒரு தருணம். வேறு யாராக இருந்தாலும் சட்டென்று ஏதாவது கமெண்ட் அடித்திருப்பார்கள். ஆனால் தாணு சொன்னது, அவரது தன்மையான குணத்துக்குச் சான்று.

“நான் கேட்டிருந்தா நிச்சயம் ரஜினி சார் மறுத்திருக்க மாட்டார். ஏன்? எத்தனையோ முறை படம் துவங்கும் முன்பு என்னிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அடுத்து உங்க பிளான் என்னன்னு கேப்பார்… நானும் சொல்வேன். ஆனால் உங்களிடம் கால்ஷீட் கேட்பதுதான் அடுத்த பிளான் என்று எப்போதும் நான் கூறியதில்லை.

அவ்வளவு ஏன்… ‘இந்தப் படத்தில் நடிச்சுக் கொடுக்கணும் நீங்க’ என்று நான் சில ஆண்டுகளுக்கு முன் ரஜினியிடம் சொல்லி ஒப்புதல் வாங்கியிருக்கிறேன். ‘நீங்க தயாரிக்கிறீங்களா?’ என்று அவர் கேட்டபோது, அந்த நேரத்தில் நான் அதற்கான சூழலில் இல்லாததால், வேறொருவருக்கு அந்த வாய்ப்பை தந்திருக்கிறேன்.

என்னைப் பொருத்தவரை ரஜினி என் உண்மையான நண்பர்களில் ஒருவர். அவர் உயரே உயரே போவதை அருகிலிருந்து ரசிக்கும் மனநிலையில் இருப்பவன் நான். நானாகப் போய் அவரை சங்கடப்படுத்த ஒருபோதும் விரும்பியதில்லை… அந்த திருப்போரூர் முருகன் சித்தப்படியே எல்லாம் நடக்கும்…” என்றார்.

குறிப்பு: தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன் நடந்தது இது. இதை இப்போதுதான் வெளியிட முடிந்திருக்கிறது. ‘அததுக்கு ஒரு நேரம் வரணும்னு’ சொல்வது இதைத்தானோ!

குறிப்பு 2: எந்திரனை தாணு வெளியிட்டிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நண்பர் மாரியப்பன் கேட்டிருந்தார்… அப்படி நடந்திருந்தால், இந்த அக்டோபர் – நவம்பரில் நாம் பார்த்த ‘எந்திரன் தீபாவளி’, 2011 முழுக்க நீடித்திருக்கும்! சச்சினையே 200 நாள் ஓட்டி விஜய்யை சந்தோஷப்படுத்திய மனிதர் தாணு!

-வினோ

என்வழி ஸ்பெஷல்
5 thoughts on “ரஜினி உயரே உயரே செல்வதை ரசிப்பவன்… அவரை சங்கடப்படுத்த விரும்பாதவன் நான்! – கலைப்புலி தாணு

 1. KICHA

  SUPER.

  /அப்படி நடந்திருந்தால் , இந்த
  அக்டோபர் – நவம்பரில் நாம்
  பார்த்த ‘எந்திரன் தீபாவளி’,
  2011 முழுக்க
  நீடித்திருக்கும்!/

  correct

 2. M.MARIAPPAN

  நன்றி mr வினோ தலைவர் அடுத்து S .தானுவுக்குதான் படம் கொடுக்க வேண்டும் . அந்த அளவுக்கு தலைவர் மேல் உண்மையான அன்பு வைத்திருப்பவர் . தலைவருக்கு பைரவி படத்திக்கே சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவர் . தலைவரை வைத்து அடுத்த படம் எடுக்கசொல்லி தானுவிக்கு நமது ரசிகர் மூலம் இ-மெயில் அனுப்பி தகவல் தெரிவிக்க சொல்லுங்கள் .சந்திரமுகியை பிரபு 900 நாட்களுக்கு மேல் ஓட செய்து தனது நன்றியை காட்டினார் . தாணுவின் இ-மெயில் அட்ரஸ் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர் வினோ . வாழ்க ரஜினி என்றும் தலைவர் வழியில்

 3. Anand

  சூப்பர் ஸ்டார் ரஜினி, கலைப்புலி தாணு
  வாழ்க இவர்களின் நட்பு…..

 4. Saran

  Hai Vino

  Can you give some light on Thalaivar’s next film……
  Who is the director – K.S.Ravikumar or A.R. Murugadasss

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *