BREAKING NEWS
Search

ரஜினி, இளையராஜாவுக்கு அமிதாப் சூட்டிய புகழாரம்!

ரஜினி, இளையராஜாவுக்கு அமிதாப் சூட்டிய புகழாரம்!

மீபத்தில் சென்னை வந்திருந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைஞானி இளையராஜாவை வெகுவாகப் புகழ்ந்தார்.raja - amitji

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சனிக்கிழமை சென்னை வந்தார். இளையராஜாவுடன் பா படத்தின் சிறப்புக் காட்சியில் பங்ககேற்றார்.

இளையராஜா இசையில், பால்கி இயக்கத்தில், அமிதாப்பின் மிக வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள பா திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் பாராட்டுக்களும் அந்தப் படத்துக்கு குவிகின்றன.

படத்தின் பாடல்கள் இந்தி சினிமாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

படம் வெளியான தினத்தன்று மும்பையில் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அமிதாப், அதில் பங்கேற்க வருமாறு இளையராஜாவை அழைத்துள்ளார். ஆனால் ராஜாவால் போக முடியவில்லை.

எனவே இளையராஜாவுக்காக சென்னையில் ஒரு தனி ஷோவுக்கு ஏற்பாடு செய்ததிருந்தது அமிதாப்பின் ஏபி கார்ப்பரேஷன். ஃபெப்ஸி அமைப்பு இந்த காட்சிக்கான பணிகளை முன்னின்று செய்தது.

சனிக்கிழமை மாலை நடந்த இந்த சிறப்புக் காட்சியில் திரையுலகினர் பெருமளவில் பங்கேற்று, இளையராஜாவுக்கும், அமிதாப்புக்கும் வாழ்த்து மழை பொழிந்தனர்.Paa-Premiere-Still

படம் துவங்குவதற்கு முன், சில நிமிடங்கள் இளையராஜாவும், அமிதாப்பும் மைக்கில் பேசினர்.

அப்போது, சென்னை தனக்கு மிகவும் பிடித்த நகரம் என்றார் அமிதாப்.

“இந்தியாவிலேயே அதிக ஒழுக்கம் மிகுந்த நகரம் சென்னைதான். இங்குள்ளவர்களைப் போல மும்பையில் ஒரு கட்டுக்கோப்பான, அற்புதமான படைப்பாளிகளைப் பார்க்க முடியாது. தமிழர்கள் ரொம்ப முற்போக்கானவர்கள். நான் மும்பைவாசியாக இருந்தாலும், பாதித் தமிழன் என்று பெருமையாக சொல்லிக் கொள்வேன். தென்னிந்தியாவின் தயாரிப்புகளில் நானும் ஒருவன் என்றும் சொல்லலாம்.

என்னை ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்குமாறு கேட்கிறார்கள். பா படமே கிட்டத்தட்ட தமிழ்ப் படம்தான். தமிழ்க் கலைஞர்களால் உருவான மிகச் சிறந்த படைப்பு. பால்கியும் பிசி ஸ்ரீராமும் அற்புதமான கலைஞர்கள். இவர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை.

இளையராஜா இசையை விரும்பாதவர்கள் கூட இருக்க முடியுமா? இளையராஜாவை இன்று நேற்றல்ல… பல ஆண்டுகளாக எனக்கு மிக நெருக்கமாகத் தெரியும்.

என்னைப் பொறுத்தவரை இளையராஜா ஒரு நிஜமான, சுத்தமான இசை மேதை. இதயத்துக்கு நெருக்கமான இனிய பாடல்களைத் தருவதில் அவருக்கு நிகரான ஒரு இசைமேதையைப் பார்க்க முடியாது. நான் அவருடைய வீட்டுக்குப் போயிருக்கிறேன். அவர் என்னை உபசரித்த விதம், ஒரு மறக்க முடியாத இனிய அனுபவம். அவருடன் பணியாற்றியது எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஏற்கெனவே சீனிகும் படத்தின் பாடல்கள் பெரும் சாதனை நிகழ்த்தின. இப்போது பா அதை முறியடித்துள்ளது…” என்றார்.

ரஜினி – கமல் பற்றியும் இந்த நிகழ்ச்சியில் பேசத் தவறவில்லை அமிதாப்.

“ரஜினி – கமல் இருவருக்குமே என்மீது பெரும் அன்பு. எப்போதும் என்னை தமிழில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டே உள்ளார்கள். அவர்களின் இந்த விருப்பத்தை நான் இன்னும் நிறைவேறவில்லை. விரைவில் அந்த்க குறை நீங்கும் என எதிர்பார்க்கிறேன்.

ரஜினி ஒரு அற்புதமான மனிதர். எப்போதெல்லாம் அவரது படம் இங்கு வெளியாகிறதோ, அப்போதெல்லாம் மும்பைக்கே வரும் ரஜினி, தனது படத்தின் சிறப்புக் காட்சியை எனக்காக ஏற்பாடு செய்வார். இதை விட முக்கியம், நான் நடித்த படம் வெளியானாலும், அதை முதலில் பார்த்துவிட்டு, என்னை அழைத்துப் பாராட்டுவார். முன்பு பிளாக் படத்தின் சிறப்புக் காட்சிக்கு நான் ரஜினியை அழைக்க நினைத்திருந்தேன். அவரோ அதற்குள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, என்னைப் பாராட்டினார். இந்த பா படத்தை, ரஜினிக்கு சிறப்புக் காட்சியாக போட்டுக் காட்ட விரும்புகிறேன்… அதற்குள் அவரே பார்த்துவிட்டு என்னைக் கூப்பிடாமல் இருக்க வேண்டும்!” என்றார் சிரித்தபடி அமிதாப்.

படத்தின் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமையும் வெகுவாகப் பாராட்டினார்.

பின்னர் பேசிய இசைஞானி, “அமிதாப் போல ஒரு மகா கலைஞனை பார்ப்பது மிக அரிது. இந்தப் படத்தில் எங்கள் பங்களிப்பை விட அமிதாப்பின் பங்களிப்பு உயர்ந்தது, மதிப்பு மிக்கது. பால்கியின் திரைக்கதை ஒரு அற்புதமான விஷயம்…” என்றார்.
5 thoughts on “ரஜினி, இளையராஜாவுக்கு அமிதாப் சூட்டிய புகழாரம்!

 1. எப்பூடி

  பா,பழசிராஜா பாடல்கள் மூலம் ராஜா இளம் இசையமைப்பாளர்களுக்கு சவால் விட்டிருக்கின்றார்.

 2. Siva

  மன்னிக்க வேண்டும். இசைஞானி என்றைக்கும் எவராலும் நெருங்க முடியாத இடத்தை பிடித்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. அவ்வப்போது தரிசனம் தருகிறார் அவ்வளவு தான். இன்றைய தலைமுறைக்கு அவர் ஒரு வழிகாட்டி. இசைஞானி சவால் விடும் அளவு எந்த இசையமைப்பாளரும் இல்லை. இனி வரவும் முடியாது.

 3. r.v.saravanan

  இந்த பா படத்தை, ரஜினிக்கு சிறப்புக் காட்சியாக போட்டுக் காட்ட விரும்புகிறேன்… அதற்குள் அவரே பார்த்துவிட்டு என்னைக் கூப்பிடாமல் இருக்க வேண்டும்!” என்றார் சிரித்தபடி அமிதாப்.

  அழைத்துப் பாராட்டுvathu than rajini style

 4. r.v.saravanan

  ரஜினி ஒரு அற்புதமான மனிதர்

  இளையராஜா ஒரு நிஜமான, சுத்தமான இசை மேதை.

  thanks amithab sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *