BREAKING NEWS
Search

ரஜினி இமயமலைப் பயணம்… திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார்!

ரஜினி இமயமலைப் பயணம்… திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி இரண்டு ஆண்டுகள் கழித்து தனது இமயமலைப் பயணத்தைத் தொடங்கினார்.

ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்திலும் நடித்து முடித்து, அந்த படம் திரைக்கு வந்ததும் இமயமலை செல்வது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக அவர் எந்திரன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

படத்தை முடித்துக்கொடுத்ததும், அவர் இமயமலை செல்ல ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார். அதன்படி, அந்த படம் திரைக்கு வந்து பெரும் பெற்றுவிட்டதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டார். சென்னையிலிருந்து அவர் விமானம் மூலம் டெல்லி சென்று, அங்கிருந்து இமயமலைக்கு செல்கிறார்.

இமயமலையில் உள்ள ஆசிரமத்தில் ரஜினிகாந்த் தங்கியிருந்து, தியானம் செய்கிறார். மானசரோவர் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்கிறார். அவருடன் நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே சென்றுள்ளனர். ஒரு மாதம் கழித்து, அவர் சென்னை திரும்புகிறார்.

சென்னை திரும்பியதும், ரசிகர்களைச் சந்திப்பார் என்றும், அடுத்த படத்தில் நடிப்பது பற்றி அவர் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் புதிய படம் சத்யா மூவீஸ் தயாரிப்பாக இருக்கக் கூடும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4 thoughts on “ரஜினி இமயமலைப் பயணம்… திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார்!

 1. chithamparam

  எனக்கு தெரிந்து ஒரு இணையத்தளத்தில் எந்திரன் படம் வெளியாயிருப்பதாயும்,அதனை தடுக்கும் படியும் தங்களுக்கும் , rajinifans.com ,********,தினகரன் நாளிதளுக்கும் இரண்டாம் திகதியிலிருந்து எத்தனையோ மின் அஞ்சல்கள் அனுப்பிவிட்டேன் எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதற்கான பதிலும் இல்லை மிகவும் வேதனையாக உள்ளது.இதுதான் நீங்கள் தலைவர் மீது கொண்ட பாசமா??????? இனியாவது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன்.இலங்கையிலும் திருட்டு விசிடி அதிகமாகிவிட்டது அதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கவும்.
  ___________

  நண்பரே,

  எனக்கு அனுப்பப்படும் லிங்க்குகளை திரு சக்ஸேனா அவர்களுக்கே நேரடியாக அனுப்பி வைக்கிறேன். இரு முறை சைபர் கிரைமுக்கும் தகவல் தெரிவித்துள்ளேன். சன் பிக்சர்ஸ் எடுத்த நடவடிக்கையின் பேரில் இதுவரை 40க்கும் மேற்பட்ட தளங்களில் எந்திரன் லிங்க் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் முழுமையாக நீக்க முடியவில்லை என்பது உண்மைதான். இது போலீசாருக்கும் சற்று கடினமான பணியே. ஆனாலும் முயற்சி செய்து வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. நன்றி.

  -வினோ

 2. ganapathy

  வணக்கம் வினோ தங்கள் தலைவரை பற்றி வெளியிடும் அனைத்து கட்டுரைகளையும் படிப்பேன் வாழ்த்துக்கள் .நீங்கள் தலைவரை பற்றி வெளியிடும் அணைத்து கட்டுரையும் **** வருகிறது .இதனை நீங்கள் தடுக்க வேண்டும் .அவர்கள் காப்பி அடிப்பது தவறு என்று சொல்லலை அனால் கீழே வரும் அசிங்கமான கமேன்ட்சை அவர்கள் தடுப்பதில்லை. தலைவரை பற்றி தரக்குறைவாக கமென்ட் எழுதுவது வாடிக்கையாகி விட்டது வயித்தெரிச்சல் பார்டிகளுக்கு .நானும் எவளவோ பதில் கமென்ட் போட்டு பார்த்திட்டேன் முடியல இன்றுவரை திட்டுபவனை திருப்பி தாக்கிகொண்டு தான் உள்ளேன் .**** தாங்கள் தடுக்க வேண்டும் .
  _________

  நமது அனுமதியோடுதான் வெளியாகிறது. கமெண்ட்ஸ் விஷயத்தில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. நன்றி.
  -வினோ

 3. Online share trading

  Super star CD will be banned.No body will see the enthiran movie in vcd or dvd bcos they cannot enjoy.
  Enjoyment is available near you…. will you spend some rupees and get participant in the enjoment….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *