BREAKING NEWS
Search

ரஜினி, அமிதாப், கமலுக்கு நன்றி! – சீமான்

கொழும்பு திரைப்பட விழாவில் யாரும் பங்கேற்காதீர்கள்..!- சீமான் வேண்டுகோள்!

சென்னை: எமது தொப்புள்கொடி உறவுகளின் ரத்தத்தால் நனைந்த இலங்கையில், தமிழர் படுகொலையைக் கொண்டாடும் வகையில் இரக்கமற்று நடத்தப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்திய நடிகர் – நடிகையர் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறிப் பங்கேற்போருக்கு எதிராக பெரும் போராட்டம் தொடரும்” என்று நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

நாம் தமிழர் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மனிதாபிமான அடிப்படையில், இலங்கையில் நடக்கும் இந்தியத் திரைப்பட விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்த ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், கமல்ஹாஸன், மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு நன்றி.

மலையாளம், தெலுங்கு, கன்னடத் திரையுலகைச் சேர்ந்த மம்முட்டி, மோகன்லால், திலீப், வெங்கடேஷ், நாகார்ஜுன், புனித் ராஜ்குமார் போன்ற கலைஞர்களும் இந்த விழாவைப் புறக்கணித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இவர்களெல்லாம் சக மனிதனாக தமிழர் உணர்வுகளை மதித்துள்ளார்கள். அந்த உணர்வுக்கு நன்றி செலுத்துகிறோம்.

அதேபோல இந்த விஷயத்தில் மிகத் தெளிவான முடிவை எடுத்துள்ள தென்னிந்திய திரைப்படத்துறை, கொழும்பு விழாவில் பங்கேற்கும் நடிகர்களுக்கு தடையை அறிவித்துள்ளது. இது மிகுந்த ஆறுதலைத் தருகிறது. தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்புக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர்களைத் தவிர, மனித உணர்வற்று இலங்கை விழாவுக்கு போக விரும்புபவர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்.

இன்று காலையில் கூட இந்தியத் திரைப்பட விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைதாகியிருக்கிறார்கள். இவர்களும் மற்ற நடிகர்களைப் போல இலங்கை செல்லமாட்டோம் என்று அறிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.

இந்தியத் திரைப்பட விழாவில் ஒரு இந்திய நட்சத்திரம் கூட பங்கேற்கவில்லை என்ற நிலை உருவாக வேண்டும். இனப் படுகொலை செய்த ஒரு நாடு சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தப்பட வேண்டும். போர்க் குற்றங்களுக்கு உரிய தண்டனையை ராஜபக்சே அரசு அனுபவித்தே தீர வேண்டும். அதற்கு திரைத்துறையினரின் இந்தப் புறக்கணிப்பு பெருமளவு உதவும் என்பதை மனதில் கொண்டு, தமிழ் இனத்தின் உரிமைக்கும் விடிவுக்கும் குரல் கொடுக்க முன்வருமாறு, கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
6 thoughts on “ரஜினி, அமிதாப், கமலுக்கு நன்றி! – சீமான்

 1. khalifa

  அட மானம் கேட்ட சீமானே !!! என் தலைவன் பெயரை சொல்ல கூட உனக்கு தகுதி இல்லே நீ என்ன* *** என் தலைவனுக்கு நன்றி சொல்றது.

 2. Chozhan

  **** … khalifa .. *******.. சீமான் அவர்கள் செய்வதை ஆதரிக்கத்தான் வில்லை என்றாலும் இந்தமாதிரி பேசாதே.

 3. mani

  kahalifa ***; சீமான் சூப்பர் ஸ்டாரை அன்று நடந்த பிரச்னையில் தவறாக என்ன பேசினார் சொல்லு ,மிகவும் நாகரிகமாக தான் அவருடைய கருத்தை தெரிவித்தார் ,ஜகுவார் குரங்கு ,ராமதாஸ் சுயநல பீனிகளை போல தரை குறைவாக பேசவில்லை ,சீமான் ,ரஜினி இருவரையும் விட்டு வெளிய இருந்து பார் இருவர் மேல் உள்ள நியாயம் புரியும் ,பகுத்து யோசிச்சி கமெண்ட் கொடு அதன் ரஜினி ரசிகனுக்கு அழகு , மூடனாய் இராதே,சீமான் செய்துகொண்டு இருப்பது காலத்தின் அவசியம் ,தமிழகத்தின் கட்டாயம் ,தமிழனின் மானம் காக்கபட

 4. srini

  சீமான் அவர்கள் செய்வதை ஆதரிக்கத்தான் வில்லை என்றாலும் இந்தமாதிரி பேசாதே….being die hard thalaivar fan……..pls dnt scold seeman he is the one supports eelam tamil among other fake politicians of TN………we like thalaivar the most by the same token we cant leave who truly supports eelam tamils.

 5. Arun

  Mani mattrum srini,
  naan khalifa mathiri pesa virumbala aana ungaluku onnu mattum solluren

  Jaquar issue la Seeman avaroda naamm tamilar iyakamum antha jaquar veetuku poyee thannoda support therivichanga… So as a true fan of SS we should consider all these things… tamilan tamilan nu solli ithu naal varaikum Rajini ku naaama yennikume kashtam mattum than koduthu irukom.. antha nalla manushana innumelum naama kannadan athu ithunu pirika venamm.. seeman avaroda eelam kuritha visayangal paraatuku uriyathu.. no second thought aaana rajini visayathula innum avaar maravendiyathu neraiaya iruku

 6. Mahesh

  Dinamalar veliittu ulla Idhae arikkaiyil தலைவர் பெயர் மட்டும் இல்லை . ஏன்
  அப்டி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *