BREAKING NEWS
Search

ரஜினிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? – கேள்வி பதில்-4

ரஜினிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? – கேள்வி பதில்-4

தொடர்ந்து 4 வாரங்கள் நமக்கு வந்த பல கேள்விகளுக்கு தனியாக கேள்வி பதில் பகுதியில் பதில் சொல்லவில்லை, பெரும்பாலும் அவற்றுக்கான பதில்களை செய்திகளாகவே வெளியிட்டுவிட்டோம் என்பதால்.  சூழ்நிலையின் அவசியம் கருதி இந்த ஒரு கேள்விக்கான பதிலை மட்டும் தனி பகுதியாக வெளியிட்டுள்ளோம். மற்ற கேள்வி-பதில்கள் நாளை வெளியாகும்…

ரஜினிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? விருது வழங்கும் விழாக்களில் அவர் பங்கேற்பதுமில்லையே?

Suresh கிருஷ்ணா,  scinima@gmail.comndtv

விருதுகள் குறித்து பேச்சு அல்லது விவாதம் வரும்போதெல்லாம்  இந்த சம்பவம்தான் நமக்கு நினைவுக்கு வரும்.

அண்ணாமலை…

இந்தப் படத்தை மிகவும் விரும்பிப் பார்த்தவர் தேசத்தின் தலைமைக் குடிமகன் என்ற பொறுப்பிலிருந்த அமரர் சங்கர் தயாள் சர்மா.

அண்ணாமலை ரிலீசான பிறகு புதுடெல்லியில் நடந்த முதல் சர்வதேச திரைப்பட விழாவில் அதைத் திரையிட்டுக் காட்ட ஏற்பாடு செய்திருந்தனர். சிறந்த ஜனரஞ்சகப் படம் எனும் பிரிவில் அண்ணாமலை இடம் பெற்றிருந்தது. அன்றைக்குப் பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ்.

முதலில் இந்தப் படம் ஜனாதிபதிக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. படம் முடிந்ததும் ‘இந்த நடிகரை நான் நிச்சயம் பார்க்க வேண்டும்’ என தன் விருப்பத்தைச் சொன்னார். அதன் பிறகு நரசிம்மராவுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது.

இதில் விசேஷம்… அந்த திரைப்பட விழாவில் ஜனாதிபதியும் பிரதமரும் விரும்பிப் பார்த்த படங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று அமிதாப் நடித்தது. அடுத்தது ரஜினி நடித்த அண்ணாமலை.

அதன் பிறகு சில ஆண்டுகளுக்குப் பின் சங்கர் தயாள் சர்மா, நரசிம்மராவ் இருவரையுமே ரஜினி சந்தித்துப் பேசிய போதும், அவர்கள் ரஜினியின் அண்ணாமலையை மறக்காமல் குறிப்பிட்டுள்ளனர்.

விருதுகளை விட உயர்ந்த அங்கீகாரம் இது!

நான்கு முறை மாநில அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி (முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி). ஆனால் வேறு விருதுகளை அவர் பெரும்பாலும் பெற்றுக் கொள்வதே இல்லை.

எத்தனையோ சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு வருந்தி வருந்தி அழைத்தாலும் போக மறுத்துவிடுவது ரஜினியின் வழக்கம்.

கடந்த 2007-ம் ஆண்டு லண்டனில் ஐஐஎப்ஏ (இந்திய ஆஸ்கார் என புகழப்படுவது) விருதுகள் வழங்கும் நடந்தது. இதில் ரஜினிக்கு, இந்திய திரையுலகின் சிறந்த சாதனையாளருக்கான விருது வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவரான அமிதாப் பச்சனே நேரடியாகக் கூப்பிட்டும் கூட, அந்த விழாவுக்குப் போக மறுத்துவிட்டார் ரஜினி.

‘சரி, நீங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை… உங்கள் சார்பாக ஒரு வரை அனுப்பி அந்த விருதைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என அமிதாப் சொன்னதற்கு மிகுந்த பணிவோடு அதை மறுத்து, இன்னும் சாதிக்கத் துடிக்கிற இளைஞர்களுக்கு இந்த விருதைக் கொடுங்கள்… அடுத்த முறை வர முயற்சிக்கிறேன்’, என்று சொல்லி தவிர்த்துவிட்டார்.

இரு ஆண்டுகளுக்கு முன் ஜப்பானிய பாராளுமன்றம் டயட்டில் சிறப்புரையாற்றிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அங்கே ரஜினியின் பெயரைக் குறிப்பிட்டார். ‘இருநாட்டு கலாச்சார உறவுகளுக்கும் உள்ள நெருக்கத்துக்கு, எங்கள் நாட்டு சூப்பர்ஸ்டார் நடித்த முத்து படத்தை ஜப்பானியர்கள் ரசித்ததே ஒரு சான்று’ என பலத்த கரகோஷத்துக்கிடையே மன்மோகன்சிங் சொன்னது நினைவிருக்கலாம்.

கடந்த ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவுக்கு தலைமையேற்றுத் துவக்கி வைக்க தென்னிந்திய திரையுலகமே ரஜினியின் பெயரைத்தான் முன் மொழிந்தது.

விழா ஏற்பாட்டாளர்களும் ரஜினியை அழைக்க, அவர் இப்படியொரு கவுரவமே தனக்கு வேண்டாம். வேறு எந்த நடிகர் அல்லது நடிகைக்கு இந்த கவுரவத்தைக் கொடுங்கள் என கேட்டுக் கொண்டார்.

என்டிடிவி சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கிய ‘நாட்டின் சிறந்த எண்டர்டெய்னர்’ விருதினைக்கூட, மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகே ரஜினி பெற்றுக் கொண்டார்.

விருது குறித்து வெளிப்படையாக பேசுவதையே பெரிய தர்மசங்கடமாகக் கருதும் ரஜினி, “விருதுக்காக நான் நடிக்கவில்லை. நமக்கு ஜனங்க, படம் எடுத்தவங்க சந்தோஷமா இருந்தா போதும்” என பிலிம்பேர் பேட்டியில் ஒருமுறை தெரிவித்திருந்தார்.

இருந்தும் ரஜினிக்கு இதுவரை கிடைத்துள்ள பல்வேறு விருதுகளின் எண்ணிக்கை… சிறந்த குடிமகன், பத்மபூஷண் உள்பட 82! அவர் நடித்த படங்களுக்கு கிடைத்துள்ள விருதுகள் தனி!award31

தேசிய விருது பெற என்னென்ன லாபிகள் செய்ய வேண்டும் என, விருதுக் குழுவில் இடம்பெற்றிருந்த இயக்குநர் கே.பாலச்சந்தரே பலமுறை கூறியிருக்கிறார். சமீபத்தில் அதை தனது வாயாலேயே ஒப்புக் கொண்டவர் பாலுமகேந்திரா. தேவர் மகனுக்காக இளையராஜாவுக்குக் கிடைக்க வேண்டிய விருதினை, இவர்தான் தனது ஓட்டைப் பயன்படுத்தி ரஹ்மானுக்கு கிடைக்கச் செய்தவர். இந்த மாதிரி லாபிகள், அல்ப அரசியல் செய்து விருது வாங்குவதை ரஜினி விரும்பியதில்லை. அதற்காக எல்லா நேரத்திலும் இப்படி லாபிகள் செய்கிறார்கள் என்றும் நாம் சொல்ல வரவில்லை.  சில கலைஞர்கள் தங்கள் சொந்த திறமையால் மட்டுமே விருதுகளை வென்றுள்ளனர்.

இந்திய இசையை உலக அளவுக்கு எடுத்துச் சென்ற இசை மாமேதை கிஷோர் குமாருக்கு கடைசி வரை தேசிய விருது தரப்படவில்லை. அவர் குரலுக்கு எத்தனை கோடி ரசிகர்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருக்கு விருது வழங்கப்படாததற்கு காரணம், இந்திரா காந்தி  காலத்தில் நெருக்கடி நிலையை எதிர்த்துக் கொடுத்ததால்.

சிவாஜி கணேசனுக்கு கடைசி வரை சிறந்த நடிகருக்கான விருது தரப்படவே இல்லை.

உள்ளூர் விருதுகள் பற்றியோ, அதை வழங்குபவர்களின் தரம் பற்றியோ கவனத்திலேயே கொள்வதில்லை ரஜினி. எவ்வளவு உயர்வான விருதாக இருந்தாலும் அது தனக்கு வேண்டாம் என்று மறுத்தே வந்திருக்கிறார். பல ஆண்டுகள் சினிமா எக்ஸ்பிரஸ், தினகரன் போன்ற விருதுகளை மறுத்துவிட்டவர் ரஜினி (இப்போது அந்த விருதுகளே இல்லை!).

அதே நேரம் திரையுலகில் யார் விருது பெற்றாலும் அவர்களை முதலில் பாராட்டுபவர் ரஜினிதான்.

“அவர்கள் முன் பின் தெரிந்த, தெரியாதவர்கள் யாராகவும் இருக்கலாம். ஆனால் ரஜினி சார் அதையெல்லாம் பார்க்க மாட்டார். என்னிடமோ, வேறு பிஆர்ஓக்கள் மூலமோ, சம்பந்தப்பட்ட நபர்களின் தொலைபேசி எண் பெற்று தானே போனில் அழைத்துப் பாராட்டுவது ரஜினி சார் ஸ்டைல்!” என்கிறார் பிரபல பிஆர்ஓவான நிகில் முருகன்.

சுரேஷ் கிருஷ்ணா… உங்கள் கேள்விகளுக்கான பதில் கிடைத்துவிட்டிருக்கும் என நம்புகிறோம்!

தொடரும்…
18 thoughts on “ரஜினிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? – கேள்வி பதில்-4

 1. prakash

  Thanks Vino. Ennae than irunthalam thalaivarukku best actor national award ithu naal varaikkum kidaikathathu varutham mae. I expected a lot for thalapathi but unfortunately missed and now hoping for Sivaji guessing that still they havent anounced award for the year 2007.

 2. vivek

  prakash…! if rajni was worked for cong,dmk alliance he will get award for shivaji….

 3. prashanthan

  அவருக்கு தேசிய விருது குடுக்கிறதுக்கு அவர் எந்த நல்ல படத்துல நடிச்சு இருக்குறாரு??? எல்லாம் முத்துராமன் இயக்கிய படு மசாலா படதுலதானெ அவர் நடிச்சு இருக்கிறாரு….
  அவர்ட சினிமா வாழ்க்கையில ஒரு 10 படங்களைதான் சிறந்த படமாக எடுக்க முடியும் .. மற்றவை எல்லாம் குப்பைத்தொட்டி

 4. Suresh கிருஷ்ணா

  நன்றி வினோ… என் கேள்விக்கு இத்தனை முக்கியத்துவம் தந்ததற்கு…

  ஒரு வேண்டுகோள்…

  prashanthan – இந்த மாதிரி கருத்துக்களை தயவு செய்து வடிகட்டிவிடுங்கள்!

  -Suresh கிருஷ்ணா

 5. Kamesh

  HI Vino

  NIce to see your post (appada vanthudichu) waiting for others to follow

  Kamesh

 6. BaijuBalakrishnan,Bangalore

  Hi Mr.Prashanthan,

  Intha mathiri Chumma Rasikarkalai kopapadutha vendam….

  Ungaluke thalaivar mela mariyathai irukum anal chumma ippadi comments panni

  oru paithiyakara thanamana Advertisement thedikavendiyathu….

  Ithu Thalaivaroda rasigarkalin .com so nangalum porumaiyaga athai nirubikirom..

  Matra rasigar perumakkale….nanbargale Mr.Prashanthan pondravargalin

  pithatralai yarum perithu padutha vendam….kandukollamal vitu parungal

  ivargalai pondravargal thanaga thirunthi viduvargal….

  Ellam Oru Suya Vilambaram Than Nabargaleee asaipaduranga vitruvom anubhavichutu

  pogatum namaku ithellam satharnam..Thalaivare ithupondra pala vittil

  poochigalai parthirupar namalum athaipol vittuvidalam…

 7. prashanthan

  BaijuBalakrishnan,Bangalore அவர்களே ! எனக்கு எந்த சுய விளம்பரங்களும் தேவை இல்லை … நான் ஒன்றும் சினிமா நடிகனோ … இல்லை அரசியல் வாதியோ இல்லை … சுய விளம்பரம் தேடுவதற்க்கு… நான் சராசரி தமிழ் சினிமா ரசிகன் அவ்வளவே ….. உங்கள் பார்வையில் நான் விட்டில் பூச்சியாகவே இருந்து விடுகிறேன் ….

 8. Bhuvanesh

  பிரசாந்த் அண்ணே, ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு கமெர்சியல் படத்துக்கு அவார்ட் கொடுத்து சர்ச்சை ஆச்சு தெரியுமா?? தலைவர் நடிச்சது எல்லாம் கமெர்சியல் படம் தான்.. அதான் இங்க பேசறாங்க..

 9. dev

  who is this prasanthan, does not know to evaluate the movie which our thailavar acted so far. Do not post deteriorating message whoever inslut our thailavr.

  Dev

 10. BaijuBalakrishnan

  Mr.Prashanthan,

  Mikka Nandri annan Prashanthan Avargale appadiyanaal Ungal paarvaiyil Engal

  Thalaivar Ondrum 100% superhit padangalai kodukathavarai irunthutu podatum…

  Engal Parvayil avar eppadi endru nangal parthukolgirom annan Mr.Prashanthan

  avargale..Ungalai pondru sooriyanai kaiyal ellam engalukku maraikira alavukku

  Thiramai illinganna..Meendum Orumurai mikka Nandriudan vidai perukiren annan

  Mr.Prashanthan, Avargale!!!!!!!!!!

  (Oru pathu padamellam pathutu Karuthellam solla varathinganna….நான் சராசரி தமிழ் சினிமா ரசிகன் vera solluringanna athuthan thangamudiyalai…)

 11. harisivaji

  vitil poochinu solatheenga
  athunga kochuka poguthu

  Mr.prashanthan
  ———————————–
  ———————————–

  nanpargal ketukondapadiyaal amaithya thitren
  rajiniku makkal kodutha award tamilnaatin superstar
  athavida vera ethuvum engalukum perusi illa
  rajinikum perusilla

 12. Raja

  Please note..rajini has ACCEPETED many awards from tamilnadu government, cinema express awards..

  PS:I am rajini fan

 13. prashanthan

  Mr . BaijuBalakrishnan
  ha ha ha ha hah aaaaaaaa நான் ஒன்னும் 10 படம் பார்த்துட்டு பேசல….
  நான் எந்த நடிகனும் சாராத ரசிகன் அவ்வளவே…..
  உங்க தலைவரின் நடிப்பு திறமையை பற்றி விவாதம் செய்யவில்லை .. அவர் சிறந்த நடிகர்.. அதில் மாற்று கருத்து எதுவும் கிடையாது … ஆனால் தேசிய விருது கிடைக்கின்ற அளவுக்கு அவர் நடித்த படங்கள் அவர் வாழ் நாளில் குறைவு. அதுதான் என்னுடைய கருத்து .. உங்கள் கருத்து எதுவானதாகவும் இருக்கட்டும் . அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் … நன்றிங்கோ……

 14. vasi.rajni

  நண்பர்களே விட்டு தள்ளுங்கள் . மகாத்மா காந்தியையே போலியானவர் என்று சொன்னவர்களுக்கு மத்தியில் நம்முடைய தலைவரின் அருமையை விளக்க முடியாது . இதுநாள் வரை தலைவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று துளியும் நன் வறுத்த பட்டது கிடையாது . தலைவர் DR பட்டதையே ஒதுக்கி தள்ளியவர் , தேசிய விருதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல …

  rajini will rule tamil nadu

 15. ram

  ya sure i too accept rajinikanth has done great movies in his early career i’m one such fan of him who feels for him that such a good actor who has done movies like bhuvana oru kelvikuri,6il irundhu 60 varai ,mullum malarum etc. has been turned to do movies like sivaji and all. A good talent spoiled . I want to stress what great director Mr. MAHENDRAN said “IF RAJINI CHANGES ITS GOOD FOR TAMIL CINEMA”.I like to see old rajini again

 16. Mariappan

  raumannukku viruthu கிடைத்த முறை பற்றி தெரியும் என்பதால் தான் தலைவர் விருதுகளை விரும்புவதில்லை என்று நினைக்கிறேன்.

 17. rasigan

  மாரியப்பா ஐயா
  எதுக்கு தேவையில்லாம ரஹ்மான வம்புக்கு இழுக்குறீங்க ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *