BREAKING NEWS
Search

ரஜினியுடன் நடித்தது மகிழ்ச்சி-பெருமைக்குரியது! -அமலா

ரஜினியுடன் நடித்தது மகிழ்ச்சி-பெருமைக்குரியது! -அமலா

ன் நடிப்பு வாழ்க்கையில் பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்தவை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த நாட்கள்தான். இப்போது நடிப்பிலிருந்து விலகியபிறகு, சமூக சேவையில் அதிக மகிழ்ச்சியைக் காண்கிறேன் என்கிறார் நடிகை அமலா.amala

ரஜினியுடன் வேலைக்காரன், கொடிபறக்குது, மாப்பிள்ளை போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் அமலா. இப்போது மிருக வதைக்கு எதிராக குரல் கொடுக்க களமிறங்கியுள்ளார்.

ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த, விலங்கு வதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில் நேற்று நடிகை அமலா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:

நடிப்புக்கு முழுக்குப் போட்ட பிறகு பல்வேறு பயனுள்ள விஷயங்களைச் செய்து வருகிறேன். இதற்கு என் கணவர் நாகார்ஜுனாவும் உதவியாக உள்ளார்.

என் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியான நாட்கள் ரஜினியுடன் நடித்தவைதான். மிகப் பெருமையாகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகவும் அவற்றைக் கருதுகிறேன்.

ஆனால் நடிப்புக்கு முழுக்குப் போட்ட பிறகு, சமூக சேவையில் ஈடுபடுவதில் அதிக மகிழ்ச்சியை உணர்கிறேன். குறிப்பாக மிருக வதைக்கு எதிராக குரல் கொடுப்பதில் தீவிரமாக உள்ளேன்.

r110

ஒரு ப்ளாஷ்பேக்!

காரணம் நம் நாட்டில் விலங்குகளை வதைப்பது அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க புளுகிராஸ் அமைப்பு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

நம் நாட்டில் மாடுகளை உழவுக்குப் பயன்படுத்துகிறார்கள். அப்போது மாடுகளை கம்பால் அடித்தும் ஊசியால் குத்தியும் சித்ரவதை செய்கின்றனர். எனவே மாடுகளை உழவுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இதேபோல் சில சர்க்கஸ் நிறுவனங்களில் குரங்கு, யானை, நாய், கரடி, புலி போன்ற விலங்குகளை பயன்படுத்துகிறார்கள். அந் நிறுவனங்கள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்கு புளுகிராஸ் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது, என்றார் அமலா.




7 thoughts on “ரஜினியுடன் நடித்தது மகிழ்ச்சி-பெருமைக்குரியது! -அமலா

  1. கிரி

    //நண்பர்களே…
    உலகின் முன்னணி இணைய தளங்களுள் ஒன்றான http://www.oneindia.in மொழிகள் பிரிவில் நமது தளமும் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதுகுறித்த விவரம் விரைவில்…
    நன்றி!
    -ஆசிரியர்
    என்வழி.காம்//

    வாழ்த்துக்கள் வினோ 🙂

  2. R.Gopi

    //உலகின் முன்னணி இணைய தளங்களுள் ஒன்றான http://www.oneindia.in மொழிகள் பிரிவில் நமது தளமும் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.//

    “தல” வாழ்த்துக்கள்………

  3. asfar

    வாழ்த்துக்கள் வினோ

    anyhow Super Start would be happy better than you regarding the new “உலகின் முன்னணி இணைய தளங்களுள் ஒன்றான http://www.oneindia.in மொழிகள் பிரிவில் நமது தளமும் சேர்க்கப்பட்டுள்ளது ”

    Greeting

  4. BaijuBalakrishnan,Coimbatore/Bangalore,

    மிகவும் பெருமையாக உள்ளது…வினோ…..

    மேலும் பல பெருமைகளை உரித்தாக்கிக்கொள்ளவும்….

    பல அரிய‌ ப‌டைப்புகளை என்வழி.காம் வழங்கவும் வாழ்த்துக்கள்…

    நன்றி!

    பைஜூபாலகிருஷ்ணன்.

  5. r.v.saravanan

    உலகின் முன்னணி இணைய தளங்களுள் ஒன்றான http://www.oneindia.in மொழிகள் பிரிவில் நமது தளமும் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    CONGRATULATIONS VINO

    VELAIKARAN PADATHIL VARUM VAA VAA VAA KANNA VAA ENAKKU PIDITHA PADAL.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *