BREAKING NEWS
Search

ரஜினியுடன் ஒரு ஸ்டன்ட் கலைஞரின் அனுபவம்!

ரஜினியுடன் ஒரு ஸ்டன்ட் கலைஞரின் அனுபவம்!

ஜினி திரையில்தான் சூப்பர் ஸ்டாரே தவிர, நிஜத்தில் அவரைப் போல எளிய மனிதரைப் பார்ப்பது கடினம். பந்தா இல்லாமல் பழகுவார் என்கிறார் கராத்தே ரமேஷ்.

வேலூர்க்காரரான ரமேஷ், ஒரு ஸ்டன்ட் கலைஞர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 1200 படங்களில் பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

வேலூரிலும், திருவண்ணாமலை, அரக்கோணம், சென்னை ஆகிய பகுதிகளிலும் 70 இடங்களில் கராத்தே பயிற்சிப் பள்ளிகளை நடத்தி வருகிறார்.

தனது திரையுலக அனுபவங்களை தினமணி நாளிதழில் பகிர்ந்து கொண்ட அவர், சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து இப்படிக் கூறுகிறார்:

“ரஜினி சாருடன் பாபா படத்தில் நடித்த போது ஏற்பட்ட ஓர் அனுபவம் மறக்க முடியாதது. ரஜினி ஷூட்டிங் இடைவெளியில் ஓர் இடத்தில் தனியாக உட்கார்ந்திருந்தார். நான் அவரைப் பார்க்கப் போனேன். அவருடைய தனிப்பட்ட பாதுகாவலர்கள் அவரிடம் என்னைப் போகவிடாமல் தடுத்துவிட்டனர்.

அதைப் பார்த்த ரஜினி சார் அங்கிருந்து வந்து அவர்களைக் கடுமையாகக் கண்டித்தார்.

“உங்களை ரெண்டு வருஷத்துக்கு முந்தித்தான் தெரியும். ஆனால் ரமேஷை ரொம்ப நாளாக எனக்குப் பழக்கம்” என்றார்.

என்னை எப்போது பார்த்தாலும் எனது குடும்பத்தினரைப் பற்றி விசாரிப்பார். பெரிய சூப்பர் ஸ்டார் என்றாலும் அந்தப் பந்தா எதுவுமில்லாமல் பழகுவார் அவர்…” என்கிறார்.

எந்திரன் படத்திலும் இவரது பங்களிப்பு உள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு ரஜினி கராத்தே கற்றுத் தருவது போல சில காட்சிகள் வருகின்றனவாம். அந்தக் காட்சிகளில் கராத்தே மாஸ்டராக இருந்து சொல்லிக் கொடுத்தவர் ரமேஷ்தானாம். இதுபற்றிய செய்திகள் சில மாதங்களுக்கு முன்பு நாளிதழ்களில் வெளியாகியிருந்ததைப் பார்த்திருக்கலாம்.

அது குறித்து ரமேஷ் கூறுகையில், “ஐஸ்வர்யாராய் அவ்வளவு சீக்கிரம் யாருடனும் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளமாட்டார். எந்திரன் படத்துக்காக அவருக்குக் கராத்தே கற்றுக் கொடுத்ததால் அவரே என்னைக் கூப்பிட்டுப் பக்கத்தில் நிற்க வைத்துப் போட்டோ எடுத்துக் கொண்டார். இது எனக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது…” என்கிறார்.

ரமேஷ் ஏற்கெனவே நீறு பூத்த நெருப்பு எனும் படத்தில் நாயகனாக நடித்தவர். ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு கதாநாயகனாக வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். அதற்காக அப்படியே இருந்தால் வேலைக்காகாது என்பது புரிந்து, கிடைத்த வாய்ப்புகளைப் பற்றிக் கொண்டு, இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.

“என்னைப் பொருத்தவரையில் நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று கிடைக்காத வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருப்பது தவறு. நமக்குக் கிடைக்கும் வாய்ப்பு எதுவோ அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் ‘நீறு பூத்த நெருப்பு’ படத்தில் கதாநாயகனாக நடித்தேன்.

ஆனால் அதற்குப் பின்பு எனக்குக் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதற்காக நான் மனம் சோர்ந்து போகவில்லை. ஸ்டண்ட் நடிகராக என்னை மனதளவில் தயார்ப்படுத்திக் கொண்டேன்.

இன்று திரையுலகில் உள்ள பெரிய பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமை’, என்கிறார்.

அனுபவ மொழி!




One thought on “ரஜினியுடன் ஒரு ஸ்டன்ட் கலைஞரின் அனுபவம்!

  1. r.v.saravanan

    பாதுகாவலர்கள் அவரிடம் என்னைப் போகவிடாமல் தடுத்துவிட்டனர்.

    அதைப் பார்த்த ரஜினி சார் அங்கிருந்து வந்து அவர்களைக் கடுமையாகக் கண்டித்தார்.

    “உங்களை ரெண்டு வருஷத்துக்கு முந்தித்தான் தெரியும். ஆனால் ரமேஷை ரொம்ப நாளாக எனக்குப் பழக்கம்” என்றார்.

    இது இது தான் ரஜினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *