BREAKING NEWS
Search

‘ரஜினியுடன் அடுத்த படம் உறுதி’… குதூகலத்தில் சத்யா மூவீஸ்!

‘ரஜினியுடன் அடுத்த படம் உறுதிதான்’… குதூகலத்தில் சத்யா மூவீஸ்!

ஜினியும் ஆர்எம்வீயும் இன்னும் வாய்திறந்து எதுவும் அறிவிக்கவில்லை. ஆனாலும் சத்யா மூவீஸுக்கு இப்போதே ஏகப்பட்ட விசாரிப்புகளாம், ‘வாழ்த்துக்கள், சூப்பர் ஸ்டார் படம் பண்றாராமே உங்களுக்கு’ என்று.

முக்கியமானவர்களிடம் மட்டும் ‘விஷயம் உண்மைதான். உங்களோட இருக்கட்டும்’, என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால் வெறும் கோடம்பாக்க நாயகனா ரஜினி…? இன்றைய தேதிக்கு ரசிகர்கள் வைத்துள்ள உலக சூப்பர் ஸ்டார் பட்டம்தான் அவருக்கு மிகப் பொருத்தமானது என்கின்றன அவரைப் புரிந்து கொண்ட பத்திரிகைகள்.

எனவே ரஜினி ஒரு படம் பற்றி மூச்சு விட்டாலே அது இனி சர்வதேச அளவில் பெரிய செய்தி என்பதால், இந்தி, தெலுங்கு மீடியாக்கள் இப்போதே, ‘ரோபோவுக்கு அடுத்து எப்படிப்பட்ட பிரமாண்டத்தை ரஜினி தருவார்?’ என்று கேட்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஹரி இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது இன்னும் உறுதியாகவில்லை என்கிறார்கள். இதுவரை இந்தப் படத்தின் இயக்குநர் இவர்தான் என்பதை முடிவு செய்யவில்லையாம் ரஜினியும் ஆர்எம்வீயும்.

திரைக்கதை அமைப்பில் மகா திறமைசாலியான ஆர்எம் வீரப்பன் சொல்லியிருக்கும் ஒரு கதை பிடித்துப் போனதால், அதை டெவலப் செய்யச் சொல்லியிருக்கிறார் ரஜினி என்கிறார்கள்.

இமயமலைக்கு கிளம்புகிற தேதிக்கு முந்தைய தினம் ஆர்.எம்.வீரப்பனை அவரது அலுவலகத்துக்கே போய் ரஜினி சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

முன்பே பேசி வைத்தது போல தனது அடுத்த பட கால்ஷீட்டை சத்யா மூவிசுக்கே தருகிறேன் என்று கூறினாராம். இமயத்திலிருந்து திரும்பி வருவதற்குள் கதை கேட்டு முடிவெடுத்திருந்தால் படத்தை தொடங்கிவிடலாம் என்ற உத்தரவாதத்தையும் ஆர்எம்வீ யிடம் ரஜினி கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் பல படங்களை உருவாக்கிய இந்நிறுவனம், அவருக்குப் பிறகு அதிக படங்கள் தயாரித்தது ரஜினியை வைத்துதான்.

‘எம் மகன்’ படத்தை தனது மருமகன் சத்யஜோதி தியாகராஜனுடன் இணைந்து தயாரித்த சத்யா மூவீஸ், அதன் பிறகு தயாரிப்பில் இறங்காமல் அமைதி காத்து வந்தது. இப்போது மீண்டும் ரஜினி படத்துடன் களமிறங்க உள்ளது. ரஜினி வந்ததும் அடுத்த தீபாவளிக்கான ஆயத்தங்களில் இறங்கிவிடும் சத்யா மூவீஸ் என்பதுதான் கோடம்பாக்கம் முழுக்க பேச்சு!
21 thoughts on “‘ரஜினியுடன் அடுத்த படம் உறுதி’… குதூகலத்தில் சத்யா மூவீஸ்!

 1. santhosh

  திரைக்கதை அமைப்பில் மகா திறமைசாலியான ஆர்எம் வீரப்பன் —- பாட்ஷா படத்தின் இவரது பங்கு நிறைய உள்ளது…..

  மீண்டும் ஒரு தீபாவளி….. ரசிகர்களுக்கு …………..

  சேதிய சொல்லிய விநோஜி நன்றி …..

 2. Rasigan

  While I am elated at this news. As you said Rajini Sir after Robot has reached a different status. One cannot recycle old style movies, one has to keep his global audience in mind.
  I hope thailavar will make the right decision. With due respects to Dir. Hari, he is nowhere in the league of Dir.Shankar and others..

 3. eppoodi

  சூப்பர்……………………… ஹரிக்கு பதில் கே.எஸ்.ஆர் அல்லது முருகதாஸ் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும், p.வாசு மட்டும் வேண்டவே வேண்டாம்.

 4. Kicha

  //கிரி says:
  October 13, 2010 at 5:19 am

  யப்பா! நல்ல வேளை சன் டிவி இல்ல 🙂 //

  சூப்பர் கமெண்ட்.

  நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க வினோ. Thanks

 5. Manoharan

  ரஜினியை இயக்கம் அளவுக்கு இங்கு இயக்குனர்கள் இல்லை. ரவிக்குமார், ஹரி எல்லாம் ரஜினியின் இப்போதைய உலகளாவிய இமேஜிற்கு ஒத்து வரமாட்டார்கள். சுரேஷ் கிருஷ்ணா வேண்டுமானால் ஒத்து வருவார். ஆனாலும் டெக்னிக்கல் டீம் நன்றாக இருக்க வேண்டும். ரகுமான் இசை வர வர சரில்லை. வித்யாசாகர் ஓகே. கதாநாயகியாக லோக்கல் ஆளெல்லாம் எடுபடாது. திபிகா படுகோன் ஒகே.

 6. Sathish

  Suresh krishna is out of form now (Arumugam parthuma ippdi solreenga !!!!).
  I go with eppoodi….Murugadoss is the right choice. Next to Shankar he is the capable director in Tamil cinema.

 7. முத்து

  எனக்கு என்னவோ படம் எல்லாம் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சன் பிக்சர்ஸ் இதையும் எந்திரன் மாதிரி வாங்கிடுவாங்கன்னு தான் தோணுது. ஏன்னா, இன்னைக்கு சன்னுக்கு உலக அளவில் தங்களை இன்னும் கொஞ்சம் ஸ்திரமாக வளர ரஜினி போன்ற ஒரு Canvaas வேண்டும். ரஜினிக்கும் அடுத்த கட்டத்திற்கு போக சன் போன்ற ஒரு Vehicle வேண்டும். இவ்வளவு பிரமாண்டமான எந்திரனுக்கு பிறகு ரஜினி என்னும் பிம்பத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கும். அதை சத்யா மூவீஸ் ஈடு செய்ய பணம், அதிகாரம், உலகளாவிய marketing network எல்லாம் தேவைப்படும். சத்யா மூவீசால் அது முடியுமா என்பது கேள்விகுறி.

  ‘சின்னத் தம்பி’ யின் பிரமாண்டமான வெற்றிக்கு பின் பிரபுவுக்கு ஏற்பட்டதும் இந்த நிலை தான். அது அடுத்த படங்களில் சரியாக click ஆகி இருந்தால் பிரபுவும் top starகளில் ஒருவராக ஆகி இருப்பார்.

  ஒரு உறுத்தல்: எந்திரன் பட விளம்பரங்களில் “சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்” என்று கொட்டை எழுத்துக்களில் போட்டு, அதற்க்கு கீழே “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர், ஏ ஆர் ரகுமான்” என்று மிக சின்ன எழுத்துக்களில் ஒரே அளவில் போட்டு இருப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பாரம்பரியமிக்க ஏ.வி.எம் கூட இதை செய்ததில்லை. ஆனால் நேற்று முளைத்த சன், 35 வருட திரையுலக சக்கரவர்த்தியான ரஜினிக்கு இதை செய்திருக்க வேண்டாம். யார் தயாரித்தாலும், இயக்கினாலும், இசை அமைத்தாலும் ரஜினியின் படம் ரஜினி என்ற ஒரு மந்திர அச்சாணியில் தான் சுழல்கிறது. தன் அடுத்த கட்ட நகர்வில் ரஜினி மிக விழிப்புடன் இருக்க வேண்டிய காலகட்டமிது.

 8. anand

  தல விநோஜி

  என்னுடைய கருத்து என்னவென்றால்,

  எந்திரனை தலைவரே தயாரித்து இருக்க வேண்டும்.

  இந்த பாடாவதி சன் தொல்ல தாங்க முடியவில்லை.

  ஆனந்த்
  பமாகோ,மாலி

 9. நிர்மலராஜ்

  “எனக்கு என்னவோ படம் எல்லாம் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சன் பிக்சர்ஸ் இதையும் எந்திரன் மாதிரி வாங்கிடுவாங்கன்னு தான் தோணுது.”

  இதில் என்ன ஆச்சரியம். அவர்களோ, அல்லது அவர்களின் உறவினர்களின் ஏதாவது ஒரு நிறுவனமோ, இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவார்கள் என்பது இப்போதே தெரியாதா என்ன!!!

 10. Prasath

  No More Baashas please…after having films like sivaji and enthiran, we dont want to see SS in any masala roles…More over the directors we have at present is not that much capable as shankar in telling the story with technical details…! baasha kind of story might not work out in the current trend.. thaliava please rethink about thisssssssssssss…..

  Another qn is since sathya movies is not well financially strong, they should not compensate on quality …like poor graphics, poor location / sets ….artist selection

 11. SASI

  எல்லா படைப்பும் எந்திரன் மாதிரி வர ஆசை பட கூடாது. யாராவது KHABI குஷி KAABHI KHAM ஹிந்தி படம் பார்த்திங்கள ? , எனக்கு கிடைத்த நியூஸ் , அந்த ஹிந்தி படம் தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள் ,
  டைரக்டர் : ஹரி
  அமிதாப் கேரக்டர்: சூப்பர் ஸ்டார்-1 ஜோடி : நதியா (ஜெயா பச்சன் )
  ஷாருக் கேரக்டர்:: சூப்பர் ஸ்டார்-2 ஜோடி : தீபிகா படுகோனே (கஜோல்)
  ஹிர்திக் கேரக்டர்: அஜித் (NOT CONFORMED ) ஜோடி : அனுஷ்கா/தமனா (கரீனா)
  VERY GOOD FAMILY SUBJECT
  நிறைய POLITICS மேட்டர்

  ( நியூஸ் நம்ப தகுந்த இடத்தில இருந்து )

  ஸ்பெஷல் நியூஸ் : DEC-12TH எல்லா FANSUKKUM ஒரு இன்ப அதிர்ச்சி……………

 12. karthik

  call A.R.Murugadoss for direction or call some hollywood directors to direct a tamil film with rajini..

 13. Murali

  Sasi,

  என்னங்க ஒரே suspensa சொல்லிட்டு போயிட்டீங்க, யாரவது கொஞ்சம் அவர் சொன்ன மேட்டரை இன்னும் விவரமா சொல்லுங்கப்பா.

 14. Kurangan

  தலைவர் படங்களின் மணிமகுடம் பாட்சா அதை விஞ்சும் வகையில் ஒரு தலைவர் படம் அவர் நடிப்பில் வேண்டும்

 15. noushadh

  @சசி:
  எனக்கு தெரிந்து கபி குஷி கபி கம்-ல் சாருக்கான் தத்துப்புதல்வன். அப்படி இருக்கும்போது டபுள் ஆக்ட் எப்படி சரியாக வரும்? இது ஒரு தவறான வதந்தியாக இருக்கவே வாய்ப்புண்டு.

 16. Paul

  In Sivaji function, S* told “Shankar is trying to bring Tamil cinema to world cinema level, I know its difficult( You have to see his body language) but he is trying”. It has turned out to be true.

  Now in Endiran tailor release function he told “The next movie is something that Tamils can be proud of them self”. I really do not know the meaning of his statement if Khabi Kushi gets finalized. Anything could happen and no one could predict his moves!

 17. Prasath

  SuperStar has now gone to a different level and the next film should be made keeping that fact in mind…The story should not be made keeping just TN in mind, but also AP,KN, North, Overseas etc.

  His fame has gone beyond words now and every movie that SS makes on here would be watched or discussed widely. anything slight fall on expectations would be a real mess, as still the producers would try to it out huge (with the same mode of sivaji and enthiran)….

  Also SS told in kuselan function that, “மலையியே புரட்டியாச்சு .. இப்பபோய் பாராங்கல்ல தூக்கினா சரியாவருமான்னு ” ..Similarly on Enthiran trailer, he said what ever he makes from here on would make all tamils proud”

  So i am hoping that he wont make calls to masala directors like Vasu, KSR, Hari etc…

 18. r.v.saravanan

  குட் நியூஸ் வினோ புதிய படத்தை பற்றி அறிய ஆர்வம் அதிகமாகிறது கிரி சொல்வது கரெக்ட்

 19. Manoharan

  @ சசி.
  இரண்டு ரஜினி, நதியா, தீபிகா , அருமையான கதை, இது கேட்கறதுக்கு நன்றாக இருக்கிறது. ஆனால் உண்மையா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *