BREAKING NEWS
Search

ரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா!!


சென்னை: ஹாலிவுட் படங்களைப் பின்னுக்குத் தள்ளி ரூ 500 கோடியை முதல் வாரத்தில் ரஜினியின் 2.0 படம் வசூலித்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா நிறுவனம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் ரூ 500 கோடிக்கு மேல் செலவழித்து உருவாக்கிய படம் 2.0.

இந்தப் படம் கடந்த வியாழன் அன்று உலகெங்கும் 15000 அரங்குகளில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியானது. அனைத்து மொழிகளிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தியில் டப் செய்யப்பட்ட இந்தப் படம் முதல் 5 நாட்களில் ரூ 111 கோடிகளைக் குவித்து புதிய சாதனைப் படைத்தது.

தமிழில் இதுவரை எந்தப் படமும் செய்யாத அளவுக்கு ரூ 125 கோடியைக் குவித்தது. அனைத்து ஏரியாக்களிலுமே 2.0 வசூலில் புதிய சாதனையை உருவாக்கியுள்ளது.

இந்தப் படம் முதல் வாரத்தில் மட்டும் உலகெங்கும் ரூ 500 கோடியை வசூலித்துள்ளது. லைகா நிறுவனம் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக விளம்பரமாகவே வெளியிட்டுள்ளது.

இதுவரை பாகுபலி உள்ளிட்ட எந்தப் படத்துக்குமே அதன் தயாரிப்பாளர்கள் உண்மையான வசூல் விவரத்தை வெளிப்படையாக சொன்னதில்லை. திரையுலகினர் வெளியிடும் தகவல்களை வைத்தே வசூல் நிலவரம் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வசூலை அறிவித்திருப்பது இதுவே முதல் முறை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *