BREAKING NEWS
Search

விளக்கினார் ரஜினி… விலகுகிறார் அமிதாப்?

ரஜினியின் விளக்கமும் அமிதாப் குடும்பத்தின் விலகலும்!

லங்கையில் நடக்கவிருக்கும் சர்வதேச இந்தியப் பட விழாவில் அமிதாப் குடும்பத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அவர்களின் இந்த முடிவுக்கு சூப்பர் ரஜினி முக்கிய காரணம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்துக்கே பிள்ளையார் சுழி போட்டவர்கள் ரஜினியும் கமலும்தான்.

இலங்கைத் தூதரகத்திலிருந்து அழைப்பிதழ் என்ற தகவல் தெரிந்ததுமே அதனை முதலில் நிராகரித்தவர்கள் இவர்களே.

இந்த செய்தியறிந்து சட்டென்று சுதாரித்துக் கொண்டனர் தமிழ் திரையுலகினர்.

விஷயம் அரசியல் உலகில் பரவியதும் வைகோ, பழ நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் ரஜினிக்கும் கமலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டனர்.

சீமானின் நாம் தமிழர் இயக்கம் மும்பையில் அமிதாப் வீடுகளை முற்றுகையிட, அவரும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துப் பேசினார்.

விழா ஏற்பாட்டாளர்களையும் நாம் தமிழர் இயக்கத்தினருடன் பேச வைத்தார். தமிழர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் முடிவெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த அமிதாப், தனது நெருங்கிய நண்பரான ரஜினியிடம் இதுகுறித்து விரிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் மீது தமிழ் ரசிகர்கள் வைத்துள்ள மதிப்பு, குறிப்பாக ஐஸ்வர்யா ராய் இந்த நேரத்தில் கொழும்பு செல்வது எத்தகைய விளைவுகளை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்பதையெல்லாம் எடுத்துக் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினை, வன்னிப் போரின் போது இங்கு திரையுலகம் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்தும் ரஜினி கூறியதாகத் தெரிகிறது.

மேலும் மணிரத்னம் தரப்பிலிருந்தும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரச்சினையின் தன்மையைப் புரிய வைத்துள்ளனர்.

இதன் விளைவாக அமிதாப் குடும்பத்தினர் கொழும்பு விழாவுக்கு செல்லாமல் புறக்கணிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்த விழாவில் சிறப்புக் காட்சியாக ராவணன் படத்தைத் திரையிட திட்டமிட்டிருந்த மணிரத்னம், இப்போது அதனை கைவிட்டுள்ளார். இலங்கை விழாவுக்கும் ராவணன் படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது!

நன்றி: தட்ஸ்தமிழ்
12 thoughts on “விளக்கினார் ரஜினி… விலகுகிறார் அமிதாப்?

 1. sakthivel

  ஆயிரக்கணக்கில் நடந்த கொலைகளை மூடிமறைத்த வடஇந்திய மீடியாக்களுக்கு இது கசப்பான செய்தி.
  அனாலும், இந்திய முட்டாள் மத்தியஅரசு இந்தவிழாவை நடத்தியே தீரும் என்பதும் கசப்பான உண்மை.

 2. Manoharan

  அமிதாப்பின் இந்த முடிவு நிச்சயம் ஆங்கில மற்றும் வட இந்திய மீடியாவில் எதிரொலிக்கும். இது ராஜபக்ஷெவுக்கும் அவமானம்தான். அமிதாப் குடும்பத்தினர் பங்கேற்க்காவிட்டால் இந்த விழாவுக்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்காது.

 3. Tom

  /***மேலும் மணிரத்னம் தரப்பிலிருந்தும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரச்சினையின் தன்மையைப் புரிய வைத்துள்ளனர்.
  இந்த விழாவில் சிறப்புக் காட்சியாக ராவணன் படத்தைத் திரையிட திட்டமிட்டிருந்த மணிரத்னம், இப்போது அதனை கைவிட்டுள்ளார்.***/

  What a contradiction!!!

 4. Mugundan

  அமிதாப் அவர்களுக்கு மிக்க நன்றி..நீங்கள் தமிழர்கள் மனதில் என்றும் நிலைத்து இருப்பீர்கள்.

 5. M.Mariappan

  THALAIVAR IS GREAT . தலைவர் வழியை அமிதாப்பும் மச்சும் அவரது குடும்பத்தினர் அனைவரும் பின் பச்சி இலங்கை பட விழாவுக்கு போக மாட்டார்கள். அந்த அளவுக்கு தலைவர் பேசி புரிய வைத்துள்ளார் . வாழ்க தலைவர் புகழ்

 6. r.v.saravanan

  இலங்கையில் நடக்கவிருக்கும் சர்வதேச இந்தியப் பட விழாவில் அமிதாப் குடும்பத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

  அவர்களின் இந்த முடிவுக்கு சூப்பர் ரஜினி முக்கிய காரணம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  நன்றி….நன்றி

 7. குமரன்

  தலைவர் ரஜினின்ன ரஜினிதான்.

  அமிதாப்புக்கு நன்றி.

 8. patrick

  it is not because of rajini or rajapakse , it may be also because of financial concern behind that , :in ethiran ash is acting and ravan also going 2 release ……..

 9. eelam tamilan

  Hi all guys, Now SL government minister informed in press meeting that indian team including all these guys will participate.. no one can block them…:-)

  Hi our rajani fans,
  Did now rajani informed to reverse the decision…? You all guys dream and make big thing… We will see what going to happen…

 10. raja

  patrick சொன்ன கருத்தை நான் அமோதிக்கிறேன்.அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *