BREAKING NEWS
Search

ரஜினியின் மாப்பிள்ளை படத்தை ரீமேக்கும் தனுஷ்!

ரஜினியின் மாப்பிள்ளை படத்தை ரீமேக்கும் தனுஷ்!

கோடம்பாக்கத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ரஜினி பட ஷூட்டிங்தான். அவரே நடித்தால்தானா… அவர் பெயரை அல்லது அவரது தலைப்பைப் பயன்படுத்தி உருவாகும் படங்கள்தான் இன்றைக்கு பரபர  படப்பிடிப்பில்  உள்ளன.

mapillai

அந்தப் பக்கம் முரட்டுக்காளை, இந்தப் பக்கம் குருசிஷ்யன்,… இதற்கெல்லாம் மேல், ரஜினியே நடிக்கும் எந்திரன் மற்றும் சுல்தான்…

ரஜினி எப்போதும் ஒன்மேன் இண்டஸ்ட்ரிதான் என நிரூபிக்க இதற்கு மேல் என்ன வேண்டும்!

இதோ… இப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தைச் ‘சுடத்’ தயாராகிவிட்டார் அவரது மருமகனான தனுஷ். 1989-ல் ரஜினி நடித்து வசூலில் பெரும் சாதனைப் படைத்த மாப்பிள்ளை படத்தைதான், தனது அடுத்த படமாக குறி வைத்துள்ளார்.

இந்தப் படத்தை இயக்குபவர் சுராஜ். ரஜினியின் ‘படிக்காதவன்’ படத் தலைப்பைப் பயன்படுத்தி, தனுஷுக்கு வெற்றிப் படம் கொடுத்தவர் இவர்.

ஹிதேஷ் ஜபக் தயாரிக்கும் இந்த மாப்பிள்ளை, ரஜினி நடித்த ஒரிஜினலை அப்படியே தழுவி எடுக்கப்பட உள்ளதாம்.

இதுகுறித்து ‘மாப்பிள்ளை’யின் நிஜ மாப்பிள்ளையான தனுஷ் கூறுகையில், “நான் ரீமேக் செய்து நடிக்க விரும்பும் ரஜினி படம் மாப்பிள்ளைதான். அந்தப் படம் ஒரு கோல்ட் மாதிரி. நிச்சயம் என்னால் கெட்டுவிடாது. அந்த அருமையான சூப்பர் ஹிட் படத்தை இன்றைய பல இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் ரீமேக் செய்கிறோம். அதே கதை, காட்சிகள்… ஆனால் இன்னும் டெக்னிக்கலாகச் சொல்லப் போகிறோம். ரஜினி சாரின் பூரண ஆசீர்வாதத்துடன் இந்தப் படத்தைத் துவங்குகிறோம்,” என்றார்.

ஸ்ரீவித்யா, அமலா பாத்திரங்களுக்கு பொருத்தமான கலைஞர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.

ஒரிஜினல் மாப்பிள்ளையைத் தயாரித்தவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி. படத்தில் ஒரு காட்சியில் ரஜினியின் உடன்பிறவா தம்பியாக தோன்றி ஒரு அட்டகாசமான சண்டையும் செய்திருப்பார் சிரஞ்சீவி.

அதேபோல, ரஜினியின் அட்டகாசமான ப்ரேக் டான்ஸ் ஒன்றும் ஒரிஜினல் படத்தில் உண்டு. இளையராஜாவின் இசையில் ஒவ்வொரு பாடலும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றன.

மீண்டும் பழைய ‘மாப்பிள்ளை’க்கு விமர்சனம் எழுத வேண்டிய அவசியம் வராத அளவுக்கு புதிய மாப்பிள்ளையை சிறப்பாக எடுக்க ‘நம்ம மாப்பிள்ளை’யையும் வாழ்த்துவோம்!




11 thoughts on “ரஜினியின் மாப்பிள்ளை படத்தை ரீமேக்கும் தனுஷ்!

  1. கிரி

    //ரஜினியின் அட்டகாசமான ப்ரேக் டான்ஸ் ஒன்றும் ஒரிஜினல் படத்தில் உண்டு//

    🙂

  2. r.v.saravanan

    மீண்டும் பழைய ‘மாப்பிள்ளை’க்கு விமர்சனம் எழுத வேண்டிய அவசியம் வராத அளவுக்கு புதிய மாப்பிள்ளையை சிறப்பாக எடுக்க ‘நம்ம மாப்பிள்ளை’யையும் வாழ்த்துவோம்!

    nanum valthukiren

    chiranjivi seitha guest roll charactor il remake mappillaiyil

    rajini sir seithal nandraga irukkum yendru ninaikiren

  3. Manoharan

    ஸ்ரீவித்யா, அமலா பாத்திரங்களுக்கு பொருத்தமான கலைஞர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.

    Nadhiya and Tammanna are good choice.

  4. harisivaji

    enga ipavum sila per vanthu thaam thoom kothipaangale kuthika kaanom
    அந்தப் பக்கம் முரட்டுக்காளை, இந்தப் பக்கம் குருசிஷ்யன்,… இதற்கெல்லாம் மேல், ரஜினியே நடிக்கும் எந்திரன் மற்றும் சுல்தான்…

    ரஜினி எப்போதும் ஒன்மேன் இண்டஸ்ட்ரிதான் என நிரூபிக்க இதற்கு மேல் என்ன வேண்டும்!

    ithu pothuma my dear Friends

  5. mahesh

    enga enthaaaan unga thalaivar pugazh websitenalum , athukka avaru kalakala break dance adinaru solrathellam konjam jasthinga ……

  6. vijay

    ரஜினி எப்போதும் ஒன்மேன் இண்டஸ்ட்ரிதான் என நிரூபிக்க இதற்கு மேல் என்ன வேண்டும்!

  7. vijay

    ரஜினி எப்போதும் ஒன்மேன் இண்டஸ்ட்ரிதான் என நிரூபிக்க இதற்கு மேல் என்ன வேண்டும்!
    ரஜினி சாரின் பூரண ஆசீர்வாதத்துடன் இந்தப் படத்தைத் துவங்குகிறோம்,”

    மீண்டும் பழைய ‘மாப்பிள்ளை’க்கு விமர்சனம் எழுத வேண்டிய அவசியம் வராத அளவுக்கு புதிய மாப்பிள்ளையை சிறப்பாக எடுக்க ‘நம்ம மாப்பிள்ளை’யையும் வாழ்த்துவோம்!

  8. shiva

    ஹாய் தனுஷ்

    உண்மைலைய நீ தா மாப்பிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *