BREAKING NEWS
Search

ரஜினியின் எந்திரனால் வந்த மாற்றம்.. மீண்டும் நடிக்கிறார் சிரஞ்சீவி!

ரஜினியின் எந்திரனால் வந்த மாற்றம்.. மீண்டும் நடிக்கிறார் சிரஞ்சீவி!

ஜினியைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக உள்ளது. நான் அரசியலுக்கு வந்த பிறகு, சினிமாவில் நடிக்கக் கூடாது என முடிவு எடுத்துவிட்டேன். ஆனால் அந்த முடிவு தப்பென்று இப்போது நினைக்கிறேன்.

ரஜினி இவ்வளவு இளமையாக திரையில் ஐஸ்வர்யாராயுடன் டூயட் பாடும்போது எனக்கு ரொம்ப பொறாமையாக உள்ளது. ‘எந்திரன்’ என்ற பிரமாண்டமான படத்தில் ரஜினி கலக்கிக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு வரவில்லையே என்ற ஏக்கம் வந்துவிட்டது. இதைப் பார்த்ததும் எனக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையே வந்துவிட்டது…” – சில தினங்களுக்கு முன் ரோபோ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிரஞ்சீவி சொன்னது இது.

சொன்னதோடு நிற்கவில்லை அவர். இதோ தனது புதிய படத்தையும் அறிவித்துவிட்டார்!

சிரஞ்சீவி கடைசியாக நடித்த படம் ‘சங்கர்தாதா எம்பிபிஎஸ்’. இந்தியில் வெற்றி பெற்ற முன்னாபாய் எம்பிபிஎஸ்ஸின் ரீமேக் இது. பிரபுதேவா இயக்கியிருந்தார்.

அதன் பிறகு கட்சி தொடங்கிய சிரஞ்சீவி, படங்களில் நடிப்பதில்லை என்று அறிவித்துவிட்டு, பிரஜா ராஜ்யம் வேலைகளில் பிஸியாகிவிட்டார். 5 ஆண்டுகள் ஸ்டுடியோ பக்கமே அவர் தலைகாட்டவில்லை. இடையில் அவர் மகன் ராம்சரண் தேஜா பெரிய ஹீரோவாகிவிட்டார் (‘மகாதீரா’ அவர் நடித்த படம்தான்!).

இந்த நிலையில் நேற்று தனது பிறந்த நாளை ஹைதராபாதில் கொண்டாடிய சிரஞ்சீவி, தனது புதிய படம் குறித்த அறிவிப்பை தனது மகன் மூலமே வெளியிட்டார்.

இதுகுறித்து அறிவித்த ராம்சரண் தேஜா, “அப்பா மீண்டும் நடிக்க முடிவெடுத்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது ஒரே கவலை, அவர் படம் வெளியாகும் போது என் படத்துக்கு கூட்டம் இல்லாமல் போய்விடுமே என்பதுதான்!

இன்னும் 5 வருடம் கழித்து அவர் நடிக்க வந்தாலும் அவருக்கான மாஸ் என்றும் குறையாது. அவர் நடிக்கப் போகும் இந்தப் படம் அவரின் அடுத்த பிறந்த நாளுக்குள் வெளிவந்துவிடும். இது அவரது 150வது படம்…” என்றார்.

1978-ல் நடிக்க வந்த சிரஞ்சீவி, இதுவரை 149 படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் அவர் அறிமுகமான படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணுவ வீரன். இதில் வில்லன் வேடமேற்றார். பின்னர் பாலச்சந்தரின் 47 நாட்களில் வில்லத்தனம் கலந்த ஹீரோவாக நடித்தார்.

அதன் பிறகு முழுக்க தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தினார். இதுவரை 149 படங்கள் நடித்துள்ளார். 150 படத்தை என் வி பிரசாத் என்பவர் இயக்குகிறார்.




4 thoughts on “ரஜினியின் எந்திரனால் வந்த மாற்றம்.. மீண்டும் நடிக்கிறார் சிரஞ்சீவி!

  1. kumanan

    எந்திரனால் வந்த மாற்றம் இது என்பதை சொல்ல முடியாது..

  2. Kumar

    சிரஞ்சீவி நடிச்சா என்ன? நடிகாட்டி என்ன?

  3. siva

    ரஜினிகாந்த் (தலைவர்) எல்லோருக்கும் ஒரு முன்னோடி…..:)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *