BREAKING NEWS
Search

ரஜினியின் அண்ணாமலை பாட்டுப்பாடி பசு தானம் கொடுத்த விஜய்!

ரஜினியின் அண்ணாமலை பாட்டுப்பாடி பசு தானம் கொடுத்த விஜய்!


ஜினியின் அண்ணாமலை படத்தில் வரும் ‘வந்தேன்டா பால்காரன்…’ பாடலைப் பாடி., ஏழை விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு 108 பசுக்களை தானமாகக் கொடுத்தார் நடிகர் விஜய்.

வேலாயுதம் படப்பிடிப்புக்காக கோவை உடுமலைப் பேட்டையில் தங்கியுள்ளார் விஜய். இந்தப் பகுதியில் உள்ள ஏழை விவசாயிகள் 108 பேருக்கு கறவை மாடுகளை தீபாவளிப் பரிசாக வழங்கினார்.

இதற்காக விழாவில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். விழாவில் பேசிய விஜய், ‘வந்தேன்டா பால்காரன் பசு மாட்டைப் பத்தி பாடப் போறேன்…’, என்ற பாடலைப் பாடினார். ‘புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்…’ என்ற வரிகளை அவர் பாடியபோது, கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் ‘உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க’ என்று கோஷமெழுப்பினர்.

தொடர்ந்து பேசிய விஜய், “ஒரு பசுமாடு இருந்தால் ஒரு குடும்பம் பிழைக்கும் என்பார்கள். இதைத்தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், ‘சம்சாரி வாழ்க்கைக்கு ஒரு பசுமாடு’ என்றார்.

புல்லுகொடுத்தா பாலு கொடுக்கும், பாதிப்புள்ளை பொறக்குதப்பா பசும்பாலை நம்பி என தலைவர் ரஜினி கூறியிருக்கிறார்.

தானத்தில் சிறந்து பசுதானம் என்று புராணங்களும் கூறுகின்றன. அதனால்தான் எனது தீபாவளிப் பரிசாக பசுவை தானமாகத் தந்துள்ளேன்.

இது விவசாய நாடு. ஆனால் விவசாயத்தில் போதிய வருமானமில்லாததால், அந்தத் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். அவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரவேண்டும். இன்று என்னால் முடிந்த அளவு 108 விவசாயிகளுக்கு பசுக்களை வழங்குகிறேன்” என்றார்.
12 thoughts on “ரஜினியின் அண்ணாமலை பாட்டுப்பாடி பசு தானம் கொடுத்த விஜய்!

 1. tamil

  எப்போ எப்போ படம் ரிலீஸ் ஆகுதோ இந்த மாதிரி சேவை பண்ற மாதிரி காமிக்கிறது இளைய தலைவலிக்கு கை வந்த கலை ஆச்சே… நல்லது தானே பண்றார் என்று சொன்னாலும் ஒரு சுய நலத்தின் அடிப்படை தானே தெரிகிறது.

  ஆ ஊ என்றால் எல்லோரும் அடுத்த ரஜினி என்று தங்களை நினைச்சுக்கிட்டு பண்ற அலம்பல் தாங்கல

  காலம் பதில் சொல்லும் தம்பி

 2. kumaran

  தலைவரை பத்தி பேசியதால் விஜய்க்கு வாழ்த்து

 3. KICHA

  /‘புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்…’
  என்ற வரிகளை அவர் பாடியபோது ,
  கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் ‘உலக
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க’
  என்று கோஷமெழுப்பினர் .//

  ha ha ha
  sema bulb kuduthanungappa nammaalunga.

  RAJINI yoda kaal dhusu pera matanppa

 4. gokul

  ஒரு உதவி செய்தல் யார்க்கும் விளம்பர படத்தகூடாது விளம்பரம் செஞ்ச உதவிக்கு மதிப்பு கிடையாது – தலைவர் ரஜினிகாந்த்…………………

 5. pream

  superstar gave gifts to police who are protecting him. Vijay is giving cows to poor people. it a good deed indeed.

 6. endhiraa

  ம் நடக்கட்டும் ! (விநோஜி, இனிய தீபாவளி மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!)

 7. sakthivel

  ஊர் “குருவி” எவ்வளவு உயரம் பறந்தாலும் பருந்தாகமுடியாது……

 8. Mariappan

  உன் படம் ஓடணும்நா இதை செய் என்று எந்த ஜோசியக்காரன் சொன்னானோ? பய புள்ள காமெடி பண்ணிட்டு இருக்குது.

 9. Kumaran

  எங்கள் இளைய தளபதி எதையும் எதிர்பார்த்து இதை செய்யவில்லை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும், இதே விஜய் சென்ற மாதம் ஒரு சிறுவனுக்கு மருத்துவ உதவி வழங்கியது அனைவரும் அறிந்ததே, உடன் இருந்த லாரன்ஸ் தான் மீடியாகளுக்கு அழைப்பு விடுத்து அந்த செய்தியை கூறினார். இதை மீடியாகளுக்கு சொல்ல வேண்டாம் என விஜய் கேட்டும் கூட லாரன்ஸ் பிடிவாதமாக, இதை மற்றவர்களுக்கு தெரியபடித்தினால் தான் மற்ற நடிகர்களும் இது போன்ற உதவிகளை செய்ய முன் வருவார்கள் என தான் விஜய் இடம் கூறியதாக அவரே கூறினார். ரஜினி யின் பாடலை பாடி பசுவை தானமாக கொடுத்ததற்கு தான் திரு.வினோ அவர்கள் இந்த கட்டுரை யை பதிவிட்டுள்ளார். இருந்தாலும் அவருக்கு ஒரு விஜய் ரசிகனாக நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன், பெரிய தலைவரோட தளத்தில் எங்க சின்ன தலைவரோட (நல்ல முறையிலான) செய்தியை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

 10. Kumaran

  Mariappan says:

  உன் படம் ஓடணும்நா இதை செய் என்று எந்த ஜோசியக்காரன் சொன்னானோ? பய புள்ள காமெடி பண்ணிட்டு இருக்குது.

  // இவரு விஜய கலாய்ச்சிட்டாராம், நீங்கள் ரஜினி ரசிகனோ இல்லையோ எனக்கு தெரியாது, தெரியவும் தேவை இல்லை, ஆனால் அந்த ****யின் ரசிகன் என்பது மட்டும் புரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *