BREAKING NEWS
Search

ரஜினியின் அடுத்த படம்… இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

ரஜினியின் அடுத்த படம்… இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

டுத்தபடம் சத்யா மூவீசுக்குதான் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், உலக சூப்பர் ஸ்டாரின் இந்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கெனவே ஹரி இயக்குவார் என்றும், சத்யா மூவீசார் அவருடன் பேசியிருப்பதாகவும கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கக் கூடும் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கமல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கும் கே எஸ் ரவிக்குமார், இதுவரை வேறு புதிய படத்துக்கு அட்வான்ஸ் வாங்கவில்லை. ரஜினி படத்துக்காகத்தான் அவர் காத்திருக்கிறார் என்கிறார்கள். அதே நேரம் இந்திப் பட உலகில் முத்திரை பதித்த முருகதாஸும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுக்றது.

ரஜினியும் ரவிக்குமாரும் இணைந்து முத்து, படையப்பா என இரு மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ளனர். இருவரும் இணைவதாக இருந்த மூன்றாவது படம் ஜக்குபாய் நிறுத்தப்பட்டுவிட, பின்னர் அதே கதையை சரத்குமாரை வைத்து இயக்கினார் ரவிக்குமார்.

ஏற்கெனவே ரஜினியின் அனிமேஷன் படமான சுல்தான் – தி வாரியரை கேஎஸ் ரவிக்குமார்தான் இயக்கப்போவதாக ஜெமினி நிறுவனம் அறிவித்தது நினைவிருக்கலாம்.




10 thoughts on “ரஜினியின் அடுத்த படம்… இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

  1. சகோதரன்

    திறமையான இயக்குனர்கள். தலைவரை அடுத்த பரினாமத்திற்கு அழைத்து செல்லட்டும்.

  2. ramesh

    தலைவா…..முருகதாஸ் பெஸ்ட்………

    மியூசிக் ஹாரிஸ் ஜெயராஜ்……ப்ளீஸ் தலைவா….

  3. Boston Sriram

    முருகதாஸ் ஒரு copycat .
    S .S Rajamouli இயக்கினால் நன்றாக வரும் என்பது எனது திண்ணம்.

  4. khalifa

    யார் டைரக்ட் செய்தால் நமக்கு என்ன நமக்கு தலைவர் படம் ரிலீஸ் ஆனால் போதும். காத்து இருப்போம் அடுத்த திருவிழா காக.

  5. devraj

    Hi Vino
    In todays NDTV entertainment news they said officially Enthiran has broken Debang and 3IDIOTS in 2 weeks. I know you flashed this news long time back, but this is the first time in national news they have accepted RAJINIs power.
    Thaliver Rocks.
    cheers
    Dev.

  6. thamizhan

    அன்பு தமிழர்களே ஏன் இன்னும் சினிமா பைதியமஹா இருக்கிறீர்கள் ரஜினியை ஒரு நடிகனாக மட்டும் பாருங்கள் நாம் இன்னும் ஏன் ஒரு தமிழனை ஒரு உச்ச நச்சத்திரமாக காணமுடியவில்லை எத்தனையோ தமிழர்கள் நல்ல நடிகராக இருக்கும் போது ஏன் ரஜினியை மட்டும் கொண்டாடுகிறோம் என்னதான் ஆனாலும் ரஜினி ஒரு தமிழன அல்ல மட்ட மாநிலத்தவர் யாரேன்கிலும் ஒரு தமிழனை நமைபோல் மதிபதிலை நாம் இப்படிதூக்கி வைபதல்தான் நம்மை ஆள்வதற்கு கூட ஒரு தமிழன் இல்லை சிந்தித்து செயல் படுங்கள் தமிழனாக தமிழனாக இரு தமிழனோடு இரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *