BREAKING NEWS
Search

‘ரஜினிக்கு 60 ஆம் கல்யாணம்?’ ‘அப்படி எந்த நிகழ்ச்சியுமில்லை!’

ரஜினிக்கு 60 ஆம் கல்யாணம்? அப்படி எந்த நிகழ்ச்சியுமில்லை!

ங்களது எளிமையைக்கூட எக்கச்சக்கமாய் செலவழித்து பலரும் விழா கொண்டாடும் காலம் இது. ஆனால் ரஜினி… இயல்பிலேயே எளிமையான மனிதர். தனக்கென்று தனிப்பட்ட முறையில் எந்த விழாவையும் கொண்டாட அவர் விரும்பியதுமில்லை… சுற்றியிருப்பவர்கள் அப்படி ஒரு விழா எடுக்கும் போது கூட, அதை அவர்களுள் ஒருவராக நின்று ரசித்துவிட்டுப் போகும் பக்குவம் பெற்றவர்.

01 copy copy

இதோ ரஜினியின் 60 வது பிறந்த நாள் நெருங்கிவிட்டது. உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் தங்கள் மனதுக்கும், சுற்றியிருப்போர் நலனுக்கும் ஏற்ப அதைக் கொண்டாடத் திட்டமிட்டு வருகிறார்கள்.

முந்தைய ஆண்டுகளைப் போல அல்லாமல், தமிழகம் முழுக்க வெகு விமர்சையாக இந்த நாளைக் கொண்டாட ரசிகர்கள் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரத்ததானம், எழுதுபொருள் உதவி, திருமண உதவி, உடலுறுப்பு தானம், படிப்பு உதவி, மருத்துவ உதவி, மரம் நடு விழா…. இப்படி சமூக அக்கறை கொண்ட நிகழ்வுகளாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வுகளில் பெரும்பாலானவை ரஜினி ரசிகர்களின் தலைமை மன்ற ஒப்புதலுடன் நடக்க உள்ளன.

இந்நிலையில் ரஜினிக்கு 60-ம் ஆண்டு திருமண விழா நடக்க இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளில் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு ரஜினியும் ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும் குமுதம் ரிப்போர்ட்டர் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் 60-ம் கல்யாணத்துக்கென்றே புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி திருக்கோயிலில் இந்த நிகழ்ச்சி முதலில் நடக்கத் திட்டமிடப்பட்டது என்றும்,  ரசிகர்கள் தொந்தரவு இருக்கும் என்பதால் பின்னர் வேறு மாநிலத்தில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் குமுதம் குழு தனி ‘ஸ்க்ரீன்பிளே’ எழுதியுள்ளது.

தலைவருக்கு மணி விழா விமரிசையாக நடந்தாலும் சரி, எளிமையாக அவர் மனம் விரும்பும் வகையில் நடந்தாலும் சரி… ரசிகர்கள் மகிழவே செய்வார்கள். மீண்டும் மாலையும் கழுத்துமாக அவரைப் பார்க்க யாருக்குதான் கசக்கும்!  அவரது வாரிசுகளின் ஆர்வத்துக்கும் அன்புக்கும் சற்றும் குறைந்ததல்ல, ரசிகர்களின் அன்பும்.

ஆனால் இந்த விஷயத்தில்தான் விஷமத்தனம் காட்டியிருக்கிறது குமுதம்… ‘ரசிகர்கள் தொந்தரவு இருக்கும் என்பதற்காக ஆந்திரா அல்லது கர்நாடகத்தில் ரகசியமாக இந்த மணிவிழாவைக் கொண்டாட ரஜினி திட்டமிட்டு வருவதாக’க் கூறியிருக்கிறது. தன் பிறந்தநாளன்று கைக்காசை செலவழித்து, பல இடர்பாடுகளுக்கிடையே சென்னை வந்து கஷ்டப்பட வேண்டாம் என்று ரசிகர்களை அவரவர் இடத்திலேயே டிசம்பர் 12-ஐக் கொண்டாடுங்கள் என  ஒரு அறிக்கைதான் விடுகிறார் ரஜினி… அதை அப்படியே ஏற்றுக் கொண்டவர்கள்தானே ரசிகர்கள்!

பெரும்பாலும் இத்தகைய செய்திகள், அதிலும் ரஜினி குறித்து குமுதம் குழுமம் வெளியிடும் கட்டுரைகளின் நம்பகத் தன்மை ரசிகர்கள் அறிந்ததே.

எனவே இன்று (நவம்பர் 18) இதுகுறித்து தலைமை மன்றத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

விஷயத்தைச் சொன்னதுமே, ‘ஆமா நானும் படிச்சேன்…’ என்றார் தலைமை மன்ற நிர்வாகி சுதாகர் சிரித்தபடி.

தொடர்ந்து அவர் கூறுகையில், “இந்தக் கட்டுரையில் கொஞ்சமும் உண்மையில்லை. அவரைப் (தலைவர்) பற்றி வந்த எத்தனையோ கட்டு (கதை)ரைகளுள் இதுவும் ஒன்று.  வேறொன்றுமில்லை… பிறந்த நாள் குறித்து தலைவரே அறிவிப்பார்” என்றார்.

-என்வழி
4 thoughts on “‘ரஜினிக்கு 60 ஆம் கல்யாணம்?’ ‘அப்படி எந்த நிகழ்ச்சியுமில்லை!’

 1. r.v.saravanan

  vino sir,manoharan sir

  nan 10 years aga rajini article headline magazines vanghi padichu yemandhu poi
  vangurathai niruthiten

  rajini news ethuva irundalum internet ley padichukiren

 2. selva kumar

  நண்பா தலைவரு 60ம் கல்யாணம் பற்றி உங்கள் கருதத தொிவிக்கவும்

 3. Mariappan

  தலைவரை வைத்து காசு பார்க்கும் கூட்டத்தை புறக்கணிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *