ரஜினிக்கு இரண்டாவது பேரன்!
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா – நடிகர் தனுஷ் தம்பதிக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஏற்கெனவே இவர்களுக்கு யாத்ரா என்ற மூன்று வயது மகன் உள்ளான். மழலையர் பள்ளிக்குச் செல்கிறான்.
இரண்டாவது முறை கருவுற்ற ஐஸ்வர்யா, நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை 6.21 மணிக்கு அவருக்கு இரண்டாவது மகன் பிறந்தான். தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தக் குழந்தையும் ஆண்தான் என்பதை சில தினங்களுக்கு முன்பே ஐஸ்வர்யாவின் மாமனார் கஸ்தூரி ராஜா ஒரு பிரஸ்மீட்டில் சூசகமாக கூறியிருந்தார் (இவரது மகள் விமலகீதா ஒரு டாக்டர்!).
மகன் பிறந்த சந்தோஷத்திலிருந்த தனுஷ், இதுபற்றிக் கூறுகையில், “இரண்டாவது முறை தந்தையாகும்போதும் இத்தனை சந்தோஷமும் த்ரில்லும் இருக்குமென்று நான் நினைகத்கவே இல்லை. மனசு முழுக்க சந்தோஷத்தில் மிதக்கிறேன்.
குழந்தைக்கு என்ன பெயர் வைப்பதென்றெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை. குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்திருக்கிறான். தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். நாளை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுவோம்…” என்றார்.
இரண்டாவது பேரன் பிறந்ததில் தாத்தா ரஜினி மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்.
ரஜினிக்கு இரண்டு மகள்கள் மட்டுமே. மகன் இல்லை. அதை ஈடுகட்டும் வகையில், தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி இரண்டு பேரன்களை அவருக்குப் பரிசளித்துள்ளனர்!
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு நமது வாழ்த்துக்கள்!
-என்வழி
வாழ்த்துக்கள்,
இதோட நிப்படுங்கப்ப..
தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிக்கு வாழ்த்துக்கள்
பெஸ்ட் விஷ் – // ரஜினிக்கு இரண்டு மகள்கள் மட்டுமே. மகன் இல்லை. அந்த குறையை // – இது ஒரு குறையாயா ?
தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிக்கு வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்
தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிக்கு வாழ்த்துக்கள்!!!
தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிக்கு வாழ்த்துக்கள்!!
Two Rajinis are ready for the future.
Congrats.
மாப்பிள்ளை வாழ்துக்கள்….