BREAKING NEWS
Search

ரசிகர்களை வர வேண்டாம் என்று ரஜினி கூறியது சரியா?: கேள்வி – பதில்

ரசிகர்களை வர வேண்டாம் என்று ரஜினி கூறியது சரியா? – கேள்வி பதில் 14

கேள்வி: ரசிகர்களை வர வேண்டாம் என்று ரஜினி கூறியது சரியா? ரசிகர்களை தனியாகக் கூட்டியாவது ஒரு வரவேற்பு வைத்திருக்கலாமே ரஜினி?

(நிறைய நண்பர்கள் போனிலும் நேரிலும் இந்தக் கேள்வியைக் கேட்டதால், இதற்கான விளக்கத்தைத் தருகிறோம்.)

பதில்: ரஜினி என்ற நடிகருக்கு இருக்கும் ரசிகர்களை விட, ரஜினி என மனிதருக்கு உள்ள ரசிகர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் அதிகம்!

ரஜினி தன் ரசிகர்களையெல்லாம் அழைத்து விருந்து கொடுத்து அவரது மகள் திருமணத்தை நடத்த வேண்டுமென்றால், சென்னையில் எத்தனை மண்டபத்தை வாடகைக்கு எடுப்பது… தீவுத்திடலோ, மெரீனாவோ கூட போதாது.

உண்மையிலேயே இவ்வளவு பேரும் வருவார்களா? என்று கூட சிலர் கேட்கக் கூடும். ரஜினி மட்டும் ‘வாங்க’ என்று ஒரு வார்த்தை சொன்னால், சென்னை திகைத்து ஸ்தம்பித்துப் போகும் என்பது அவரை விமர்சிப்பவர்களுக்கும் நன்கு தெரியும்.

இதையெல்லாம் உணர்ந்துதான், ‘எதற்கு சிரமம்… வந்து சிரமப்படுவதை விட, இருந்த இடத்திலிருந்தே வாழ்த்துங்கள்’ என்ற நல்ல மனதோடு அந்த அறிக்கையை ரஜினி விடுத்துள்ளார். அதிலும் குறை காண முயற்சிப்பதை என்னவென்பது!

வெறும் நிர்வாகிகளை அழைத்திருக்கலாமே என்று சிலர் கேட்கக் கூடும். தனது உத்தரவுகளைச் சொல்லும் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு நிர்வாகிகள் போதும்… இது ஒரு மங்கல விழா… இதில் நிர்வாகிகள் என்ன, ரசிகர்கள் என்ன… எல்லாருக்கும் ஒரே மரியாதைதான் என்பது ரஜினியின் எண்ணம்.

இந்தக் கடிதத்தைக் கூட தன் கைப்பட எழுதி பத்திரிகைகளுக்குக் கொடுத்திருந்தார் ரஜினி.

அதில் ரசிகர்களைத் தவிர்க்க வேண்டும் என்ற தொனி தெரியவில்லை… ரசிகர்கள் வந்து சிரமப்பட வேண்டாமே என்ற அக்கறையே தெரிந்தது. ரசிகர்களை அழைப்பது, அவர்களுக்கு விருந்து படைப்பதெல்லாம் அவருக்கு ஒரு விஷயமில்லை… வந்தவர்கள் பத்திரமாக இருக்க வேண்டும், அவர்களால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவேண்டும்… திருமணத்துக்குக் குவியும் விவிஐபிகளுக்கான பாதுகாப்புக் கெடுபிடிகளில் ரசிகர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்… இப்படி எத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இதில் இருக்கின்றன!

இப்படி ஒரு அறிக்கையை அவர் தராமலேயே கூட இருந்திருக்கலாம். ஆனால், ரசிகர்கள் ஆர்வமிகுதியில் சென்னை வந்து, பாதுகாப்புக் கெடுபிடிகளில் சிக்கி அவஸ்தைப்பட்டு கசந்த மனதோடு செல்வதோ, அதை வைத்து மீடியாவும் வேறு சிலரும் தேவையற்ற பரபரப்பைக் கிளப்புவதோ நேர்ந்துவிடக் கூடாது என்பதும் கூட இந்த அறிக்கைக்கு ஒரு காரணம்.

தமிழகம் மட்டுமல்ல, தமிழர் வாழும் இடமெல்லாம் அவரது ரசிகர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்… அந்த வகையில் இந்தத் திருமணம், சென்னை என்ற எல்லை தாண்டி நடப்பதாகவே கருதிக் கொண்டு, இனிய இல்லறம் காணப் போகும் நம்ம வீட்டுப் பெண் சௌந்தர்யா ரஜினி – அஸ்வின் ராம் குமாரை வாழ்த்தி மகிழ்வோம்!

-என்வழி
33 thoughts on “ரசிகர்களை வர வேண்டாம் என்று ரஜினி கூறியது சரியா?: கேள்வி – பதில்

 1. samuvelu

  நீங்க என்ன சொன்னாலும் மனசு கேட்கல. எங்கள் கிராம மன்ற நிர்வாகி போய்ட்டு வந்து கல்யாணத பத்தியும், ரஜினி பத்தியும் எங்க ஊர்ல புகழ்ந்த நாங்க எல்லாம் எவ்ளோ சந்தோஷ படுவோம் தெர்யும? நாங்க மட்டும் என்ன சாப்பாட்டுக்கு வலி இல்லாமலா எங்கள கூபிடுங்கனு சொல்றோம்?

 2. Siva

  வினோ.. தலைவரின் என்ன ஓட்டத்தை அப்படியே பிரதிபலித்து போன்ற உணர்வு உங்கள் பதிலை படித்ததும்.

 3. Gokul

  Well said , i dont see any issue in our thailavar’s statement .If u are a true rajini fan , u will understand the concern he has for us.

 4. குமரன்

  தலைவர் மகள் திருமணம் நன்கு நடந்து மணமக்கள் நீண்ட ஆயுளோடும், மகிழ்ச்சியோடும் குழந்தைகள் பெற்று அன்புடன் நெடுநாள் வாழவேண்டும்.

  ஆனால், தலைவர் தமிழக முதல்வராகும் நாளில் அழையாமலே அனைவரும் சென்னையை நிறைத்துவிடுவோம்.

 5. Rajkumar

  Best article.Thalaivar vidura ovovru arikkaikum sila porami pidithavarkal thirithu arthathai parapuvathe velai agipoivitahu .Thalaivar always greet.

 6. devraj

  correct explanation. Many are spreading false news about Thaliver which is unfortunate.
  RAJINI clearly explained that he regrets that he cannot invite all., which is TRUE.
  GOD BLESS THE COUPLE.
  DEV.

 7. Jey

  btw even he cant invite mandram head as because there are 63000 mandram if each one/two come frm that imagine about the mumbers..

 8. praveen

  இது தினத்தந்தி காரன் செய்த சூழ்ச்சி. அவன் தான் வர வேண்டாம் என்று சொன்ன தாக செய்தி போட்டான். தலைவர் தன் இயலாமையைத்தான் வெளிபடுத்தினார். ரசிகர்கள் அனைவரையும் கூபிடுவதேன்பது நடைமுறைல் இயலாத காரியம்.

 9. கிரி

  வினோ புரிந்துகொள்பவர்கள் விளக்கம் இல்லாமலே புரிந்து கொள்வார்கள்… புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது வேண்டும் என்றே கேட்பவர்களை எந்த விளக்கத்தாலும் திருப்தி படுத்த முடியாது.

  மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ ரசிகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 10. endhiraa

  உண்மை தான் ! ரசிகர்கள் சிரமப் படக்கூடாதென்று தலைவர் நினைத்தது முற்றிலும் உண்மை ! சொல்கிறவர்கள் என்ன வேணும்னாலும் சொல்லட்டும் ! தலைவரின் எண்ணத்தை அப்படியே பிரதிபலித்தது போலிருக்கிறது வினோவின் பதில் !

 11. balaji

  தங்கள் சொன்னது மிக சரி. தலைவரின் மனதை பிரதிபளிதீர்கள்

 12. unmai

  அட ஏம்பா ,தேர்தல் நேரத்துல கூட்டத்த காண்பிச்சா ,,கட்சி ஆரம்பிக்க போறார் ன்னு பேச்சி வரும்

 13. Mohan

  Hello Vino,

  A True Thalaivar Fan needs no explanation. There are situations like these which has helped us identify the so called black sheeps within us in the name of a FAN. What my Thalaivar has done is perfectly correct, and he need not give any explanation to anyone. Like i said above, a TRUE FAN needs no explanation from Thalaivar. We just love him for the person who he is…. He is just setting a example of a Ideal Man. Long live my Thalaivar.

  Mohan

 14. Karthikeyan

  Dear friends, i strongly believe Mr.Rajini did so only to avoid disturbing other people and fans themselves.

  Im working from SIPCOT, Siruseri, Chennai. Im the one of many who saw Endhiran shooting happened here before sometime. The way it happened is great. Shooting people wont disturb the employees in SIPCOT MNCs at all. Everything was going smooth. no one will believe that its Endhiran shooting and the boss is there.

  But now, some shooting is happening here (some Red Giant movie). We are all facing troubles in our transportation. Even one of the employee was waiting in his car for 30 minutes to go to his office.

  I really appreciate Mr.Rajini, Mr.Shankar and their team on this!
  Thanks
  Karthik

 15. vijithan

  கேக்கிறவன் கேனையன இருந்தால் எலி ஏறோ பிளேன் ஓட்டுமாம். ரசிகர்களையும் அழைக்க வேண்டும் என்று இல்லை விருப்பம் இருந்தால் ஒரு மாவட்டத்தில் இருந்து ரசிகர் மன்றம் மூலமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில்(percentage) அழைத்திருக்கலாம்.என்னை வாழ வைக்கும் ரசிகர்கள் என கூறுவதெல்லாம் சுத்தப் பொய்.படம் ஓட வேண்டும் என்பதற்காக கூறுபவை.
  உம்மைப்போல் ஒரு ரஜனி வாழியை இது வரை நான் மட்டும் அல்ல எவருமே பார்த்திருக்க மாட்டார்கள்.

 16. udhaya

  புது மண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் .
  ரசிகன் என்பவன் படம் பார்ப்பதற்கும், தன் கட் – அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வதற்கு மட்டுமே என்பதை தலைவர் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்.
  தன் படம் வெளிவரும்போது அதற்கு மட்டும் ரசிகன் திரை அரங்கிற்கு வந்தால் போதும்.
  தலைவா – நீ எப்போதும் தெளிவாகவே இருக்கிறாய். ஆனால் நாங்கள் ????????????????????????????

 17. senthil

  ஹலோ கமல் ரசிகன் சாரி உதயா அவர்களே என்னதான் நீ வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று ஏதேதோ புலம்பினாலும் தலைவர் ரசிகர்கள் மாற மாட்டார்கள்.ஒன்னும் மட்டும் புரிஞ்சிக்கோ இங்கே உள்ள எந்த நடிகனும் தலைவரை தவிர தன் ரசிகனை இந்த மாதிரி அவர்களின் வாழ்க்கை முறையில் அக்கறை கொண்டவர் எவரும் இல்லை.ரசிகர்கள் இந்த கல்யாணத்துக்கு போயிருந்தால் எப்படியும் ஒரு தலைக்கு 1000
  ரூபாய் செலவாகிருக்கும் மேலும் இவ்வளவு v vip கூட்டத்துக்கு மத்தியில் எப்படியும் காவல் துறையினர் ரசிகர்களை மணப்பந்தல் கிட்ட நெருங்க விட மாட்டார்கள்.அந்த ஏமாற்ற்றம் கொடுமையாக இருந்திருக்கும்.மேலும் அனேகமாக காவல் துறையினர் தலைவரிடம் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி ரசிகர்களை கூப்பிடவேண்டாம் என்று முன்பே கேட்டு கொண்டிருப்பார்கள்.
  அதனால் உதயா மாப்பு போய் உன் வாழ்க்கையை எப்படி உதய வைக்கலாம் என்று பாரு அதை விட்டு விட்டு இங்கே வந்து ஆலோசனை என்ற பெயரில் பருப்பு கடையாதே.
  எங்கள் உயிர் உள்ளவரை ரஜினிதான் எங்கள் தலைவர் ஏனென்றால் அவர் நடிகர் மட்டும் அல்ல உண்மையான மனிதர்.
  //கமல் போல் இல்லாமல் தலைவர்போல் அன்பு,நேர்மை மற்றும் துரோகமின்மை ஆகியவற்றை மூச்சாக கொண்டு வாழ மணமக்களை வாழ்த்துகிறேன்//

 18. ramesh

  அன்புள்ள தலைவனுக்கு…

  தலைவா எங்களுக்கு உன்னை விட்டால் யாரையும் தெரியாது தலைவா..தெரியாது என்பதைவிட யாரையும் எங்களுக்கு (உன்னை விட்டால்) பிடிக்காது என்பதுதான் உண்மை…….,

  எங்களை யார் என்ன வேண்டுமானாலும் சொன்னால் தாங்கி கொள்ளவோம்.ஆனால் உங்களை யாரவது எதாவது சொன்னால் எங்களால் தான் கொள்ள முடியல தலைவா..

  நீங்க வரவேண்டாம் என்று சொல்ல வில்லை..ஆனா அதை சில நாளடுக தவறாக சொல்லிவிட்டன..எங்களுக்கு உன்னை பற்றி தெரியும் தலைவா..உன் உள்ளதை பற்றியும் தெரியும் தலைவா….,எங்களுக்கு எந்த பிரச்னையும் வரகூடாது என்ற எண்ணத்தில் நீ கூறினாய் என்பது எங்களுக்கு தெரியும் …
  ஆனால் கண்ட நாய்களுக்கு எப்போ உன்னோட நியூஸ் கிடைக்கும் என்ன எழதி போடலாம் என்று காத்து கிடக்கிறார்கள்..

  எங்களுக்கு காக மறுபடியும் ஒரு அறிக்கை கொடுதலைவா…

  இப்படிக்கு அன்பு ரசிகன்….ரமேஷ் லிப்யா நாட்டிலிருந்து…

  என்றும் ரஜினி…எதிலும் ரஜினி..எங்கள் உயிர் உள்ளவரை……வி லவ் u தலைவா….

 19. ramesh

  அன்புள்ள தலைவனுக்கு…

  தலைவா எங்களுக்கு உன்னை விட்டால் யாரையும் தெரியாது தலைவா..தெரியாது என்பதைவிட யாரையும் எங்களுக்கு (உன்னை விட்டால்) பிடிக்காது என்பதுதான் உண்மை…….,

  எங்களை யார் என்ன வேண்டுமானாலும் சொன்னால் தாங்கி கொள்ளவோம்.ஆனால் உங்களை யாரவது எதாவது சொன்னால் எங்களால் தான் கொள்ள முடியல தலைவா..

  நீங்க வரவேண்டாம் என்று சொல்ல வில்லை..ஆனா அதை சில நாளடுக தவறாக சொல்லிவிட்டன..எங்களுக்கு உன்னை பற்றி தெரியும் தலைவா..உன் உள்ளதை பற்றியும் தெரியும் தலைவா….,எங்களுக்கு எந்த பிரச்னையும் வரகூடாது என்ற எண்ணத்தில் நீ கூறினாய் என்பது எங்களுக்கு தெரியும் …
  ஆனால் கண்ட நாய்களுக்கு எப்போ உன்னோட நியூஸ் கிடைக்கும் என்ன எழதி போடலாம் என்று காத்து கிடக்கிறார்கள்..

  எங்களுக்கு காக மறுபடியும் ஒரு அறிக்கை கொடுதலைவா…

  இப்படிக்கு அன்பு ரசிகன்….ரமேஷ் லிப்யா நாட்டிலிருந்து…

  என்றும் ரஜினி…எதிலும் ரஜினி..எங்கள் உயிர் உள்ளவரை……வி லவ் u தலைவா….

  ரமேஷ்.கே
  Civil Engineer
  மொபைல் No : 00218 918796721

 20. Rkamal

  தலைவர் மனம் போல் மணமக்கள் வளமாக வாழ்க !,
  இது எந்திரன் நேரம், இருந்தும் தலைவரின் அறிக்கை அவரின் நேர்மை மற்றும் தனிப்பட்ட விடயங்களில் அவர் காட்டும் தனித்தன்மை காட்டுகிறது.

  மீண்டும்

  தலைவர் மனம் போல் மணமக்கள் வளமாக வாழ்க !,

 21. Manoharan

  புரிந்தவர்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. புரியாதவர்களுக்கு சொல்லி பிரயோஜனமில்லை . ரசிகர்களாகிய நாம் தெளிவாக இருக்கிறோம். யார் என்ன சொன்னால் என்ன ? சௌந்தர்யா நமது இளவரசி. அவருக்கு நம் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு. வாழ்க மணமக்கள். எந்திரன் ரிலிஸ் எப்போப்பா …? நாம் அதை பற்றி பேசுவோம்.

 22. r.v.saravanan

  வினோ புரிந்துகொள்பவர்கள் விளக்கம் இல்லாமலே புரிந்து கொள்வார்கள்

  மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ ரசிகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 23. tamil

  ரஜினி: நீங்கல்லாம் யார்?

  ரசிகன்: நான் உங்க ரசிகர்கள். அதாவது உங்க உயிர்.

  ரஜினி: உயிரெல்லாம் கொஞ்சம் வெளியில் நில்லுங்க, மத்த _யிரெல்லாம் உள்ளே வாங்க( திருமா, அன்புமணி)

  சாரி சாரி, உயிரெல்லாம் வரவேண்டாம்னு சொல்லலை, நீங்க வந்தா டிராபிக் ஜாம் ஆகும், அதனால உங்களையெல்லாம் அழைக்கமுடியலன்னு வருத்தமா இருக்கு ன்னு தான் சொல்ல வரேன்.

  ரஜினி ரசிகன்: டேய் கமல் ரசிகனே, ரொம்ப தான் குதிக்காதே, எங்க தலைவர் என்ன சொன்னாலும் செய்தாலும் நாங்க அவர் படம் ரிலீசாகும்போது டிராபிக் ஜாம் பண்ணியே தீருவோம்.
  – இப்படிக்கு, ரஜினி வெறியன் பிரம் 1985

 24. Shriram

  ரஜினி யின் இந்த அறிக்கை மிகவும் போற்றகூடியது . வீணாக அவருக்கு இருக்கும் லட்சோப லட்சம் ரசிகர்களை சென்னை கு வரவழைத்து, நகர மக்களின் இயல்பு வாழ்கையை ஸ்தம்பிக்க வைக்காமல் அவர் நேர்த்தியாக கையாண்டுள்ளார். பாமர மக்களுக்கு எப்போதும் உணர்சிகளுக்கு மட்டும் தான் முதலிடம். ஆகையால் அவர்கள் பேச்சுக்கு அதிக முக்கியத்துவும் ,அதுவும் இது போன்ற நிகழ்சிகளுக்கு தேவையே இல்லை.

 25. Sukumar

  ஹாய்,

  உங்களது கருத்து தெளிவாக உள்ளது. ஆனால் இப்படி யோசித்து பாருங்கள். சென்னை trade center போன்ற இடத்தில் விருந்து ஒன்று செய்திருக்கலாம் சென்னை பான்ஸ்க்கு தம்பதிகளின் முன்னிலையில். அதே போல் மாவட்டம் முழுக்க செய்யல்லாம். எனக்கு தலைவரின் இந்த செய்லில் உடன்பாடு இல்லை ஆனாலும் குறை கூற விரும்பவில்லை. என்னதான் அசம்பாவிதம் அது இது என்றாலும், அதையும் தாண்டிய நட்பு தலைவரிடம் நமக்கு உண்டு.

  கருத்து சுதந்திரத்திற்கு நன்றி.

 26. suresh

  வினோ…. சில தவறுகளை நாம் ஏற்றுக்கொள்ளதான்வேண்டும். நானும் ரஜினி ரசிகன் தான் பா. என்ன இருந்தால்லும் மனது ஏற்றுகொள்ள மறுகிறது.

 27. SENTHIL

  சமுவேலுவின் வரிகள் : நீங்க என்ன சொன்னாலும் மனசு கேட்கல. எங்கள் கிராம மன்ற நிர்வாகி போய்ட்டு வந்து கல்யாணத பத்தியும், ரஜினி பத்தியும் எங்க ஊர்ல புகழ்ந்த நாங்க எல்லாம் எவ்ளோ சந்தோஷ படுவோம் தெர்யும? நாங்க மட்டும் என்ன சாப்பாட்டுக்கு வலி இல்லாமலா எங்கள கூபிடுங்கனு சொல்றோம்?

  கமன்ட் எழுதுற யாருக்கும் இதுபோல எண்ணம் மனதில் தொன்றவில்லையா?

 28. கணபதி

  இதில் முதல் தவறு தலைவரோடதுதான் முதலில் அவர் அறிக்கை வெளியிட்டுருக்க கூடாது .அவர் என்னவோ நல்லெண்ணத்தில் கூறினார் அதனை மீடியா தங்கள் இஸ்டம் போல் எழுதிவிட்டன எந்த ரசிகனுக்கும் தலைவர் கூபிடலைன்னு கண்டிப்பாக வருத்தம் இருக்காது ஏனென்றால் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அறிவர். விகடன் போன்ற கல்லாபெட்டி மட்டும் நிறைந்தால் போதும் என்று தங்கள் இஷ்டத்துக்கு எழுதும் பத்த்ரிக்கைகளை உண்மையான ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் .

 29. Raja

  //ரசிகர்கள் இந்த கல்யாணத்துக்கு போயிருந்தால் எப்படியும் ஒரு தலைக்கு 1000
  ரூபாய் செலவாகிருக்கும்

  ஹி ஹி … நீங்க ரொம்ப நல்லவரு

 30. தமிழ் மறவன்

  ரசிகர்களுக்கு அவர் இதை கூடவா செய்ய முடியாது ..?
  நன்றிக்கடனை அவர் எப்படி தீர்க்க போகிறார் என்று பார்போம்…!!!!
  ”என் நன்றி கொன்றர்க்கும் உய்வுண்டு ” t

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *