BREAKING NEWS
Search

ரசிகர்களுக்கு திருமண விருந்து… ரஜினி அறிவிப்பு!

ரசிகர்களுக்கு திருமண விருந்து… ரஜினி அறிவிப்பு!

சென்னை: மகள் சௌந்தர்யாவின் திருமணத்தையொட்டி, ரசிகர்களுக்கு தனி விருந்து வைப்பதாக அறிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவின் திருமணம், கடந்த 3-ந்தேதி சென்னையில் நடைபெற்றது.

இதையொட்டி ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளின் திருமண விழா மற்றும் மாலையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், மத்திய மந்திரிகள், பல்வேறு கட்சி தலைவர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், பரிசு பொருட்கள் அனுப்பி வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி.

எனது மகளின் திருமண வைபவத்தை முன்னிட்டு, என்னுடைய ரசிகர்கள் அனைவரையும் குடும்பத்தினருடன் அழைத்து, மணமக்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி விருந்து வைக்க நான் ஆசைப்படுகிறேன். அது முடியுமானால், அதை நிறைவேற்ற நான் கண்டிப்பாக முயற்சி செய்வேன்,” என்று கூறியுள்ளார்.




19 thoughts on “ரசிகர்களுக்கு திருமண விருந்து… ரஜினி அறிவிப்பு!

 1. kumarji

  சோத்துக்கு வழியில்லாம தவிக்கும் ரசிக மகா சனங்களுக்கு சோறு போட்டு புதிய புரட்சிக்கு வித்திடும் தென்னகத்து சேம்ஸ்பாண்டே வாழ்த்த வயசில்ல.வணங்க மனசில்ல.

 2. ramesh

  தேங்க்ஸ் தலைவா……

  இது போதும் தலைவா….உங்களை பார்த்தாலே எங்களுக்கு எல்லா மன கழ்டமும் போய்விடும் தலைவா….

  வி ஆர் லவ் சூப்பர் ஸ்டார்……

 3. kumar

  தலைவா…

  உங்களை பாக்கும் இந்த நாளுக்காக தான் தலைவா காதுகிற்றிகோம் …..

  தேங்க்ஸ் தலைவா…

 4. raja

  எங்கள் உயிர் தலைவா நீ…..

  எங்களை அழைத்ததற்கு தேங்க்ஸ் தலைவா…

  வி லவ் உ தலைவா…

 5. prince

  thanks to vigadan. this decision is just because of endhiran release.
  i dont try to tease fans here but after vigadans news about prabhu’s son he is doing this.
  last time ishwarya- danush there was nothing like this cos no movie was releasing .
  now due to endhiran release he is doing it.
  sorry to hurt people here

 6. Juu

  தலைவா, மறுபடியும் confuse பண்ண ஆரம்பிச்சிட்டியா???
  இருந்தாலும், நீ ரசிகர்களை வரவேணாம்ன்னு சொன்னத கூட ஏத்துப்போம்!!
  ஆனா அன்புமணி,திருமாவ வீட்டுக்குபோய் கூப்டதுதான் ஏதோ பண்ணுது!!
  அன்னைக்கு பெருமையா இருந்தது உனக்காக அடிவாங்குன போது!!
  அந்த அடிய விட,இது கொஞ்சம் வலிக்குது தலைவா!!

  சரி விடு, இன்னைக்கு தினகரன்ல எந்திரன் இம்மாத வெளியிடுன்னு போட்டுருக்கு,சந்தோஷமா இருக்கு!!! (அவ்ளோதான் நான்)

 7. naveen

  தலைவா நீ சொன்னதே எங்களுக்கு விருந்து சாப்பிட்ட மாதிரி .இந்த பன்னாட பசங்கள விடுங்க .உங்கள் ரசிகர்கள் அனைவரையும் கூப்பிட்டால் சென்னை பத்துமா .உங்கள் சொத்து கணக்கை விட ரசிகர்கள் கணக்கு அளவட்றது.கொஞ்சம் பேரை கூபிடல் மத்ரவர்கள் மனது கஷ்டப்படும் .இதெல்லாம் இந்த நாத்தம் புடிச்ச நன்னாரி பண்neகளுக்கு என்ன தெரியும் .

 8. suresh

  Rajni should have planned it at the beginning itself.If he would have done that the world would have praised for respecting his fans.Now after so many criticism from fans/normal people he have taken this decision later which i feel is not praisable

 9. Deepak

  Dear Vinao,

  Check this

  http://***************

  _______________________
  நண்பரே
  இந்த மாதிரி Link-குகளைத் தராதீர்கள். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்… அது போதும்!

  -வினோ

 10. kiri

  கேட்டு விருந்து சாபிடுற மானம்கெட்ட தமிழா இதை விட பிச்சை எடுக்கலாம்.!!!

 11. krish

  அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!
  …………..
  …………..

  உங்களின் ரசிகன்

  _________________

  இது ஒரு டெஸ்க் ஒர்க். அடுத்து எந்திரன் வெளியாகும் தருணத்தில் இந்த மாதிரி ஒரு டெஸ்க் ஒர்க் வெளியாகும். அதையெல்லாம் இங்கே தர வேண்டாம், க்ரிஷ். உங்கள் கருத்தை மட்டும் எழுதுங்கள்.

  -வினோ

 12. tamila

  என்திரன் படம் பாக்காம போய்டா என்ன பண்றது

 13. tamilan

  வினோ தமிழ் நாடும் தமிழும் தமிழரும் முன்ன விட தெளிவா இருக்காங்க.

  திரும்பவும் அவங்கள முட்டாள் ஆக்கமா இருக்க சொல்லுங்க.
  வளர்த்து விடுவது என்றால் ஒரு தமிழன வளர்த்து விடுங்க.

  வினோ சொல்லுங்க தமிழன் சோறு சூடு சொரணை இல்லாதவனா?
  __________________

  தமிழன் சூடு சொரணை பத்தியெல்லாம் தேர்தலுக்குத் தேர்தல் கிழியுதே. தமிழனை ஒரு தமிழன் அங்கீகரிக்க பயப்படுகிறான். நிஜத்தில் நியூஸிலாந்துக்காரன் வந்து பரிந்து பேச வேண்டியிருக்கிறது. இந்த நாட்டுக்கு இப்போது தேவை நல்ல மனிதர்கள்!

  -வினோ

 14. bala

  இந்த சப்பைகட்டு தானே வேணாங்குறது?
  சோத்துக்காக அலையும் பிண்டங்கள் இல்லை நாங்கள்!
  இது முதலயே சொல்லி இருந்தா ஒரு நியாயம் இருக்குண்ணு சொல்லலாம்?
  உங்களுக்கென்ன சோறுபோட்டாவது எந்திரனை ஓடவைச்சிரணும்.
  எல்லாம் எங்க தலையெழுத்து…

 15. safiya sridhar

  தலைவா, எத்தனயோ சொந்தக்காரங்க கல்யாண பிசியில் சொல்லுவதற்கு மறந்துபோறது மாதிரி, நீங்களும் மறந்து இருப்பிங்க, ஆனால் இது எதையும் எதிர்பார்க்காம தானா சேர்ந்த கூட்டம், அன்றைக்கு திருமணத்துக்கு வந்தவர்கள் எல்லோரும் சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்க்கவந்தவர்கள், நாங்கள் அபூர்வராகங்கள் காலத்திலிருந்து தலைவராக பார்த்தவர்கள் , எதுவாக இருந்தாலும் பரவாய்இல்லை வாழ்க மணமக்கள்,

  என்றும் உங்களுடன்
  சபியா ஸ்ரீதர்
  சிங்கப்பூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *