BREAKING NEWS
Search

போதும் இந்த ‘சுகோய்’ புராணம்!

யாருக்கு வேணும் இந்த சுண்டைக்காய் சாதனை!

sukhoiநேற்றிலிருந்து அல்லோல்படுகின்றன அச்சு மற்றும் எலெக்ட்ரானிக் ஊடகங்கள்.

எதற்காக?

நாடு ஏதேனும் புதிய அறிவியல் சாதனத்தைக் கண்டுபிடித்துவிட்டதா…

இந்தியாவில் பிறந்து, வெளிநாட்டுக்கெல்லாம் போகாமல், இங்கேயே சாதித்த யாராவது நோபல் பரிசு வென்று விட்டார்களா?

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் இருக்கிற கொஞ்ச நஞ்ச நிலத்தையும் இனி விஷமாக்குவதில்லை என அரசு சபதமெடுத்துவிட்டதா?

‘கிரிக்கெட் என்ற இந்த கிரிமினல் – லஞ்ச விளையாட்டைத் தூக்கியெறியுங்கள்; இனி இந்த மண்ணின் மைந்தர்கள் விளையாடும் விளையாட்டுக்குத்தான் இனி முக்கியத்துவம்’ என்று அரசு அறிவித்துவிட்டதா?

நாட்டில் இனி டிவி சீரியலே ஒளிபரப்பக் கூடாது என புதிதாய் சட்டம்தான் வந்துவிட்டதா….

ம்ஹூம்… அப்படியெல்லாம் ஏதாவது நடந்திருந்தால் சொந்த செலவில் ஸ்வீட் வாங்கிக் கொடுத்திருக்கலாமே!

(இப்படியெல்லாம் நடந்தால் அதை ஒரு சாதனையாகக் கொண்டாடவும் நமது மீடியா உலகம் தயாராக இல்லை என்பது வேறுவிஷயம்!)

சரி… விஷயத்துக்கு வருவோம்!

ஒட்டு மொத்த மீடியாவும் இந்த இரண்டு தினங்களும் இருக்கிற எல்லா பிரச்சினைகளையும் ஏறக்கட்டிவிட்டு விழுந்தடித்துக் கொண்டு எழுதியது –

73 வயதில், இந்தியாவின் ஜனாதிபதி என்ற பதவியில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்த ஒரு மூதாட்டி, ‘டவுன் ஃபிளைட் (டவுன் பஸ் மாதிரி) ரேஞ்சுக்கு வேகம் குறைக்கப்பட்ட, மிகத் தாழப் பறக்கவிடப்பட்ட ஒரு சுகோய் விமானத்தில் பச்சைக் கலர் சூட் போட்டுக் கொண்டு 40 நிமிடம் பூனா நகரைச் சுற்றிப் பார்த்தாராம்.

இந்தியாவின் மாபெரும் சாதனை இது என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறப்போகிறதாம்… பத்திரிகை, டிவி, இன்டர்நெட், பல்செட், சேவிங் செட் இப்படி எங்கு பார்த்தாலும் இந்த சுகோய் மகாத்மியம்தான்!

அட… வெட்கங்கெட்டவர்களே…

உலகின் எத்தனையோ பகுதிகளில் அந்தகார இருளில், முள்வேலிகளில், பாலைவனச் சிறைகளில் சிறைப்பட்டுக் கிடக்கும் மானுடத்தின் அவலச் சின்னங்களை, இந்த 73 வயதில் தேடிப்போய் பார்த்து, அவர்கள் துயரம் தீர இந்த மூதாட்டி ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருந்தால் – அது சாதனை.

அதற்கு கின்னஸ் என்ற வெளக்கெண்ணெய் அங்கீகாரம் கூடத் தேவையில்லை.. மானுடமே தூக்கி வைத்துக் கொண்டாடும்.

வயதான கிழடுகளின் அரசியல் கூடாரத்துக்குள் அமர்ந்து நரித்தனமாகக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் சுகோய் விமானத்தில் சுகப்பயணம் செய்ய எத்தனை லட்சம் வீணானது என்ற கணக்கைப் போடக்கூட துப்பில்லாமல் மீடியாக்காரர்களோடு சேர்ந்து இந்த மக்களும் குதித்துக் குதூகலிக்கிறார்களே… இந்த வியாதி எப்போது தீரும்?

யோசித்துப் பார்த்தால் இந்த சுகோய் சாதனை கின்னஸில் வரவேண்டியது கூட நியாயம் என்றுதான் தோன்றுகிறது. அந்த கருமாந்திரத்தில் இடம்பெறத்தான் உருப்படியாக எதையும் செய்ய வேண்டியதில்லையே… கழிவறையில் நீண்ட நேரம் முக்கிக் கொண்டிருப்பது கூட சாதனை என்று அச்சேற்றும் வெட்டிக் கூட்டம்தானே அது!

ஜெய் ஹிந்த்!

-பிரபா
13 thoughts on “போதும் இந்த ‘சுகோய்’ புராணம்!

 1. Karen

  ரொம்ப சரியா சொன்னீங்க……நாட்டுல இப்ப இருக்கிற பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தம்மாவுக்கு இப்படி ஒரு குதூகலம் வேண்டிகிடக்கு……..

  குடியரசு தலைவர் என்ற முறையில் இந்தம்மா இதுவரை செய்த உருப்படியான வேலை ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா ( சாப்பிட்டதையும், பே…………….தையும் தவிர)

  நம்ம ஊர் ரங்கராட்டினத்துல ஏறி உட்கார்த்து கண்ணை மூடிகொள்வது போல இந்தம்மா இந்த விமானத்துல கண்ணை மூடிக்கிட்டு உட்கார்துகொண்டார்கள் , யாரோ ஓட்டுறான், அதுவும் சகல பாதுகாப்போடு, பூனா நகரின் மேல்……….இதுல என்ன உலக சாதனையோ தெரியல…….எனக்கென்னவோ இது இந்தியாவின் வேதனைபோல தான் தெரியுது.

  இதெல்லாம் நமது தலை எழுத்தோ அல்லது வாழ்நாள் சாபமோ தெரியல…..

 2. endhiraa

  சகிக்க முடியலைதான்…ஆனால் இந்த பத்திரிகைகளும் ரொம்ப ஓவராய் இதைப்பற்றியே முக்கியத்தனம் கொடுத்து எழுதுவதும் தான் மிகக் கொடுமையாய் இருக்கிறது !

 3. ksk

  இவிங்க எப்போவுமே குறை சொல்லியே பழக்கப்பட்டவர்கள் தானே. பிரபாகரன் செஞ்சது மட்டும் தான் இவிங்களுக்கு சரியாய் தெரியும். மத்தவங்கல்லாம் முட்டா பசங்கன்னு நெனைப்பு.

 4. ரஞ்சன்

  அடப்பாவி KSK-
  யாரை யாருடன் யாருடன் ஒப்பிடுவது என்ர விவஸ்தையே இல்லியா. பிரபாகரன் என்ற மாவீரன், நேர்மையாளனுக்கு முன் இவர்கள் எல்லாம் வெறும் தூசுப்பா.

 5. Manoharan

  இந்தக் கிழவிக்கு இதெல்லாம் தேவையா ? இவருக்கு முந்தைய ஜனாதிபதி அனுகுண்டையே தயாரித்தவர். இவர் சுண்டைக்காய் விமானத்தில் போனாராம். பேசாமல் இவரை மிக் விமானத்தில் அனுப்பியிருக்கலாம். ஒரேயடியாய் போய் சேர்ந்திருப்பார்.

 6. parthiban

  இந்திய நாட்டை பொறுத்த வரை ஜனாதிபதி பதவி என்பது வெறும் ரப்பர் ஸ்டாம்ப்….இதற்கு ஒரே விதிவிலக்கு நம்ம கலாம் அய்யா

 7. ksk

  Krishanthan , கோவணம் கட்டுற கூட்டத்திலே வேட்டி கட்டுறவன பார்த்தா பாவமாத்தான் தெரியும்.

  எல்லா இந்திய விவகாரங்களையும் நொள்ள கண்ணால பாக்குறவங்க பிரபாகரன் செய்யும் எல்லா விஷயங்கள மட்டும் அப்படியே ரொம்ப நல்ல கண்ணோட பாக்கிறத தான் சொன்னேன்.

  இந்தம்மா பண்ணினதது பெரிய விஷயமே இல்லேதான். மத்த பத்திரிக்கைகள் சொல்லறத குறை சொல்லற நீங்க, என்ன நல்ல விஷயத்தை சொல்லறீங்க?

  பிரபாகரன தவிர, வேற நல்ல விஷயமே இந்திய திருநாட்டிலே இல்லையா இந்திய குடிமக்களாகிய என்வழி நிர்வாகிகளே?

  தமிழ் நாட்டிலே , இந்தியாவிலே யாருமே நல்ல விஷயம் பண்ணல்லியா.? ஏன் எப்போவும் குறை சொல்லறத மட்டுமே எழுதுறீங்க.

  இந்திய ஊடகங்கள் தான் உலகத்திலேயே, தேவை இல்லாத விஷயங்கள அதிகமா எழுதுறவங்க. அதை குற்றம் குறை சொல்லி நேரத்த வீணடிக்கிறத விட்டுட்டு நல்ல விஷயங்கள நீங்க எழுதங்களேன். மத்தவங்களுக்கு முன் மாதிரியா இருங்களேன்.

  ஒருபக்கம் சினிமா காரங்கள தப்பு சொல்லறீங்க . ஆனா நீங்களும் உங்க வெப்சைட்லே சினிமா நடிகைகள் படத்த போட்டு தான் விளம்பர காசு பாக்குறீங்க. ஏன் இந்த முரண்பாடு?

 8. கோணியூசி கோபாலு

  ஐயோ! இனிமேல் வரப்போகிற கிழடுகள் எல்லாம் நானும் சாதனை பண்ண போகிறேன் என்று பறக்க போகின்றன.

 9. Dhanasekaran

  Seruppala adichia mathiri answers are here. Thanks and u advise to president padhavikku adippadi thaguthi illatha indha old lady’kku. Adhuvum indha vayasila indha padhaviye jasthi, idhula idhu parakkauma. But we are in position to accept this world most amazing record as an indian.

  Human Tigers never die; as a Tamilian

  Jai Hind!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *