BREAKING NEWS
Search

மேடையை ‘நனைக்கும்’ பார்த்திபன்!

மேடையை ‘நனைக்கும்’ பார்த்திபன்!

ழகான நடிகைகளை அல்லது popcorn - Copyஅப்படித் தெரிபவர்களை எந்த மேடையில் பார்த்தாலும் மேடையை நனைத்துவிடுவார் பார்த்திபன்… ஜொள் மழையில் (அவரோட பாணி!).

முன்பு விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் செம கிக்காக உடையணிந்து வந்த சினேகாவைப் பார்த்ததும், விருது கொடுப்பதை மறந்துவிட்டு, “சினேகாவைப் பார்த்தால் பொண்டாட்டி பீலிங் வரும். சமயத்துல பொண்டாட்டியாக்கிக்கவே தோணும்..” என்றெல்லாம் வழிய, நெளிந்தார் சினேகா.

இப்போது தமன்னாவிடம் அதற்கு மேல் வழிந்து தள்ளினார், ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில்…

“தினத்தந்தி குருவியார் பதில்களில், சூரியபிரகாஷ் என்பவர், ‘தமன்னா இடுப்பில் கிள்ளினால் என்னவாகும்?’ என்று கேட்டு இருக்கிறார். அதற்கு பதில், ‘அந்த இடம் சிவப்பாகி விடும்’ என்று இருந்தது.

எந்த இடம் என்று குருவியார் சொல்லவில்லை… இருங்க நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்க. தமன்னாவின் இடுப்பா அல்லது கிள்ளியவரின் கன்னமா?ன்னு சொல்ல வந்தேன்.

ஏற்கனவே தமிழ் ரசிகர்களின் மனதில் தமன்னா இடம் பிடித்து விட்டார். இந்த படம் ரிலீசானால், சொல்லவே வேண்டாம். தமன்னா பிரேமின் ஓரத்தில் நின்றாலே ஈரமாகிவிடும்… ரசிகர்கள் மனதெல்லாம்.

தமன்னா மார்பிள் சிலை மாதிரி இருக்கிறார். இந்த படம் ரிலீசுக்குப்பின், ஆண்கள் மனசுக்குள் சிலை வைக்கிற அளவுக்கு இருப்பார்…’ என பேசிக்கொண்டே போக…

-இந்த முறை விழாவுக்கு வந்திருந்தவர்களும் நெளிந்தார்கள்!




2 thoughts on “மேடையை ‘நனைக்கும்’ பார்த்திபன்!

  1. Srinivas

    // கிரி says:
    November 24, 2009 at 10:35 pm
    தலைப்பை பார்த்து கொஞ்சம் பயந்துட்டேன்
    //

    ஹ ஹ ஹா …நானும் தான் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *