BREAKING NEWS
Search

முற்போக்கான கொள்கையுடையவர் குஷ்பு! – முதல்வர் கருணாநிதி

ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்புவை நிறுத்தத் திட்டம்? – கருணாநிதி பதில்

சென்னை: முற்போக்கு கொள்கையுடையவர் குஷ்பு. திமுகவில் அவர் சேர்வது குறித்து கடந்த ஒரு மாதமாகவே பேசிக் கொண்டிருந்தோம்” என்றார் முதல்வர் கருணாநிதி.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, நடிகை குஷ்பு, தி.மு.க.,வில் இணைந்தார். முதல்வர் கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி, உறுப்பினர் படிவம் கொடுத்த குஷ்புவுக்கு உடனடியாக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. பின்னர் துணை முதல்வர் முக ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் பேராசிரியர் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்டோருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

பின்னர் முதல்வர் கருணாநிதி கூறும்போது, ”திருமதி குஷ்பு சுந்தர் இன்று (நேற்று) திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். அவரை கழகத்தின் சார்பில் வரவேற்று உறுப்பினராக பொறுப்பேற்க வழிவகை செய்து, உறுப்பினராகவும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்ற நற்செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்போக்கான கொள்கையுடையவர் என்பதை அறிவேன். திராவிட இயக்க கொள்கைகளில் ஆழ்ந்த பற்று இருந்ததால்தான், ‘பெரியார்’ திரைப்படத்தில் குஷ்புவால், மணியம்மை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடிந்தது.

தி.மு.க.,வின் மகளிர் அணியினர், கட்சி வளர்ச்சிக்காக எத்தகைய பணிகளை ஆற்றுவார்களோ, அத்தகைய பணிகளை குஷ்புவும் ஆற்றுவார்,” என்றார்.

அவரிடம் நிருபர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்ப, அவற்றுக்கு முதல்வர் அளித்த பதில்:

குஷ்புவுக்கு ராஜ்ய சபா எம்.பி. அல்லது எம்எல்சி போன்ற பதவி கொடுக்கப்படுமா?

நானோ, பேராசிரியரோ, ஸ்டாலினோ, எவரும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு தான் கட்சியிலே எங்களை இணைத்துக் கொண்டோம் என்று இல்லை. எங்களுடைய உழைப்பையும், ஆர்வத்தையும் பார்த்து, கட்சியில் உள்ளவர்கள் எங்களை இந்த இடங்களில் அமர்த்தியிருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் குஷ்பு சேரப்போவதாக செய்தி வந்திருந்ததே?

பேப்பரில்தானே (சிரிப்பு)… காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும்தான் இப்போது கூட்டணியிலே இருக்கின்றனவே!

குஷ்புவை திடீரென்று கட்சியில் சேர்த்துள்ளது பற்றி?

மாலை 4 மணிக்கு சொன்னதால், உங்களுக்கு திடீரென்று தெரிகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அவர் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டு அதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

தி.மு.க.,வில் குஷ்பு சேர வேண்டும் என நிர்பந்தம் செய்யப்பட்டதா?

யாரையும் நிர்பந்தப்படுத்தி கட்சியில் சேர்க்கும் கேவலமான ஒரு முறையை நாங்கள் கடைபிடிப்பதில்லை. குஷ்புவும் அந்த முறைக்குப் பணியக்கூடியவர் அல்ல. விரும்பி வந்து சேர்ந்திருக்கிறார்.

தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்புவை போட்டியிட வைப்பீர்களா?

அப்படி ஏதும் ஐடியா இல்லை…

சுப்ரீம் கோர்ட்டில் அவர் வெற்றி பெற்றது தி.மு.க.வில் சேர ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?

அதுவும் மேலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

-இவ்வாறு முதல்வர் கூறினார்.

கனவு நிறைவேறியது! – குஷ்பு

தொடர்ந்து நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:

முக தலைவர் முன்னணியில் கட்சியில் இணைய வேண்டும் என்று நீண்ட நாள் கனவு. அது இன்று நிறைவேறி இருக்கிறது.

மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகளில் தி.மு.க.தான் சிறப்பாகச் செயல்படுகிறது. அதன் கொள்கை பிடித்திருந்ததால் சேர்ந்திருக்கிறேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும், அவர்களின் கருத்தை எடுத்துச் சொல்ல முழு சுதந்திரம் கொடுக்கும் கட்சி தி.மு.க.தான்.

நடிப்பு எனது தொழில். தொடர்ந்து ‘டிவி’யிலும், சினிமாவிலும் நடிப்பேன். தி.மு.க., கட்சிக்கு முழு ஈடுபாட்டோடு உழைப்பேன். காங்கிரஸ் மீது பற்று இருக்கிறது என்று தான் சொன்னேன்; அதில், சேரப் போகிறேன் என்று நான் சொல்லவில்லை…” என்றார் குஷ்பு.
14 thoughts on “முற்போக்கான கொள்கையுடையவர் குஷ்பு! – முதல்வர் கருணாநிதி

 1. Raja

  //முற்போக்கான கொள்கையுடையவர் குஷ்பு
  முற்போக்கு கொள்கைனா என்னங்க வினோ. உன்மையா சந்தேகம் வந்துருச்சு.

 2. குமரன்

  /// கருணாநிதி கூறும்போது, ”குஷ்பு தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அவர் முற்போக்கான கொள்கையுடையவர் என்பதை அறிவேன். ///
  /// தி.மு.க.,வின் மகளிர் அணியினர், கட்சி வளர்ச்சிக்காக எத்தகைய பணிகளை ஆற்றுவார்களோ, அத்தகைய பணிகளை குஷ்புவும் ஆற்றுவார்,” என்றார்.///

  ஐயோ பாவம் மகளிர் அணியினர், அவர்கள் இத்தனை நாளாக காதும் காதும் வைத்தது போலக் “கமுக்கமாகச்” செய்து வந்த “பொதுச் சேவையை” தலைவர் இப்படி பகிரங்கமாகப் போட்டு உடைத்துவிட்டாரே!

 3. குமரன்

  ///தி.மு.க.,வில் குஷ்பு சேர வேண்டும் என நிர்பந்தம் செய்யப்பட்டதா?

  யாரையும் நிர்பந்தப்படுத்தி கட்சியில் சேர்க்கும் கேவலமான ஒரு முறையை நாங்கள் கடைபிடிப்பதில்லை. குஷ்புவும் அந்த முறைக்குப் பணியக்கூடியவர் அல்ல. விரும்பி வந்து சேர்ந்திருக்கிறார்.//

  கருணாநிதியின் குசும்பான பேச்சு உலகம் அறிந்ததே. “கட்சியில் சேர்க்கும்” என்ற இருவார்த்தைகளை மட்டும் எடுத்துவிட்டுப் படியுங்கள். அவருக்கு இந்த வயதிலும் எத்தனை குசும்பு என்று.

 4. சூர்யா

  இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்…!!!

 5. sakthivel

  //காங்கிரஸ் மீது பற்று இருக்கிறது என்று தான் சொன்னேன்; அதில், சேரப் போகிறேன் என்று நான் சொல்லவில்லை…”//
  -அரசியல்வாதிக்கான தகுதிக்கு இதுவே போதும்.

 6. mohamed ali jinnah

  அரசியலில் எதுவும் நடக்கலாம் எப்படியும் நடிக்கலாம் எல்லா வேடிக்கையும் பார்க்கலாம்

 7. prasanna

  இப்போ எல்லாம் நடிகைகளுக்கும் அரசியல் அசை வந்துவிட்டது !!!!!
  என்னதா சொல்றது ,செரியன காமெடிதான் போங்க 🙂 🙂 :):)

 8. Chozhan

  “முற்போக்கான கொள்கையுடையவர் என்பதை அறிவேன்.” முற்போக்கு என்பது கற்ப்புக்கரசி குஷ்பு கூறிய கருத்துகளா? என்பதை யாராவது விளக்கவும்.

 9. buruhani

  மீண்டும் ஒரு எம். ஜி{குஸ்பு} ஆர். பாவம் கருணாநிதி.மு.க ஸ்டாலின் பாவம்
  நிஜத்தில் ஜெய்த்தது ஜெயலலிதாதான்.காலம் பதில் சொல்லும் பாருங்கள்,

 10. Manoharan

  தயவு செய்து குஷ்புவை தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழில் உரை நிகழ்த்தச் சொல்லவும்.கூட்டம் அதிகமானால் அதை குறைக்க இதுதான் ஒரே வழி.

 11. eelam tamilan

  Great to see Tamil Nadu got new cultural and Women service minister… Hope Karuna will give position to her… What to say… No more comments on this…

 12. palanivel

  முற்போக்கு கொள்கையுடையவர் குஷ்பு. நல்லா வாயில வருது . குஷ்பு போன்றவர்களை சேர்த்து தான் கட்சி வளர்க்கனுமா . தமிழ் நாட்டு மக்களின் சிந்தனை மட்டம் அந்தளவுக்கு தரம் குறைந்ததா?

 13. balaji

  இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்…!!!

 14. Muthu

  அதிமுகவில் எம்ஜியாருக்கு பிறகு ஜெயலலிதா. திமுகவில் கருணாநிதிக்கு பிறகு மானம் கெட்ட குஷ்புவா. (அழகிரி சண்டை போட இன்னொருத்தி வந்து விட்டாள்.) தமிழ் நாடு மக்களுக்கு கொஞ்சம் நஞ்சம் இருக்கும் சூடு சொரணையும் இல்லாமல் மழுங்கடிக்க செய்யும் வேலையை தான் இந்த கருணாநிதி செய்து கொண்டு இருக்கிறார்.. தமிழை கொலை செய்யும் நாசகாரியை கட்சியில் சேர்த்து கொண்டு கொட்டம் அடிக்கும் எந்த ஆள் தமிழ் இன தலைவனா.. தமிழ் இனத்தில் இருக்கவே தகுதி இல்லாதவன். தமிழ் இனம் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்றால் இந்த நயவஞ்சக நரிகள் கூட்டத்தை ஒழிக்க வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *