BREAKING NEWS
Search

முரண்பட்டு நிற்கும் தமிழர் தளங்கள்!

முரண்பட்டு நிற்கும் தமிழர் தளங்கள்!

பிரபாகரன் ‘மரணம்’ குறித்து சமீபத்தில் புதினம் இணையதளம் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.

அந்தக் கட்டுரை பிற இணைய தளங்கள் மற்றும் அச்சு ஊடகங்களிலும் மீளப் பிரசுரிக்கப்பட்டு, தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.leader_20090610002

காரணம் ‘பிரபாகரன் கொல்லப்பட்டார்’ என்று விதவிதமான படங்களை சிங்கள ராணுவம் வெளியிட்டபோதும், அதை இந்தியா அங்கீகரித்த போதும் கூட அமைதி காத்தது புதினம்.

புலிகளின் மற்றொரு ஆதரவு இணைய தளமான தமிழ்விண் கூட, ‘பிரபாகரன் மரணம்’ என்று செய்தி வெளியிட்டு, மக்களின் கோபத்துக்கு ஆளானது. ஆனால் அப்போதும் புதினத்தில் மட்டும் எந்த செய்தியும் இல்லை. ஆனால் முதல்முறையாக வழுதி என்பவரது கட்டுரை மூலம், ‘அந்தச் செய்தி’யை உறுதிப்படுத்தியிருந்தது புதினம்.

இது புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் நடுநிலை பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னமும் உறுதிப்படுத்த முடியாத செய்தியை வைத்தே, இலங்கை ராணுவம் தாங்கள் பெரிதும் எதிர்பார்த்த குழப்பச் சூழலை தமிழர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக புலம் பெயர் தமிழர் மத்தியில் ஒரு குழப்பத்தை தோற்றுவிக்கும் சிங்கள ராணுவத்தின் சதிக்கு இந்த தளங்களும் இரையாகிவிட்டனவோ என புலிகள் ஆதரவாளர் தரப்பில் கருதப்படுகிறது.

இதுகுறித்து புலிகள் தரப்பின் மற்றொரு முக்கிய இணையதளமான அதிர்வு இப்படி கருத்து வெளியிட்டிருந்தது:

முன்னாள் சென்றோரின் பின்னால் சென்றவரின் முதுகு தெரிந்தது!

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே…! என்ன ஒரு ஆக்கம்!!

ஆம்… நாம் எதைப்பற்றி கூறுகின்றோம் என்பதை எமது வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

கடைசி நாள் போரில் 20,000 மக்கள் கொல்லப்பட்டும், முழு ஆண்டில் நடைபெற்ற போரில் 53,000 பேர் வரை கொல்லப்பட்டு, ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் தடுப்புமுகாம்களில் கைதிகளாக உள்ள இந் நிலையில் இப்படி ஒரு விமர்சனம் தேவையா?

வெளிநாடுகளில் பல தமிழ் ஊடகங்கள் ஆய்வுக் கட்டுரை என்ற போர்வையில் தமிழர்களின் வீரத்தை, மானத்தை, தன்னம்பிக்கையை ஆராய்ச்சி செய்கின்றன. இவர்கள் எழுதும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல மெல்ல மெல்ல எம் தமிழின மக்களிடையே நஞ்சைக் கலக்கின்றன.

இவ்வாறான கட்டுரைகள் நமக்குத் தேவை என புலம்பெயர் தமிழர்கள் கேட்டார்களா ?

இவற்றை எல்லாம் பக்கம் பக்கமாக ஏன் எழுதவேண்டும்? இதில் இருந்து இவர்கள் கூற வருகின்ற கருத்துக்கள் தான் என்ன? இவர்களை யார் தூண்டி விடுகிறார்கள் என்பது தற்போது நன்கு விளங்கியிருக்கும்.

நாம் தற்போது மிக முக்கியமான கால கட்டத்தில் நிற்கிறோம் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தளர்வடைந்துள்ள நிலையில், அது அரசியல் போராட்டமாக உருமாறி தற்போது புலம்பெயர் தமிழர்களாகிய எமது கைகளில் வீழ்ந்துள்ளது. நாம் அதனை செவ்வனவே செய்துவருவதால், பெரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு தள்ளப்பட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. இவாறாக எமது போராட்டம் விரிவடைந்து வரும் நிலையில் புலம் பெயர் தமிழர்களின் மனங்களை திசை திருப்பும் நோக்கில் இக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

தமிழீழ தேசிய தலைவர் பற்றி பட்டிமன்றம் நடத்த யாருக்கும் இங்கு அருகதை இருக்கிறது? தனது 14 வயதில் தனி ஈழம் காணப் புறப்பட்ட வீரன். தமிழ் வரலாற்றில் மாவீரன் நெப்போலியனை ஒத்த வீரனாகப் பார்க்கப்படுபவர், ஒரு கணினியும் தட்டச்சும் இருந்துவிட்டால் யாரும் கட்டுரை எழுதிவிடலாம். அதனை வாசிக்கும் எம் இன மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இக்கட்டுரையில் தமிழீழப் போராட்டத்திற்கு மிகவும் உதவியவர்கள் என்று சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பது தற்போதைய விவாதம் அல்ல. போராட்டமே எமது முழுமூச்சு, ஈழத்தில் நாள் தோறும் அல்லலுறும் எமது மக்களின் துயர் துடைக்கவேண்டும், அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்கவேண்டும், அதை விடுத்து எமது திசையை திருப்ப முயலும் இவ்வாறான ‘முன்னாலே சென்றோரின் பின்னால், அல்லது பின்னாலே சென்றோரின் முன்னால்…’ எனக் கட்டுரைகள் எழுதி கவிழ்க்க நினைப்பவர்களை நாம் இனம் காணவேன்டும்.

கவிதை பாடிக் கவிழ்த்தார் கலைஞர்! இன்று கட்டுரை எழுதிக் கவிழ்கிறான் கயவன். மீண்டெழுவோம் தமிழர்களே… ஒரு மனதாய் போராடுவோம், அதுவும் ஒன்றுபட்டுப் போராடுவோம்… எமது வெற்றி நிச்சயம்!

-இவ்வாறு அதிர்வு தளம் கூறியுள்ளது.
One thought on “முரண்பட்டு நிற்கும் தமிழர் தளங்கள்!

  1. Suresh கிருஷ்ணா

    என்ன சொல்ல… வருத்தமாக உள்ளது. தலைமையைப் பற்றி இப்போது பேசாமல் இப்போது குழப்பம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாமல் இருப்பதே நல்லது…

    Suresh கிருஷ்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *