BREAKING NEWS
Search

முரசு சின்னம் கிடையாது… மனு தள்ளுபடி… தேமுதிகவுக்கு ஆரம்பமே சறுக்கல்!


முரசு சின்னம் கிடையாது… மனு தள்ளுபடி… தேமுதிகவுக்கு ஆரம்பமே சறுக்கல்!

பர்கூர்: பர்கூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மற்றும் dmdk_vijayakanthஅக்கட்சியின் மாற்று வேட்பாளர் ஆகியோரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதனால் பர்கூர் தொகுதியில் தேமுதிக போட்டியிடாத நிலை ஏற்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் விஜய்காந்த் மற்றும் தொண்டர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இந்த திடீர் ‘தள்ளுபடி!’

சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பி தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அப்போது பர்கூர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட மனு செய்திருந்த வேட்பாளர் சந்திரனின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த சுந்தரராஜன் மனுவும் தள்ளுபடியாகி விட்டது.

கம்பம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 23 மனுக்களில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இளையாங்குடியில் தாக்கலாகியிருந்த 17 மனுக்களில் 8 மனுக்கள் தள்ளுபடியாகி விட்டன. 9 மனுக்கள் ஏற்கப்பட்டன.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 22 மனுக்களில் 11 ஏற்கப்பட்டது. 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இப்போதைய நிலவரப்படி, பர்கூர் தொகுதியில் தேமுதிக போட்டியிடாது. நான்கு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

முரசு சின்னமும் கிடையாதாம்!

இந்த இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு கிடைத்துள்ள இன்னொரு அதிர்ச்சி, அக்கட்சிக்கு முரசு சின்னம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்.

இந்தக் கட்சியை அங்கீகாரம் பெறாத கட்சிகள் பட்டியலில் தேர்தல் கமிஷன் சேர்த்துள்ளது. அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு ஒரே மாதிரியான சின்னம் தரமாட்டார்கள் என்பதால், இம்முறா முரசு சின்னம் கிடைப்பது கடினமாம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலை தே.மு.தி.க. சந்தித்த போது, தங்கள் கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அந்த கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து தே.மு.தி.க. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் முரசு சின்னம் ஒதுக்க, கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி பாராளுமன்ற தேர்தலில் முரசு சின்னம் கிடைத்தது. இது போல விடுதலை சிறுத்தைகளுக்கும் ஒரே சின்னம் கிடைத்தது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு மட்டும் தான் பொருந்தும். எனவே தே.மு.தி.க., விடுதலை சிறுத்தை கட்சிகளை பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளாகவே கருத வேண்டும் என்று அனைத்து தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து சுற்றறிக்கை வந்துள்ளது.

இதுவும் தேமுதிகவை உற்சாகமிழக்கச் செய்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *