BREAKING NEWS
Search

முதல்வர் விழாவில் ‘இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி’!

முதல்வர் விழாவில் ‘இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி’!

நாங்கள் அவரை உலக சூப்பர் ஸ்டார்னு குறிப்பிட ஆரம்பிச்சிட்டோம்… நீங்க இப்போதான் இந்திய சூப்பர் ஸ்டார்னு சொல்றீங்களா?’ என்று யாரும் சண்டைக்கு வந்துவிடாதீர்கள்.

இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி என்று நாம் குறிப்பிடவில்லை… முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில்தான் இப்படி குறிப்பிட்டுள்ளனர், விழா ஏற்பாட்டாளர்கள்.

ரசிகர்கள், மீடியா நண்பர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினியை இந்திய சூப்பர் ஸ்டார், உலக சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டாலும், அதிகாரப்பூர்வமாக, அதுவும் மாநில முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் அழைப்பிதழில் இப்படிக் குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறை (விரைவிலேயே ‘உலக சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழி அழைப்பிதழ்களில் இடம்பெறட்டும்!).

என்ன விழா…?

பா விஜய் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க, முதல்வர் கருணாநிதி கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ள 75 வது படமான இளைஞன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை சென்னையில் நடக்கிறது.

இதற்கான அழைப்பிதழையே மிகப் பிரமாண்டமான புத்தக வடிவில் வடிவமைத்துள்ளனர்.  அழைப்பிதழின் ஒவ்வொரு பக்கத்திலும் பா விஜய்யின் கவிதைகள்.

இந்த பிரமாண்ட அழைப்பிதழில்,

“பாட்டுலகத் தலைவர், காவியக் கவிஞர் வாலி தலைமையேற்க,

முத்தமிழ் அறிஞர், இளைஞனை இயற்றிய இளைஞர், முதல்வர் கலைஞர் பாடல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றுவார்.

‘இந்திய சூப்பர் ஸ்டார்’ உயர்திரு ரஜினிகாந்த் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றுவார்”

-என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆஹா… ஒரு சின்ன (அதாவது 1 வாரம்!) இடைவெளிக்குப் பிறகு ரஜினி பேச்சைக் கேட்கப் போகிறோம்!

இளம் நடிகர்கள் எம்ஜிஆர் – ரஜினியை ஃபாலோ பண்ணுங்க! – விசி குகநாதன்


டந்த சில தினங்களாகவே நடிகர் ஆர்யா விவகாரம் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது தமிழ் சினிமா உலகில். துபாயில் நிகழ்ச்சியொன்றிற்குப் போன ஆர்யா, அங்கு கூடியிருந்த மலையாள மக்களைப் பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார்.

அந்த நேரம் பார்த்து ஒரு மலையாள சேட்டன் எழுந்து, ஏன் நீங்கள் மலையாளத்தில் நடிக்கவில்லை? என்ற கேள்வியைக் கேட்டார். அவ்வளவுதான்… ஆர்யா தன்னிலை மறந்துவிட்டார்.

“நான் ஒரு மலையாளின்னு சொல்லிக்கிறதுல பெருமைப்படறேன். நீங்க என்னை மலையாளப்படத்தில் நடிக்கச் சொல்றீங்க. ஆனால் அதுக்கு நிறைய திறமை வேணும். தமிழில் அப்படியில்ல, சும்மா வந்து போனாலே நிறைய பணம் தர்றாங்க. அங்க இந்த அளவுக்கு திறமையும் உழைப்பும் தேவையே இல்லை.  எனக்கு ரிஸ்க் இல்லாத சிறிய கதாபாத்திரம் ஏதாவது இருந்தால் கொடுங்கள்… மலையாளத்தில் வந்து நடிக்கிறேன். இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்த்தால் ரெம்ப ஆச்சரியம்! தமிழ்நாட்டில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்க்கவே முடியாது!!” என்றார்.

ஆர்யாவின் இந்தப் பேச்சைத்தான் மறைமுகமாக தாக்கினார் ஃபெப்ஸி தலைவர் வி சி குகனாதன். ஆனால் குகநாதனுக்கு  நடிகர் சங்கம் கண்டனம் தெரிவிக்க, உடனே நடிகர் சங்கத்தைக் கண்டித்து ஃபெப்ஸி நிர்வாகிகள் கடிதம் எழுதினர்.

இந்தப் பிரச்சினையை சில அரசியல் கட்சிகளில் கையிலெடுத்து  ஆர்ப்பாட்டம் நடத்தி, ஆர்யா படத்துக்கு செருப்பு மாலையெல்லாம் போட்டார்கள்.

இந்த நிலையில்,  பிரச்சினையை சுமூகமாக முடித்துக் கொள்வதாகக் கூறி குகநாதன் புதன்கிழை ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,”இன்றைய இளம் நடிகர்கள்  எம்ஜிஆரைப் போலவும் ரஜினியைப் போலவும் மற்றவர்கள் மனம் புண்படாத வகையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். நடந்து கொள்ள வேண்டும். இவர்களைப் போலவே, தான் வாழும் இடத்தைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் கொண்டிக்க வேண்டும்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்தை சொல்வதோடு நில்லாமல் குகநாதனும் கூட ஃபாலோ பண்ணலாம்… தப்பில்லை!


-என்வழி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *