BREAKING NEWS
Search

‘முதல்வர் பதவி ஆசையில்லை… கோட்டைக்குப் போகும் எண்ணமில்லை… போனால் தவறுமில்லை!’

‘முதல்வர் பதவி ஆசையில்லை… கோட்டைக்குப் போகும் எண்ணமில்லை… போனால் தவறுமில்லை!’


திருப்பரங்குன்றம்:
“எனக்கு முதல்வர் ஆகும் ஆசையும் இல்லை. கோட்டையில் அமரும் எண்ணமும் இல்லை. அது இருந்தால் தவறும் இல்லை,” என நா.ம.க., தலைவர் நடிகர் கார்த்திக் கூறினார்.

042707மதுரையில் நிருபர்களிடம் நடிகர் கார்த்திக் கூறியதாவது:

தேர்தலுக்கு பின், கூட்டணி கட்சிகள் என்னை கண்டு கொள்ளவில்லை. யாரும் என்னை மதிக்கவும் இல்லை.

தேர்தல் நேரத்தில் 180 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்தேன். அதற்கே எனக்கு மக்கள் இந்த அளவிற்கு ஓட்டளித்துள்ளனர். 500 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்திருந்தால் வெற்றி அடைந்திருப்பேன்.

12 மாவட்டங்களில் கட்சி வளர்ந்துள்ளது. எனக்கு முதல்வர் ஆசை இல்லை. கோட்டையில் அமரும் எண்ணமும் இல்லை. அது இருந்தால் தவறும் இல்லை.

நான் ஆட்சிக்கு வந்தால் கல்வி, உணவு இலவசமாக வழங்குவேன்.

துணை முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன். அவர் மக்களுக்கு நன்மை செய்கிறார். தி.மு.க.வின் மக்கள் பணி தொடர்ந்தால் எதிர்காலத்தில் கூட்டணிக்கு தயார், என்று சீரியஸாகச் சொன்னார் கார்த்திக்.
கட்சியைக் கலைத்திருப்பேன்! – சரத்குமார்

sarath‘திமுக அரசு தொலைநோக்குத் திட்டத்தோடு செயல்பட்டிருந்தால் எனது சமத்துவ மக்கள் கட்சியைக் கலைத்திருப்பேன்’, என்று நடிகர் சரத்குமார் அவரது கட்சிக்காரர்களை அதிர வைத்துள்ளார்.

“தொலைநோக்குத் திட்டத்தோடு தி.மு.க., அரசு செயல்பட்டு இருந்தால், நான் எனது கட்சியைக் கலைத்து விட்டு, ‘இவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று மக்களிடம் பிரசாரம் செய்திருப்பேன்”, என்று வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

கூட்டணியா… வந்தா பேசலாம்! – விஜய்காந்த்

கூட்டணிக்காக நானாக யாரையும் தேடிப் போக மாட்டேன். ஆனால் வந்தால் பேசுவேன் என்று விஜய்காந்த் கூறியுள்ளார்.

vijayakhanthஇதுகுறித்து தனது தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியது:

“தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ளது. அதிக பட்சமாக அடுத்த ஆண்டு வரலாம். கூட்டணிக்காக நாம் யாரிடமும் பேச முடியாது; நாம் முயற்சி செய்ய வேண்டும்.

தேர்தல் வரும் போது, கூட்டணி என்று நம்மிடம் வரும்போது அதை பார்த்துக் கொள்ளலாம். சட்டசபை தேர்தலுக்காக நம்மை நாம் இப்போதே தயார்படுத்த வேண்டும். எதற்கெடுத்தாலும் நமது நிர்வாகிகளை குறை சொல்வதை விட்டு விட்டு, அனைவரும் ஒன்றிணைந்து மக்களிடம் சென்று கட்சியை வளர்க்க உழைக்க வேண்டும். அப்போது தான், சட்டசபை தேர்தலை நாம் எதிர்கொள்வது எளிதாகும்”, என்றார் விஜய்காந்த்.

சமக-வில் பொறுப்பா… ஆளை விடுங்க!

சரத்குமாரின் சமகவில் பொறுப்பு தந்தால் நிச்சயம் ஏற்க மாட்டேன். ஆளை விடுங்க சாமி என்று சொல்லிவிடுவேன் என்று சரத் மகள் வரலட்சுமி கூறியுள்ளார்.

என்னை, கட்சியின் மாணவர் பிரிவுக்குத் தலைவர் ஆக்கப்போறதா சொல்லிட்டு இருந்தாங்க; ஆனா, கட்சிப் பதவியெல்லாம் கொடுத்தா நிச்சயம் ஏத்துக்க மாட்டேன். அப்பாவுக்காக பிரசாரம் மட்டும் பண்ணுவேன், என்றார் வரலட்சுமி.
7 thoughts on “‘முதல்வர் பதவி ஆசையில்லை… கோட்டைக்குப் போகும் எண்ணமில்லை… போனால் தவறுமில்லை!’

 1. Kamesh (Botswana)

  appappa intha mathiri thamaash potukkena irunga… oru madiri break ithu..
  konja neram ellthayum maranthu sirichittu relax pannalam…

  yaruvena betti kudukkalam etha venaalum sollalaam indiavula nijamalume perchurimai keethungo…

  yosikkamale eppadi thaan itha mathiri comedy pandrangalo..

  Kamesh

 2. Yenge Manamulla Thamizhan

  Mr. Karthik Herovaga irrundhu Comedianaga mariyirukirar.
  Sarathkumar unmaiyil oru mananala Maruthuvarai aalosithaal nallathu.!!
  Vijayakanth oru thooimayana arasiyilvathi yendru kadandha naadalumandra therthalil nirubithu irrukirar. Eelathamizhal piritchanai kurithu vaye thirakatha uthamar!!!

  Thamizh nattu arasiyalviyathigal matrum Ithupondra Hero comediangalai paarthu pakkathu manilathukaaran allamal Ilangai Singalavanum kaaranum sirikindran.

  Thamizh nattu makkal palaper muttalgalaga irrukumvarai Ithupondravargal ippadi comedy seithukonduthaan irrupargal.Manam ketta Thamizhnattu thamizhan!!
  Manamulla thamizhan yendral naan Eelathu thamizhanai thaan solven!!

 3. Manoharan

  தேசிப் போக மாட்டேன். Lots of spelling mistakes are coming now in most of the posts. Pls take care Vino.

 4. Manoharan

  Karthik is really great. If Jayalalitha would have joined him in last election,
  she would have won in all 40 seats and who knows she might have asked PM post for Karthik. Jaya has missed him. We have missed a great leader Karthik as PM.
  I promise i m not blabbering in the influence of Alcohol

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *