BREAKING NEWS
Search

மீனவர் படுகொலை: கருணாநிதி கண்டனம்… பிரதமருக்கு ‘அவசர கடிதம்’!

தமிழக மீனவர் படுகொலை.. கருணாநிதி கண்டனம்… பிரதமருக்கு ‘அவசர கடிதம்’!

சென்னை: தமிழக மீனவர் செல்லப்பன் இலங்கை கடற்படையால் கொடூரமாக தாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இது குறித்து கடிதமும் எழுதியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடுமை புரிவதென்பது இது முதல் முறையல்ல. தொடர்ந்து நடைபெறும் தொடர்கதையாக உள்ளது.

தமிழக மீனவர்களின் இந்தத் துயர நிலை குறித்து, தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும், தொடர்புடைய அமைச்சர்களுக்கும் இதுவரை பல முறை நேரிலும், கடிதங்கள் மூலமும் கோரிக்கைகள் விடுத்தும் தமிழக மீனவர்களின் அவலம் நின்றபாடில்லை.

கண்டிக்கத்தக்கது: தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை சித்திரவதைக்கும், கொலைக்கும் ஆளாகும்போது மத்திய அரசிடம் நாம் முறையிடுவதும், அவர்களும் நம்மைச் சமாதானப்படுத்துகின்ற முயற்சியிலே ஒரு கடிதமோ, வேண்டுகோளோ இலங்கை அரசுக்கும் விடுப்பதும், அதற்குப் பிறகு சில நாள்களில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெறுவதும் வாடிக்கையாகிவிட்டது. மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.

இந்திய-இலங்கை அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்று ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்திலே கூட, தமிழக மீனவர்களின் இந்த நிலை குறித்து விரிவாகப் பேசப்பட்டு தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தால் கூட, அவர்களை தாக்குவதோ, கொலை செய்வதோ கூடாது என்றும், முறைப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர இதுபோன்ற செயல்களில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், அதற்கு மாறாக தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் இக் கொடுமையைக் களைய மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சி பற்றிய உண்மை விவரத்தை தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தியாக வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமருக்கு ‘அவசர கடிதம்!’

இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதம்:

கடல் பகுதியில், மீன் பிடிப்பதற்கான தகுதியைப் பெற்று இருக்கும் தமிழக மீனவர்களுக்கு, உடல் ரீதியாக எந்தவிதத்திலும் துன்புறுத்தக் கூடாது என்று, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறி, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு, இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு வருவது பற்றி நான் உங்கள் (பிரதமர் மன்மோகன் சிங்) கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

7-7-2010 அன்று இரவு நடந்த சம்பவம் தொடர்பாக, இன்று (8-7-2010) நான், அளித்த பத்திரிகை செய்தி நகலையும், இதனுடன் இணைத்துள்ளேன். அது என் சுய விளக்கம் ஆகும்.

எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அவர் கோரியுள்ளார்.

இக்கடிதத்தின் நகலை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோருக்கும் கருணாநிதி அனுப்பி வைத்துள்ளார்.

திமுக நாளை ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சென்னையில் திமுக சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அந்தக் கட்சியின் மீனவர் அணி அறிவித்துள்ள இந்த ஆர்ப்பாட்டம், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்பு நடத்தப்படுகிறது.

இத் தகவலை திமுக மீனவர் அணிச் செயலாளர் ஆர்.பெர்னார்டு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார். மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டிப்பதோடு, மத்திய அரசு இனியாவது துரித நடவடிக்கைகளை கடுமையாக எடுத்து மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இந்தப் போராட்டத்தில் தமிழக மீனவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

செல்லப்பன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி

இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான தமிழக மீனவர் செல்லப்பனின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த நிதி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மூலமாக உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




13 thoughts on “மீனவர் படுகொலை: கருணாநிதி கண்டனம்… பிரதமருக்கு ‘அவசர கடிதம்’!

  1. palPalani

    /*
    பிரதமருக்கு ‘அவசர கடிதம்’!
    */
    அப்ப தந்தி அடிக்கனும்னா நூத்துகனக்குல சாகனுமா?

    ஐயாக்கிட்ட போன் இல்லையா? இல்ல டொப்பி தலையன் யூஸ் பண்றதில்லையா?

    மினிஸ்டர் எல்லாம் நேரே போயி சொல்லமாட்டாங்கள?

    கடிதம் கட்டுரை வடிவிலா, இல்ல கவிதை நடையிலா எழுதப்பட்டது?

    எழுதிய கட்டுரை போஸ்ட் பண்ணியாச்சா?

    /*
    மத்திய அரசு இனியாவது துரித நடவடிக்கைகளை கடுமையாக எடுத்து மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    */
    எப்புடி, அடிச்சு போட்ட பிறகு வேகமா ஆஸ்பத்திரில சேக்கணுமா?

    ராஜ பக்சே பதவிக்கு ஆபத்துன்னு உடனே உள்துறையில இருந்து செலவுதுரை(உளவுத்துறை) வரை போறானுக, தமிழன் செத்தா கடிதம் தான் எழுதுராணுக!

  2. M.S.Vasan

    தமிழகத்தில் பொது தேர்தல் வர்றது, இலங்கைக்குத் தெரியாதா?
    நம்ம ஞாபாகசக்தி ஆறு மாதமாவது தாங்கும்முன்னு தெரியும்ல.

  3. eelam tamilan

    Hello vasan, no need 6 months.. just 1 week enough.. We have sun tv to make thing people to forgot every thing… or may publish some news like nithayantha or some thing… Every one will forgot this.. and additional bonus news as give cable TV or DVD player for each family for their vote and with good briyani rice on election day.. these all enough for to get success.. donot worry…..

  4. Guevara

    வாக்கு சீட்டை அடமானம் வைத்து இலவச டிவி, வேஷ்டி, சட்டை, சேலை, தங்கப்பவுண் என்று எத்தனயோ எத்தனயோ வாங்கியாச்சு. இனி பேரம் பேச என்ன மிச்சமிருக்கு ?

    அல்லது கலைஞ்ஞரிடம் இனியும் கேட்பதுக்குதான் எவருக்கு என்ன யோக்கியதை இருக்கு ?

    ஒரு பாழைய்போன கொடி பிடிக்கும் சமூகம் இருக்குமட்டும் அது அனைவருக்கும் கேடு தான். நாம் தான் தேடிக் களை எடுக்க வேண்டும்.

    சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று தெரியாமலா சொன்னங்க பெரியவங்க !!

  5. தனுசுராசி

    இவனுங்களும் திருந்த போகுரதுல்ல… நாமலும் காசு வாங்கிட்டு ஓட்டு போடுறத நிறுத்தப் போறது இல்ல…

  6. raja

    why the fxxx he sending newspaper article, is he chief minister of the state or what.. he cannot send an official report from TN government? why just letter,,,what the fxxx he doing in chennai..attending functions every evening. or he can send his someone from his family, he got 2 union ministers in family ..send one of them to meet PM …I think every tamilnadu citizen should support fishermen..Tamilnadu government should send 2 policemen in every fisherman boat as guards..if Indian government navy can’t protect tamilnadu citizens then TN government should..what you guys think??

  7. Cuddalore Shanthakumar

    சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட தமிழ் மீனவனின் உயிருக்கு இல்லையா?

  8. ram

    நம்ம வீட்ல யாருக்காவது சீட் வாங்கனும்னா நேர டெல்லி போவாரு இந்த பழம். வேற விசயம்னா கடிதம் எழுதிருவாறு…

  9. muthukumaran

    கேள்வி: “இறையாண்மை அப்ப்டின்ன என்னங்க? யாராவது விளக்குங்களேன்?”

    பதில்: “குடும்பத்துக்கு என்றால் நேரிலும், தமிழனுக்கு என்றால் கடிதம் மூலமும் காப்பாற்றப்படுவது இறையாண்மை!

    பேஸ்புக்கில் நண்பன் விமலாதித்தன் இட்டது

  10. Cuddalore Shanthakumar

    1975ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பால் தனது பதவிக்கும் அரசியல் வாழ்விற்கும் ஏற்பட்ட சோதனையை, நாட்டிற்கு சோதனை ஏற்பட்டுள்ளதாகக் கூறி அவசர நிலையை பிரகடனம் செய்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் நடவடிக்கையை நினைவூட்டுவது போல் உள்ளது தமிழக முதல்வர் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஒடுக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள்.

  11. Solvomelaa

    இதை பார்த்து நம்ம கண்ணாடி போட தாதா ( கருணாநிதி ) என்ன சொல்ல போறார் தெரியலையா அரசிலில் இதெலாம் சககசமா பா (கண்டாமணி மாதிரி ) சொல்வாரா ??? ஐ யோ ஐ யோ

  12. Dr. Suppandi

    அன்பர்களே.. என்று காலை நான் சுமார் 9 மணிக்கு எழுதியது..

    ———–begin quote———-
    Dr. Suppandi says:
    January 13, 2011 at 9:39 am

    தன குடும்பத்தார்க்கு மந்திரி பதவி வேண்டும் என்றால் டெல்லியில்
    நேரில் சென்று பேரம் பேசுவார். ஆனால் மீனவர மறைவுக்கு தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுவார்…

    “இது போல் சம்பவங்கள் இனியும் நடந்தால் தமிழ் மீனவனின் கை
    மீன் பிடித்து கொண்டிருக்காது” என மிரட்டல் அறிக்கை விடுவார்..
    அவரது attention மகள் நடத்தும் சங்கமம் நிகழ்ச்சியில் இருக்கிறது..

    -டாக்டர் சுப்பாண்டி
    ———end quote —————–

    எனது prediction சரியாகி விட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *