BREAKING NEWS
Search

‘மீண்டும் சேர்ந்து நடிப்பார்களா ரஜினி – கமல்?’

‘ரஜினி – கமல் இருவரும் சேர்ந்து நடிக்கும் சூழல் வரும்!’ – கே எஸ் ரவிக்குமார்

ஜினி – கமல் என்ற இரு சிகரங்களையும் ஒரே படத்தில் நடிக்க வைக்கப் போவதாக பலரும் சொல்லிவிட்டார்கள்.rajini-kamal-ajith-vijay-and-vikram

கே பாலச்சந்தர் கூட இதுபற்றிப் பேசியுள்ளார். ஆனால் இப்போது அப்படி ஒரு பிரமாண்ட சாதனையைச் செய்ய என்னால் முடியுமா? நிச்சயம் முடியாது! என மலைத்துப் போய்ச் சொன்ன விஷயம் அது.

சிவாஜி முடிந்த பிறகு, ரஜினி- கமல் இருவரும் நடிக்க, மணிரத்னம் ஒரு படத்தை இயக்குகிறார் என பரபரப்பாக அனைத்து நாளிதழ்- வார இதழ்களிலும் கவர்ஸ்டோரி வெளியானது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து கமலிடம் முன்பு கேட்டபோது, ‘அப்படியா… இது நீங்க சொல் நான் தெரிஞ்சிக்கிட்ட செய்தி…’ என்றார்.

சூப்பர் ஸ்டாரிடம் கேட்டதற்கு, அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வாரோ அதையே சொன்னார்!

ஆனால் மணிரத்னம் கடைசி வரை முயன்றும் அந்த முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

காரணம் இந்த இரு பெரும் கலைஞர்களையும் இணைத்துப் படமெடுப்பதில் உள்ள சவால்கள் அப்படி.
ரஜினி மற்றும் கமல் இருவருக்குமே இந்த சவால்கள் என்னவென்பது வெகு தெளிவாகப் புரியும் என்பதால், இதுபோல வரும் செய்திகளை ஒரு பார்வையாளர்களாகவே அவர்களும் பார்க்கிறார்கள்.

இருவரும் இணைந்து படம் செய்வார்களா இல்லையா என்பதை இந்த திரையுலகில் யாரும் தீர்மானிக்க முடியாது. அவர்களாகவே தீர்மானித்தால்தான் உண்டு. ஆனால் அதற்கு தீவிர முயற்சிகளை மட்டும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதை விட முக்கியம், இப்போது இருவரும் இணைந்து நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறதா என்பது. அந்தக் கேள்வியின் விளைவாகவே இந்த சிகரங்கள் தனித் தனி சிகரங்களாக பார்வையாளர்களை பிரமிக்க வைத்துக் கொண்டுள்ளன.

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் விகடனுக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்கூட கிட்டத்தட்ட இதைத்தான் கூறியுள்ளார். அந்தப் பேட்டியிலிருந்து இரு கேள்களுக்கான பதில்களை மட்டும் தருகிறோம்.

கேள்வி: தனித்தனியா கமல் – ரஜினியை இயக்கியிருக்கீங்க… ஒரே படத்தில் அவங்களை ஒண்ணு சேர்க்கலாம்ல…!‍

பதில்: அவ்ளோ பட்ஜெட் தாங்குற தயாரிப்பாளர் அமையணும்.

ravikumar

கமல் ரஜினி சேர்ந்து நடிக்கிற சூழல் மறுபடியும் வரும்னு நினைக்கிறேன். சேர்ந்து நடிக்கணும்னு அவங்களா நினைக்க மாட்டாங்க. யாராவது தூண்டிவிடணும்.

ஆனா இந்த விஷயத்துல நானா எதுவும் செய்ய மாட்டேன். போய்க் கேட்டா, ‘படம் பண்ணி பணம் பார்க்க ஆசைப்படறான்’னு நினைப்பாங்க.

அதனால அந்த மாதிரி விஷயத்தை நான் நினைச்சுக் கூடப் பார்க்கிறதில்ல.

கேள்வி: நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா…?

பதில்: இதுக்கு கருத்து சொல்ல நான் அருகதை இல்லாதவன். அப்படி நான் தப்புன்னு சொன்னா அது அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் இல்லையா. இவங்கள்லாம் இல்லாம தமிழ்நாட்டு அரசியலை நினைச்சுப் பார்க்க முடியுமா… முடிவு பண்ண வேண்டியவங்க ஜனங்க…

தனது நட்புக்குரிய உச்ச நட்சத்திரங்கள் பற்றியும், அவர்களைச் சுற்றி இயங்கும் அரசியல் பற்றியும் ரொம்பவே தெளிவாகத்தான் இருக்கிறார் ரவிக்குமார் !

-வினோ
2 thoughts on “‘மீண்டும் சேர்ந்து நடிப்பார்களா ரஜினி – கமல்?’

  1. வடக்குப்பட்டி ராமசாமி

    கமல் ரஜினி சேர்ந்து நடிப்பதில் எந்த சாதனையும் இல்லை, மாறாகா வியாபார நோக்கத்தில் மட்டுமில்லாமல் சில வரலாற்று பதிவுகளை செய்வதுதான் சாதனை!

  2. Malar

    “கமல் ரஜினி சேர்ந்து நடிக்கிற சூழல் மறுபடியும் வரும்னு நினைக்கிறேன். சேர்ந்து
    நடிக்கணும்னு அவங்களா நினைக்க மாட்டாங்க. யாராவது தூண்டிவிடணும்”

    -Please try your level best to achieve this Ravikumar Sir…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *