BREAKING NEWS
Search

மீண்டும் சாதியைக் கையிலெடுக்கும் ராமதாஸ்!

மீண்டும் சாதியைக் கையிலெடுக்கும் ராமதாஸ்!

செஞ்சி: திமுக வன்னியர்களை புறக்கணித்து வருகிறது. இதனால் 01மீண்டும் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்த போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியருக்கான சாதிச் சங்கமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பையே பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்று மாற்றினார் ராமதாஸ்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் இவர் ஏராளமான போராட்டங்களை நடத்தினாலும் எதற்கும் அசைந்து கொடுக்காத எம்ஜிஆர், இவரது இட ஒதுக்கீடு கோரிக்கையையும் மிக லாவகமாக நிராகரித்தார்.

ஆனால் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் முதல்வரான கருணாநிதியோ, தனது அரசியல் லாபங்களுக்காக ராமதாஸை வளர்க்க ஆரம்பிக்க, பின்னர் ஜெயலலிதாவும் அதே பாணியைப் பின்பற்றினார்.

திமுக – அதிமுக என மாறி மாறி சவாரி செய்த ராமதாஸ் தொடர்ந்து வெற்றி பெற்றார். தேர்தலுக்கு ஒரு கூட்டணி என மாறுவதே வளர்ச்சி அரசியல் என ஒரு கட்டத்தில் சொல்ல ஆரம்பித்தார்.

ஆனால் அவரது இந்த அரசியலுக்கு தமிழக வாக்காளர்கள் பெரும் அடி கொடுத்தனர் இந்த மக்களவைத் தேர்தலில். போன தேர்தலில் 7 இடங்களைப் பெற்று மத்தியில் பவர்புல் மந்திரி பதவியை மகனுக்குப் பெற்றுக் கொடுத்த ராமதாஸ், இந்த முறை டெல்லிக்கே போத வேண்டிய அவசியமின்றி தமிழகத்தின் அடுத்த தேர்தலுக்கான வேலைகளில் ஜரூராக உள்ளார்.

வருகிற சட்ட மன்றத் தேர்தலில், திமுக, அதிமுக இரண்டுமே தன்னை கூட்டணியில் சேர்க்குமா என்பதில் ராமதாசுக்கு உறுதியற்ற நிலை உள்ளது.

இதனால் தனது பலத்தைக் காட்டியே தீர வேண்டிய கட்டாயம் அவருக்கு. எனவே தனக்கு நன்கு கைவரப்பெற்ற சாதிப் பிரச்சினையை மீண்டும் கையிலெடுத்துள்ளார்.

செஞ்சியில் நேற்று நடந்து திருமண நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்ட ராமதாஸ், தனது பேச்சில் அதைக் குறிப்பிடத் தவறவில்லை. அவரது பேச்சு:

வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராடினோம். 1987ல் அப்போதைய போராட்டத்தின் போது நான் சிறையில் இருந்தேன். இதில் என்னோடு பலரும் சிறைக்கு வந்தார்கள். அவர்களில் அதிகம் பேர் செஞ்சியை சேர்ந்தவர்கள். அந்த போராட்டத்தில் தான் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பின்னர் 107 சாதியை சேர்த்து 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தார்கள். இதை எதிர்த்து சென்னை மெரீனா கடற்கரையில் பட்டை நாமம் போட்டு போராட்டம் நடத்தினேன். தற்போது மீண்டும் பட்டை நாமம் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே வன்னியர். இதையும் நான் தான் போராடி பெற்றுத்தந்தேன். தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலர்கள் 31 பேர் இருக்கின்றனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே வன்னியர். 300 பேரில் ஒரு வன்னியர் மட்டுமே எஸ்.பி ஆக இருக்கிறார்.

2 கோடி வன்னியருக்கு ஒரு நீதிபதி உள்ளார். அதே சமயத்தில் இசை வேளாளர்களில் 10 ஆயிரம் பேருக்கு ஒரு நீதிபதி உள்ளார். அனைத்து துறைகளிலும் இசை வேளாளர்கள் அதிகமாக உள்ளனர்.

சமூக நீதி என்று கூறும் கருணாநிதி எத்தனை வன்னியருக்கு பதவி கொடுத்துள்ளார். திமுகவில் வன்னியருக்கு தலைவர் பதவி, பொது செயலர் பதவி, பொருளர் பதவி இது வரை வழங்கி உள்ளாரா?.

வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

சாராயம் இல்லாத தமிழ்நாடு…

பெண் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். பெண் குழந்தையை கருவிலே அழிக்கக் கூடாது. ஒரு பெண் படித்தால் குடும்பமே படித்த மாதிரி.

தமிழ்நாட்டில்தான் விதவைகள் அதிகம் உள்ளனர். ஏன் என்றால் இங்குதான் அதிக குடிகாரர்கள் இருக்கின்றனர். பெண்கள்தான் கணவரை குடிக்கவிடாமல் திருத்த வேண்டும். சாராயம் இல்லாத தெரு, சாராயம் இல்லாத ஊர், சாராயம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

ஆக, மீண்டும் சாதி அரசியலோடு வருகிறார் ராமதாஸ்…!
6 thoughts on “மீண்டும் சாதியைக் கையிலெடுக்கும் ராமதாஸ்!

 1. குமரன்

  மருத்துவர் ராமதாஸின் “சாதி அரசியல் வளர்ப்புத் திட்டம்” கடந்த 25 ஆண்டுகளாக நன்றாக வேலை செய்கிறது.

  நான் முன்னமே வேறு ஒரு பின்னூட்டத்தில் கூறியவாறு, தமிழகத்தில் நான்கு ஆதிக்கச்சாதிகள் உள்ளன. வன்னியர், தேவர், கொங்கு வேளாள கவுண்டர், நாடார் என்பனவே அவை. இதிலே வன்னியர் தனிக்கட்சி நடத்தி அரசியல் ரீதியாக பெரும் ஆதாயங்களை அடைந்ததைப் பார்த்து கொங்கு வேளாள கவுண்டர்களும் தற்போது கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். தேவர்களோ கிட்டத்தட்ட அ.இ.அ.தி.மு.கவைக் கைக்குள் வைத்திருக்கிறார்கள். நாடார்களின் ஆதிக்கம் சற்றே காங்கிரஸில் குறைந்தது போலத் தோன்றினாலும், ஒவ்வொரு கட்சியிலும் நாடார்களது பங்கு கணிசமாகவே இருக்கிறது.

  எத்தனை நீதிபதி, எத்தனை எஸ்.பி வன்னியர் என்று இப்போது அறிவிக்கும் ராமதாஸ் த‌ற்போது தமது கட்சி சட்டமன்ற உறுப்பினரில் எத்தனை வன்னியர் என்று அறிவிப்பாரா?

  த‌ம‌து க‌ட்சியின் ராஜ்ய‌ ச‌பா உறுப்பின‌ரில் எத்த‌னை வன்னியர் என்று அறிவிப்பாரா?

  மொத்த தமிழக 234 உறுப்பினரில் எல்லாக் கட்சிகளிலும் இருந்து எத்தனை வன்னியர் என்று அறிவிப்பாரா?

  மொத்த‌ ம‌க்க‌ள‌வை தமிழக 39 உறுப்பினரில் எல்லாக் கட்சிகளிலும் இருந்து எத்தனை வன்னியர் என்று அறிவிப்பாரா?

  த‌மிழ‌க‌த்தில் உள்ள‌ மாவ‌ட்ட, நகர, மாந‌கராட்சி, ஊராட்சி, உள்ளாட்சித் த‌லைவ‌ர்க‌ள், வார்டு உறுப்பின‌ர்க‌ளில் எல்லாக் கட்சிகளிலும் இருந்து எத்தனை வன்னியர் என்று அறிவிப்பாரா?

  இவை ப‌ற்றி ராம‌தாஸ் பேச‌வே மாட்டார். எல்லா அர‌சிய‌ல் அதிகார‌த்தையும் மே 2009 வ‌ரை அனுப‌விக்கும்போது எத்த‌னை வ‌ன்னிய‌ர் எந்தெந்த ஆட்சி அரசியல் அதிகாரத்தில் இருந்தார் என்பது பற்றி ராம‌தாஸ் ஏன் பேச வில்லை?

  இங்கே நான் கூறியவை மேற்கண்ட நான்கு ஆதிக்கச் சாதிகளுக்கும் பொருந்தும். ‌

 2. கருணாநிதி

  பச்சோந்தி கருணாநிதி முகத்தில் காறித் துப்புங்கள்!
  ————————————————
  ‘‘இலங்கையில் தனி ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல் அங்குள்ள தமிழர்களின் சமஉரிமைக்குப் போராடுவோம். சிங்களவர்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி அங்குள்ள தமிழர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக் கூடாது’’ இப்படி சட்டப்பேரவையில் அண்மையில் திருவாய் மலர்ந்தார், தமிழினத் தலைவர் கருணாநிதி.

  சில நாட்களுக்கு முன்பு ஒரு புத்தகம் எனக்குக் கிடைத்தது. அது பற்றி பதிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்கு சரியான நேரத்தை நமது கருணாநிதி ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.

  அந்தப் புத்தகத்தின் தலைப்பு:

  ‘தமிழனுக்கு ஒரு நாடு தமிழ் ஈழ நாடு’.1985 அக்டோபர் 3 முதல் 13 ஆகிய நாட்களில் முறையே கோவை, திண்டுக்கல், தூத்துக்கு, திருச்சி, சேலம், வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற மாபெரும் பேரணி, பொதுக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றியது, அந்த நூல்.

  அந்தப் புத்தகத்தின் இரண்டாம் பக்கத்திலேயே இப்படி வருகிறது:

  இலங்கைத் தமிழர்களை இலங்கை அரசின் இனப்படுகொலை நடவடிக்கையில் இருந்து காக்கத் தமிழ்ஈழம் மலர்வதுதான் ஒரே வழி என்பதை வலியுறுத்தி, தமிழ்ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்தும் பேரணி_பொதுக்கூட்டங்களில் தலைவர் கலைஞர் (இதே கருணாநிதிதான்) அவர்கள் மக்களிக்கிடையில் படித்து ஏற்கும் உறுதிமொழி.

  1. இலங்கையில் தமிழ் ஈழம் மலர ஆதரவு தருவோம்!

  2.இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும், நிரந்தர பாதுகாப்பும் கிடைக்கும் வரையில் ஓய மாட்டோம்!

  3.தமிழ் ஈழப் போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையில் இருந்து தவற மாட்டோம்!

  4.இந்தக் கடமைகளில் நாங்கள் செய்யும்போது மத்திய_மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தால் அவற்றை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வோம், என்ற ரீதியில் போகிறது அந்தப் புத்தகம்.

  1985_ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பிரதமர் இந்திரா. இரு மாநில அரசையும் இலங்கைப் பிரச்னையில் தலையிட வலியுறுத்தி கருணாநிதி போட்ட வேஷத்தின் அடையாம்தான் இந்தப் புத்தகம்.

  1985_ல் எதிர்க்கட்சியாக இருந்த போது தமிழ் ஈழத்துக்காக உயிரையும் கொடுப்பாராம். போராளிகளுக்கு அடைக்கலம் வேறு கொடுப்பாராம் இந்த கேடு கெட்டக் கருணாநிதி.

  ஆனால் இப்போது சிங்களவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக தமிழ் ஈழம் கோரிக்கையை யாரும் எழுப்பக் கூடாதாம். இவனைப் போல் ஒரு அயோக்கியனை வேறு எங்கும் பார்க்க முடியாது.

  நாளுக்கு நாள் பச்சோந்தியை விட நிறம் மாறியிருக்கிறான். இப்போது சாவும் தருவாய், வாரிசுகளுக்குப் பதவிப் பெற்றுத் தருவதற்காக மாபெரும் இனப்படுகொலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

  இவ்வளவு பேசும் கருணாநிதி, இந்திய தேர்தல் முடிவுக்குப் பின் இலங்கையில் நடந்த மாபெரும் இனப்படுகொலைக்கு ஒரு கண்டனமானவது தெரிவித்தானா?

  எனக்குக் கிடைத்துள்ள இந்தப் புத்தகத்தை ரீ ப்ரிண்ட் போட்டு பரப்பலாம் என்று நினைக்கிறேன். அவ்வளவு நியாயத்தை அப்போது பேசிவிட்டு இப்போது எழுந்து கூட நிற்கமுடியாத நிலையில் அயோக்கியத்தனம் செய்கிறான் கலைஞர்.

  என் வாழ்வுக்கு ஒரு உன்னதம் கிடைக்க வேண்டும் என்றால் கருணாநிதியின் முகத்தில் காறித் துப்ப வேண்டும். இவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பின்னூட்டம் இடுபவர்களைப் பார்த்து வருத்தமடைவேன்.

 3. குமரன்

  கருணாநிதி அவர்களே

  தங்கள் உணர்வுகள் உண்மையின் வெளிப்பாடே.

  ஆனால், இவை அனத்தும் வரவேண்டிய கட்டுரை கீழ்க்க‌ண்ட‌ நிர‌லில் உள்ள‌து

  http://www.envazhi.com/?p=9438

  சாதிய, சந்தர்ப்பவாத‌ அர‌சிய‌ல் ந‌ட‌த்தும் ராம‌தாஸின் முக‌த்திரையைக் கிழிக்கும் இக்க‌ட்டுரைக்குத் தொட‌ர்பில்லாதது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *