BREAKING NEWS
Search

மீண்டும் இலங்கை திரும்பினார் பார்வதி அம்மாள்!

மீண்டும் இலங்கை திரும்பினார் பார்வதி அம்மாள்!

யாழ்ப்பாணம்: மலேசிய விசா முடிந்ததால், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தாயாரா பார்வதி அம்மாள் மீண்டும் இலங்கைக்கே திரும்பினார். யாழ்ப்பாணம் நகரில் அவர் தங்கியுள்ளார்.

பிரபாகரனின் உறவினரும் முன்னாள் எம்பியுமான சிவாஜிலிங்கம் அவரை மலேசியாவிலிருந்து விமானத்தில் அழைத்து வந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்ட பார்வதி அம்மாளுக்கு மலேசிய அரசு மனிதாபிமான அடிப்படையில் எந்த நிபந்தனையுமின்றி வழங்கிய விசா காலம் வரும் 15-ம் தேதியுடன் முடிகிறது. எனவே அதற்கு மேல் கால நீட்டிப்பு எதுவும் கோராமல் மீண்டும் இலங்கைக்கே திரும்பியுள்ளார் பார்வதி அம்மாள்.

அரசு மருத்துவமனையில்தான் தங்க வேண்டும், விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் உள்ளோரைச் சந்திக்கக் கூடாது, தமிழக அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு தமிழகத்தில் 6 மாதகாலம் தங்கி சிகிச்சைப் பெறலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளதாக முதல்வர் கருணாநிதி திங்களன்று அறிவித்திருந்தார்.

ஆனால் இந்த நிபந்தனைகளை பிரபாகரன் உறவினர்கள் ஏற்று தமிழகத்துக்கு பார்வதி அம்மாவை அனுப்பி வைப்பார்களா என்பது தெரியவில்லை. இந்திய அரசின் கடிதம் எதுவும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.

திருமாவளவன் கோரிக்கை

இதற்கிடையே, பார்வதி அம்மாள் சிகிச்சைப் பெற விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மத்திய அரசு நீக்க வேண்டும் என்றும், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.




2 thoughts on “மீண்டும் இலங்கை திரும்பினார் பார்வதி அம்மாள்!

  1. sakthivel

    வயதான ஒரு அன்னையின் உயிரில் விளையாடும் மனிதநேயம் பேசும் தமிழக அரசியல் மிருகங்கள்…. இவர்களா மக்களின் பாதுகாவலர்கள் ??? அந்த தாயை தவிக்கவிட்ட பாவம் இவர்களையெல்லாம் விடாது….

  2. cholan

    தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமில்லை . இந்திய காங்கிரசும் தான் . இலங்கையில் இறந்த அந்த லட்சகணக்கான ஆத்மாக்கள் இவர்களை , இவர்களின் பரம்பரையை , இந்த நாட்டை அழிக்கும் . அதை நான் வாழும் போதே பார்க்க வேண்டும். என்னைப்போல் நினைக்கும் அனைவரின் எதிர்பார்ப்பும் நிறைவேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *