BREAKING NEWS
Search

மீண்டும் அந்த எண்பதுகளுக்கு… – ரஜினியுடன் ஒரு ப்ளாஷ்பேக்!

மீண்டும் அந்த எண்பதுகளுக்கு… – ரஜினியுடன் ஒரு ப்ளாஷ்பேக்!

டிகர்களுக்கு மட்டுமல்ல.. இளமையின் விளிம்பில் நிற்கிற எல்லா ரசிகர்களுக்கும் மிகப் பிடித்தமான காலகட்டம் அந்த ‘இனிய எண்பதுகள்’!

எம்ஜிஆர் – சிவாஜி என்ற சிகரங்களின் சகாப்தத்துக்குப் பிறகு, அந்த எண்பதுகளில்தான் இசை இசையாய் இருந்தது… படைப்பிலும் நடிப்பிலும் புதிதாய் சாதனைகள் பிறந்தன…

இன்றைக்கு சாதனை மன்னர்களாக உள்ள கலைஞர்கள் பலரும் அறிமுகத் தடம் பதித்து பின் அசத்த ஆரம்பித்தது அந்த எண்பதுகள்தான்.

தலைவர் ரஜினி எழுபதுகளிலேயே தென்னகத் திரையை கலக்க ஆரம்பித்துவிட்டிருந்தாலும், எண்பதுகளின் ஆரம்ப வருடத்திலேயே அவர் மாபெரும் சூப்பர் ஸ்டாராகத் திகழ ஆரம்பித்தார். பாக்ஸ் ஆபீஸ் ஆபத்பாந்தவன், விநியோகஸ்தர்களின் ரட்சகன் என்றால் எண்பதுகள் முதல் இன்றுவரை அது ரஜினிதான்.

ரஜினிக்குப் பின் எண்பதுகளில் நடிக்க வந்த மோகன், பிரபு, கார்த்திக், அம்பிகா, ராதா, சுமலதா, ஜெயசுதா, பூர்ணிமா, சிரஞ்சீவி, மோகன்லால்… அடடா… தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டியும் ரசிக்க வைத்தன இவர்களின் படங்கள். அந்த காலகட்டத்துப் படைப்பாளிகளுக்கும், குறிப்பாக இசைஞானி இளையராஜாவுக்கும் இதில் பெரும் பங்குண்டு என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த (ரஜினியின் கொடி இன்றைக்கும் சினிமா சிகரத்தின் உச்சியிலே!) இந்த நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களின் அந்த நாள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நினைவுகூர்தல் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு சுகாசினியும் லிஸி ப்ரியதர்ஷனும் ஏற்பாடு செய்திருந்ததனர் (அதன் புகைப்படங்களை முதலில் இணையத்தில் நாம்தான் தந்திருந்தோம்). இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று கேக் வெட்டி, தனது சகாக்களுக்கும் ஊட்டி விட்டு அந்த நிகழ்ச்சியையே கலகலப்பாக்கியது நினைவிருக்கலாம்.

இந்த ஆண்டும், அந்த மலரும் நினைவுகள் நிகழ்வின் தொடர்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் சுகாசினியும் லிஸியும். சூப்பர் ஸ்டாருக்கும் மறக்காமல் அழைப்பு விடுத்தனர். மகள் திருமணம், எந்திரன் வெளியீடு என பம்பரமாய் ஓடிக்கொண்டிருக்கும் அவர் இந்த முறை வருவாரோ மாட்டாரோ… என்ற சந்தேகம் இருவருக்கும்.

ஆனால் கடந்த ஆண்டே சொல்லிவிட்டார், ‘வருஷா வருஷம் ஏற்பாடு பண்ணுங்க… நான் வருவேன்’ என்று. கொடுத்த வாக்கை மீறாத சூப்பர் ஸ்டார், இந்த ஆண்டும் தவறாமல் வந்தார்.

இந்த முறை ஆகஸ்ட் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை லிஸியின் பங்களாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இன்னும் 5 சாதனை நடிகர்களும் பங்கேற்றனர் கூடுதலாக. மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார் மற்றும் அர்ஜூன் ஆகியோர்தான் அந்த ஐவர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 29 கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஆஜராகினர்.

நடிகைகளில், எண்பதுகளைக் கலக்கிய எல்லோருமே வந்துவிட்டனர். அம்பிகா, ராதா, லிஸி, சுகாசினி, ராதிகா, பூர்ணிமா, ஷோபனா, சுமலதா, ரேவதி, நதியா, ரம்யா கிருஷ்ணன்… என எல்லோரும் சந்தோஷத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ‘டிரஸ் கோட்’ கறுப்பு என்பதால், பெரும்பாலானோர் அந்தக் கருப்பு நிறத்திலேயே உடையணிந்து வந்தனர், சுமலதா, அம்பிகா தவிர!

பழைய நினைவுகள், செய்த கலாட்டாக்கள், தெரிந்த இசை, தெரியாத பாட்டு, பிடித்த காட்சி என பரிமாறிக் கொண்டனர்.

இந்த ஆண்டும் கேக் வெட்டி அனைவருக்கும் தந்தார் ரஜினி.  அவரது ஒரே வருத்தம் கடந்த ஆண்டு இந்த நிகழ்வுக்கு வந்திருந்த அவரது நண்பர் விஷ்ணுவர்தன் இந்த ஆண்டு இல்லாமல் போய்விட்டதுதான்!

பொதுவாக நடிகர்-நடிகைகள் இந்த மாதிரி பழைய மாணவர்கள் போல க்ளப் எல்லாம் அமைத்து சந்தித்துக் கொள்வது ரொம்ப அரிதுதான்.

இதுபற்றி லிஸி ப்ரியதர்ஷன் கூறுகையில், “உலகிலேயே இந்த மாதிரி ‘என்றும் இனிய எண்பது’ (‘எவர்கிரீன் எய்ட்டி’) என்ற க்ளப் அமைத்திருப்பது நம்ம தென்னிந்திய நடிகர்களாகத்தான் இருக்கும். வேறு யாரும் இதுபோல செய்திருக்கிறார்களா தெரியவில்லை. தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா என தென் மாநிலங்களின் சாதனைக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றதுதான் இதன் சிறப்பு. இதற்காக யாருக்கும் நன்றி சொல்ல மாட்டோம். நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வரும் அவர்களுக்கு இது ஒரு இளைப்பாறல். இது தொடரும்” என்றார்.

-வினோ

என்வழி ஸ்பெஷல்
5 thoughts on “மீண்டும் அந்த எண்பதுகளுக்கு… – ரஜினியுடன் ஒரு ப்ளாஷ்பேக்!

  1. ilaiyaraja

    மிக இனிமையான நிகழ்வு. இதே போல் நாமும் நமது பள்ளி, கல்லூரி நண்பர்களை பார்க்கமாட்டோமா என்று ஏங்க வைக்கும் ஒரு அற்புத நிகழ்வு.

  2. bala

    எல்லாம் ஓகே ஈதுல சரத்குமார் என்ன வேல அவன் ஈதுக்கு இதுல வந்தான் இதுல இருக்குற இலரும் சூப்பர் டுபேர் ஹிட் தந்தவர்கள் அவன் இதுல ஈதுக்கு காமெடி pice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *