BREAKING NEWS
Search

மிஷ்கின் – நரேன்: பிரிந்த நண்பர்கள்!

மிஷ்கின் – நரேன்: பிரிந்த நண்பர்கள்!

மிழ் சினிமாவில் வெற்றிகரமாக இணைந்திருக்கும் நண்பர்கள் ரொம்ப நாள் அந்த நட்பைத் தொடர்வதே இல்லை.mysskin-narain

வெகு அரிதாக ஒன்றிரண்டு கலைஞர்கள் இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும் தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்தவர்கள், கசந்த மனதோடு பிரிந்து செல்வதைப் பார்த்திருக்கிறோம்.

காரணம் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்த முற்படும் போது உருவாகும் ஈகோ, என்னால்தான் இந்த வெற்றி என்ற ஆதிக்க மனப்பான்மை.

சமீபத்தில் இதற்கு ‘பலி’யானது செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா நட்பு.

இப்போது, மிஷ்கின் – நரேன்.

மிக நெருங்கிய நண்பர்களாக இருந்த இவ்விருவரும் இப்போது பிரிந்து வெவ்வேறு பாதைகளில் பயணிக்கத் துவங்கிவிட்டனர்.

மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி மூலம்தான் நரேன் அறிமுகமானார். அடுத்து அவரது இயக்கத்தில் அஞ்சாதே படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் நரேனை மிகச் சிறந்த நடிகராகக் காட்டின. இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைவார்கள் என்று பேசப்பட்டது. ஒரு விழாவில், தனது அடுத்த ஆக்ஷன் படத்தில் நரேன் நாயகனாக நடிப்பார் என்று மிஷ்கின் அறிவித்தார்.

ஆனால் அது நடக்கவில்லை. நந்தலாலா படத்தில் தானே நாயகனாக நடித்துவிட்டார் மிஷ்கின்.
ஆனால் படம் எப்போது வரும் என்பது அந்த ஐங்கரனுக்கே வெளிச்சம்.
இன்னொரு பக்கம் நரேன் பூக்கடை ரவி படத்தில் நாயகனாக நடித்தார். இந்தப் படம் வெளிவருவது சன் பிக்சர்ஸ் கையில் இருக்கிறது.

இதற்கிடையே, மிஷ்கினுக்கும் நரேனுக்கும் தனித்தனியாக வெற்றிப் படங்களைத் தரவேண்டும் என்ற ஈகோ மோதல் வந்துவிட்டதாம். அதன் விளைவு, நரேன் இரு மலையாளப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட, நந்தலாலாவுக்கு அடுத்து தான் இயக்கும் புதிய படத்தில் நரேனை நாயகனாகப் போடாமல் விட்டுவிட்டார்.

யுத்தம் செய் என்ற தலைப்பில் இந்தப் படம் தயாராகிறது. நாயகன் சேரன்!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *