BREAKING NEWS
Search

மிஷ்கினின் ‘கீழ்த்தரமான படங்கள்’!

குடும்பத்தோடு பார்த்தால் நல்ல படமில்லையா!!

றிவுஜீவிகள் என்ற பெயரில் அபத்தமாகப் பேசுவது நம்மவர்களுக்கு ஒன்றும் புதிதில்லை. ஒருவருக்குக் கிடைக்கும் புகழ், பெருமை, உலக அளவிலான அங்கீகாரத்தைப்பார்த்துப் பெருமை கொள்ள வேண்டுமேயல்லாமல் உள்ளுக்குள் பொசுங்கிக் கொண்டிருப்பதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

நேற்று சென்னையில் நடந்த சர்வதேசப் பட துவக்க விழாவில் இப்படி மனம் பொசுங்கிய இன்னும் சிலரைப் பார்க்க முடிந்தது. மனம் போலவே வாழ்க்கையும் வசதியும் அமையும் என்பார் ரஜினி.

மிஷ்கின் ஒரு நல்ல படைப்பாளி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் எழுத்தாளர் என்ற பெயரில் நினைத்ததைக் கிறுக்கி, கண்டதையும் உளறும் சில ஈனப் பிறவிகளோடு சேர்ந்து இவர் பேசியவற்றைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது நேற்று. வருத்தம் மேலிட்டது.

கூட்டத்தில் இருக்கும்போது மந்தையாட்டின் மனநிலையில்தான் மிஷ்கினும் நடந்து கொள்கிறார், பேசுகிறார்.

இந்த விழாவில் அவர் பேசியதில் ஒன்றைக்கூட ஏற்றுக் கொள்ளமுடியாது (இன்னொரு ஜென்மமும் பேசியது… அதை எந்தக் கணக்கிலுமே எடுத்துக் கொள்ள முடியாது!).

சில உதாரணங்கள்:

“தமிழ் சினிமா எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியும். நல்ல சினிமா படங்கள் வெளிவர முடியாத சூழ்நிலை உள்ளது. நான் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படமும், ‘அஞ்சாதே’ படமும் மிக கீழ்த்தரமான படங்கள். மூன்றாம் தரமானவை…”

-அடடா… எப்பேற்பட்ட நேர்மை இவருக்கு! இந்த மூன்றாம்தர, கீழ்த்தரமான படங்களை, அவை கீழ்த்தரமானவை என்று தெரிந்தே எடுத்தது ஏனோ… மாய்ந்து மாய்ந்து அவற்றின் சிறப்புக்களை பத்திரிகையாளர்களிடம் சொல்லித் திரிந்தது ஏன்? மக்களிடம் பாக்கெட் அடிக்கவா? தமிழ் மக்களால் ரசிக்கப்படுபவை எல்லாம் கீழ்த்தரமானவை என்று நினைப்பவராக இருந்தால், நீங்கள் இங்கே இருக்க வேண்டியவரில்லையே. ஏதாவது ஒரு தென்னமெரிக்க நாட்டுக்கு ஓடிப் போய் நினைத்ததைப் படைக்கலாமே!

சரி… எது நல்ல சினிமா? இதோ மிஷ்கின் சொல்லும் புதிய இலக்கணம்:

“குத்துப் பாட்டு இல்லாமல் எடுத்தால், அதுதான் நல்ல சினிமா. குத்துப் பாட்டும், நகைச்சுவையும், சுவிட்சர்லாந்தில் 25 பெண்களுடன் கதாநாயகன்-கதாநாயகி ஆடுவதும், உச்சக்கட்ட காட்சியில் 200 பக்க வசனத்தை பேசுவதும் இல்லாமல் படம் எடுத்தால், அது நல்ல சினிமா!”

-இதுதான் சினிமா என்று எந்தக் கொம்பனும் வரையறுக்க முடியாது. அழகான மிகைப்படுத்தலும் சினிமாதான். அழகியலுடன் யதார்த்தத்தை சித்தரிப்பதும் சினிமாதான். எந்திரனை ரசிக்கும் இதே ரசிகர்கள்தான் கரகாட்டக்காரனையும் வெயிலையும் அங்காடித் தெருவையும் ரசித்தார்கள். ஒரு புதிய படைப்பாளி எடுத்த களவாணிக்கு முதலிடம் கொடுத்தார்கள். படம் எடுப்பது மட்டும்தான் படைப்பாளியின் வேலை. அதை நேர்மையாக எடுங்கள். நல்ல படமா, கீழ்த்தரமான படமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

“குடும்பத்துடன் படம் பார்க்க போகலாமா? என்று கேட்டால், என் வீட்டில் ரஜினிகாந்த் படம் பார்க்க போகலாம் என்றுதான் சொல்வார்கள். நல்ல படம் பார்க்க போகலாம் என்றா சொல்வார்கள்?”

-அடடா… எப்பேர்ப்பட்ட தெளிவு இவருக்கு! குடும்பத்தோடு நல்ல படத்துக்குத்தான் போவார்கள். குடும்பத்தினரின் தெரிவு ரஜினிகாந்த் படம் எனும்போதே, அது நல்ல படம் என்றுதானே ஆகிறது!

நந்தலாலா...

ரஜினி படம் என்றில்லை… பசங்க படத்தை மக்களும் பார்த்தார்கள், அரசாங்கங்களும் விருது கொடுத்து கவுரவித்தன. ஆனால் யதார்த்தம் என்ற பெயரில் வக்கிரமான, சைக்கோத்தனமான கற்பனைகளை படமாக்கினால் யார் பார்ப்பார்கள்?

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், உங்கள் நல்ல படம் நந்தலாலாவை குடும்பத்தோடு பார்க்க முடியாது… அப்படித்தானே!

“நந்தலாலா’ படத்தை இங்கு நடக்கும் சந்தையில், ஒரு பொருளாக விற்பதற்கு எடுக்கவில்லை. ஆத்மார்த்தமாக அந்த படத்தை எடுத்தேன். தமிழ் சினிமா இருக்கும் சூழலில் ஒரு நல்ல படம் எடுப்பதும், வெளியிடுவதும் சிரமமான விஷயமாக இருக்கிறது…”

-நந்தலாலா என்ற படம் வெளியாகவில்லையே என்ற விரக்தியில் கண்டபடி உளறக் கூடாது. அந்தப் படம் வெளியாகாமல் போக இன்றைய சூழல்

நந்தலாலாவின் ஒரிஜினல்!

காரணமில்லை. அய்ங்கரனின் சில தவறான முடிவுகளே காரணம். இதைக்கூட நாம் சொல்லவில்லை. தயாரிப்பாளர் அருண்பாண்டியன் சொன்னது. ‘வில்லு, சர்வம், ஏகன் போன்ற படங்களை, ஹீரோக்களின் கால்ஷீட் கிடைத்ததே என்று கதையைக் கூட யோசிக்காமல் எடுத்ததன் விளைவு, பெரிய நஷ்டத்தைச் சந்தித்தோம்’ என்று அங்காடித் தெரு பிரஸ் ஷோவில் சொன்னார் அருண்பாண்டியன்.

இந்தப் படங்களின் நஷ்டத்தை அவர்களுக்கு அங்காடித் தெருதான் ஈடுசெய்தது என்பதை மறக்கக் கூடாது. இப்போது, எந்திரன் வெளிநாட்டு உரிமை மூலம் பெரும் லாபம் சம்பாதித்துள்ளனர். அதைக் கொண்டுதான் நந்தலாலாவையே வெளியிடப் போகிறார்கள், என்ற உண்மையையாவது மிஷ்கின் அறிய வேண்டும்!

இன்னொரு விஷயம்… நந்தலாலா படம் குறித்த பிரஸ்மீட் சில மாதங்களுக்கு முன் அசோக்நகரில் நடந்தது. இதில் பங்கேற்ற சக நிருபர், “இந்தப் படம் ‘Kikujiro’ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல்தானே… படத்தின் டிசைன் உள்பட அனைத்தும் அந்தப் படத்தின் தழுவலாக உள்ளதே” என்று கேட்டபோது, மிஷ்கின் பதில் சொல்லாமல் நழுவினார். அந்த ஒரிஜினல் படத்தின் டிவிடியையே பின்னர் காட்டினார் அந்த நிருபர்.

ஒரு படைப்பாளி பேசலாம்…. ஆனால் கண்டபடி பேசக் கூடாது. பேச்சைக் குறைக்கணும்.. படைப்பு பேசணும்!

-வினோ
45 thoughts on “மிஷ்கினின் ‘கீழ்த்தரமான படங்கள்’!

 1. nk

  Dai pannadaingala ungaluku velaye illaya ivanga padatukku vilambaram teduraanunga potta pasanga.thalaivara patti pesiteengala inime unga padam odudaanu paarkalam.tamilnadula thalaivar rasigargal taan adigam avargal anaivarum inda padatai paakamaatargal ini unakku sangutaandi.

 2. venu

  மிஸ்கினின் எல்லா அவருடைய முந்தய படைப்புகளும்
  கொரியா படங்களின் அப்பட்டமான காப்பி வரும் அவரின் நந்தலாலா உட்பட இவர் மாதிரி திருட்டு படைப்பை சொந்த படைப்பாக சொல்லும் படைப்பாளிகளை உதைக்க வேண்டும். தலைவனை பத்தி பேசாதின்கடா சொறி பண்ணிங்களா

 3. gowtham

  காய்த்த மரத்தில்தான் கல்லடி படும் என்பதிற்கு இதுவே ஒரு நல்ல உதாரணம் ……

 4. chozhan

  எந்திரனின் கதையை பற்றி சில நாட்களாக வெளிவருகின்ற செய்தியை பார்க்கும் போது தமிழில் சுயமாக சிந்தித்து படம் எடுப்பவர்கள் மிகமிக குறைவு என்பது வெளிச்சம். அதுமட்டுமில்லாமல் உங்களைபோன்ற அறிவுஜீவிகள் நினைத்தால் எந்தப்படத்தையும் நல்லபடமக்கலாம் என்பதும் உண்மையே! ஏனெனில் எந்திரனுக்கு பிறகு உமது பேனா மழுங்கடிக்கப்பட்டு விட்டது. மேலும் நீர் எப்படி ரஜினி ரசிகன் என்ற முறையில் படத்தை விமர்சனம் செய்தவர்களை திட்டிதீர்த்தது மட்டுமல்லாமல் தேசத்துரோகிகளாக வர்னித்திர்களோ அந்த முறையில் தான் ஒவ்வொருவரும் தனக்கு சாதகமானதை எழுதுகிறார்கள் எனவே உமக்கு அவர்களை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. இனி உம்மை போன்றவர்கள் எந்திரன் படம் பார்த்தவர்களுக்கு மட்டும்தான் ரேஷன் கார்டு ரேஷன் அரிசி கிடைக்கும் என்று சொன்னாலும் ஆதரித்து பக்கம் பக்கமாக எழுதுவீர்கள் கருணாவுக்கும் ராஜபக்ஷேவுக்கும் எப்படி வித்தியாசம் இல்லையோ அப்படித்தான் உமக்கும் சன் குருப்புக்கும் வித்தியாசம் இல்லை. கருணாநிதியின் குடும்ப தயாரிப்பு கம்பனிகளால் பல தயாரிப்பு கம்பனிகள் எப்படி பாதிப்பு அடைகிறார்கள் என்பது உமக்கு நன்றாக தெரிந்தும் ரஜினிக்காகவே சன் குருப்பையும் ஆதரித்த நீங்கள் அடுத்தது தயாநிதி அழகிரி படத்தில் நடித்தால் அப்பொழுது உங்களின் பேனாமுள் மாற்றி எழுதும். குட்டிதகவல்:- சன் குருப்பில் இருந்து உமக்கு விருது வழங்க இருக்கிறார்கள்.
  ______________

  எந்த அடிப்படையில் இப்படி எழுதியிருக்கிறீர்கள்? நான் எல்லோரையும் குறை சொல்லவில்லை. ரஜினி ரஜினி ரஜினி என வருடக் கணக்கில் அட்டைப் படக் கட்டுரை போட்டு ஆதாயம் பார்த்தவர்கள், நேரம் கிடைக்கும்போது, ரசிகன் கடிதம் என கற்பனை கடிதம் எழுதி குத்தப் பார்த்தவர்களைத்தான் விமர்சித்துள்ளேன்.

  ரஜினி என்ற தனிப்பட்ட கலைஞரை அவமானப்படுத்த முயன்ற தினமணிகளையும், விகடன்களையும்தான் விமர்சித்துள்ளேன். ‘இந்தப் படத்தை என்ன செய்கிறேன் பார்’ என்று சவால்விட்டு, அதை பத்திரிகையிலும் காட்டிய பத்திரிகை ஆசிரியரையும் கார்ட்டூனிஸ்டையும் உமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் எனக்குத் தெரியும்.

  எழுத்தாளர்களில் என்னைவிட ஆணி புடுங்கி எவனுமே இல்லை என்பவன், படைப்பாளிகளில் நானே பெரியவன், உண்மையாகப் படைப்பவன் என்பவர்களின் இன்னொரு பக்கம் எனக்கும் தெரியும். அதில் கொஞ்சத்தைதான் அவ்வப்போது இங்கே சொல்கிறேன். அதற்கேன் உங்களுக்கு கோபம் வருகிறது?

  “ஒரு படைப்பாளி பேசலாம்…. ஆனால் கண்டபடி பேசக் கூடாது. பேச்சைக் குறைக்கணும்.. படைப்பு பேசணும்!” என்பதில் உங்களுக்கு உடன்பாடில்லையென்றால் நான் என்ன செய்யட்டும்!

  எந்திரன் கதை என்னுடையது என்று யார் சொன்னாலும் ஒப்புக் கொள்வீர்களா… அவர்கள் குறிப்பிட்டுள்ள கதைகளைப் படித்துப் பார்த்துவிட்டு பேசுங்கள். இன்னொன்று, பிரபலமான படங்களுக்கு இம்மாதிரி உரிமை கொண்டாடி கிளம்பும் நபர்கள் புதிதல்ல. அதை வைத்து ஷங்கருக்கு சொந்தமாக யோசிக்கும் திறனில்லை என்பது சிறுபிள்ளைத்தனம். சுஜாதா என்ற எழுத்தாளரைப் பார்த்து விஞ்ஞானக் கதையில் அனா ஆவன்னா எழுதக் கற்றுக் கொண்டவர்களெல்லாம் இன்றைக்கு உரிமை கொண்டாட ஆரம்பித்திருப்பது சிரிப்பைத்தான் தருவிக்கிறது.

  கருணாவையும் ராஜபக்சேவையும் எதற்காக என்னிடம் உதாரணம் காட்டுகிறீர்கள்… ஒரு நாள் ராஜபக்சே எதிர்ப்பு, அடுத்த நாளே அவருடன் கைகுலுக்கி அரச பதவி பெறுதல் என்ற ஈனத்தனத்தை இங்கே யார் செய்தார்கள்? இதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லுங்கள்… அல்லது ஹம்சாவிடம் கையூட்டுப் பெற்றுக் கொடுத்த, உங்களைப் போன்றவர்கள் மெச்சிக் கொள்கிற ‘பத்திரிகையாளர்களிடம்’ போய் சொல்லுங்கள்.

  ஆம்… நான் ரஜினி ரசிகன்தான். அவரை நன்கறிந்த ரசிகன். ரஜினியை ஆதரிக்கிறவர்களைப் பாராட்டுவதும், எதிர்ப்பவர்களை, அவர் மீது காரணமின்றி காழ்ப்புணர்ச்சி காட்டுபவர்களை நார்நாறாக கிழிப்பதும் என் சுபாவம். அதில் எனக்குப் பெருமையே!

  -வினோ

 5. Ram

  Hi Vino

  I think you dont like anybody except very few like RajniKanth. Do you know Rajni also did major blunder in his carreer starting. We know how many time he got warned. Miskin is a vary good director. He is one and only director who can speak unbiasly. Can you tell me any one director who speak his mind? all are having buttering mind. Even he commented about Kamal Hasan too. Thats also bold attempt which I beleive. Kamal has given ‘unnai pol oruvan’ (based on The Wednesday from Hindi) and all were saying that kamal has acted well in this movie, have you seen Nashrudin Shah’s acting in Hindi version. And Kamal has introduced his daughter as music director in this movie, still I dont know whats her capability. We all know what was the music quality in that movie. On the whole comparing to all the actors and directors, MISKIN is better in his way…

  Regards

  Ram
  _______________

  யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்க முடியுமா என்ன? அஞ்சாதே போல ஒரு படம் இதுவரை வந்ததில்லை என்று அவரேதான் சொன்னார். படமும் நன்றாக இருந்ததால் ‘நல்ல படம்’ என்று முன்பு எழுதினோம். அவரோ அதை கீழ்த்தரமான படைப்பு என்று கூறி, பாராட்டியவர்களுக்கு அறிவில்லை என்று பகிரங்கமாக திட்டுகிறார். இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன!

  -வினோ

 6. endhiraa

  விநோஜி,
  நச்சுன்னு இருக்கு உங்க கமெண்ட்ஸ் எல்லாம் ! நான் உங்களை மிஷ்கின் ரசிகர் என்று நினைத்திருந்தேன் (ஏதோ நீங்கள் எழுதியதை வைத்து தான் ..எது என்று ஞாபகம் இல்லை )

  “இப்போது, எந்திரன் வெளிநாட்டு உரிமை மூலம் பெரும் லாபம் சம்பாதித்துள்ளனர். அதைக் கொண்டுதான் நந்தலாலாவையே வெளியிடப் போகிறார்கள், என்ற உண்மையையாவது மிஷ்கின் அறிய வேண்டும்!” – இது சூப்பர் !!

  “ஒரு படைப்பாளி பேசலாம்…. ஆனால் கண்டபடி பேசக் கூடாது. பேச்சைக் குறைக்கணும்.. படைப்பு பேசணும்!” – சூப்பர் சூப்பர் !! ஆமோதிக்கிறேன் !!

 7. simple fan of superstar!

  சோழன் என்ற பெயரில் கமெண்ட் போட்டிருக்கும் அறிவு மழுங்கிப் போன நண்பரே-
  ரஜினி படம் என்றதும் ஏன் உங்களுக்கெல்லாம் வேகிறது? இதை ரஜினி படம் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் ஆதரிக்கிறோம். பார்க்கிறோம். அதற்கப்பால் நீங்கள் யோசிக்கும் உள் அரசியல் எங்களுக்குத் தேவையில்லை. நல்ல படங்களை சன் குழுமமா ஓட விடாமல் செய்கிறது? நல்ல படமாக இருந்தால் சன் டிவியையும் மீறி தாராளமாக ஓடும்.

  வினோ ஒரு பத்திரிகையாளர் என்பதற்கும் அப்பால், ஒரு ரஜினி ரசிகர். இந்த சைட்டில் முதலிடம் ரஜினி செய்திகளுக்குத்தான். மற்றதெல்லாம் அப்புறம்தான். உங்களுக்குப் பிடிக்காத இடத்தில் என்ன வேலை?

  ராஜபக்சே, கருணா பற்றியெல்லாம் உங்களைப் போன்றவர்கள் பேசக்கூடாது. வாய்ப்பிருந்தால் ராஜபக்சே காலைக் கழுவவும் தயாராக உள்ள கூட்டம்தானே நீங்கள்?

 8. simple fan of superstar!

  //ஆம்… நான் ரஜினி ரசிகன்தான். ரஜினியை ஆதரிக்கிறவர்களைப் பாராட்டுவதும், எதிர்ப்பவர்களை, அவர் மீது காரணமின்றி காழ்ப்புணர்ச்சி காட்டுபவர்களை நார்நாறாக கிழிப்பதும் என் சுபாவம். அதில் எனக்குப் பெருமையே!

  -வினோ//

  -பாண்டச்டிக். சும்மா நச்சுன்னு அடிசிட்டிங்க தல!

 9. alagan.rajkumar

  வினோ இன்னுமா புரியலை .நேற்று வரை நந்தலாலா படம் பற்றி நிறைய பேருக்கு தெரியாது .ஆனா மிஸ்கின் தலைவரை பற்றி பேசியவுடன் அந்த படம் பற்றி வெளியே தெரிகிறது .கரகாட்டக்காரன் செந்தில் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ..அண்ணா எல்லாம் ஒரு விளம்பரம்.

 10. Ravi

  ‘Kikujiro’ என்ற ஜப்பானிய படத்தில் குத்துப் பாட்டு இல்லையா?
  குத்துப் பாட்டு இருக்கிறதா பாத்து copy காப்பி அடிக்க

 11. KICHA

  /ஆம்… நான் ரஜினி ரசிகன்தான்.
  அவரை நன்கறிந்த ரசிகன்.
  ரஜினியை ஆதரிக்கிறவர்களைப்
  பாராட்டுவதும் , எதிர்ப்பவர்களை,
  அவர்
  மீது காரணமின்றி காழ்ப்புணர்ச்சி காட்டுபவர்களை நார்நாறாக
  கிழிப்பதும் என் சுபாவம் . அதில்
  எனக்குப் பெருமையே!
  -வினோ//

  Super thalaiva!!

  Enda vayiru erinche sethuda poringada!!

  /குடும்பத்தினரின்
  தெரிவு ரஜினிகாந்த் படம் எனும்போதே,
  அது நல்ல படம் என்றுதானே ஆகிறது!/
  adhu

 12. KICHA

  Vino,

  oru rajini rasigan parkadha saadhanaikalum kidayadhu,
  sodhanaigalum kidayadhu.
  Eppavum ungakuda nanga irupom.
  _______
  Thanks 🙂
  -Vino

 13. இனியவன்

  நான் ரஜினி ரசிகன்தான். அவரை நன்கறிந்த ரசிகன். ரஜினியை ஆதரிக்கிறவர்களைப் பாராட்டுவதும், எதிர்ப்பவர்களை, அவர் மீது காரணமின்றி காழ்ப்புணர்ச்சி காட்டுபவர்களை நார்நாறாக கிழிப்பதும் என் சுபாவம். அதில் எனக்குப் பெருமையே!
  ………………….
  அண்ணா உங்கள பாத்து நான் பெருமை படுறேன்…..(நாங்க ரஜினி ரசிகன்)

  சோழன்… என்ன அண்ணாத்த… எங்க ஏரியா பக்கம் வந்து என்ன பேசுர….
  வினோ அண்ணா… இதை அப்படியே display pannunga…
  ******….
  நீ என்ன பெரிய அறிவிஜீவியா?
  எங்கள பத்தி பேச…
  ரஜினி பத்தி பேசி விள்ம்பரம் தேடுற ****……………..
  அய்யோ உன்ன திட்டி நீ வளந்துட்டினா?????( அதுதானே உன் குறிகோல்)
  அதுக்குதானே எம் தலைவனை பத்தி பேசுர….

 14. r.v.saravanan

  ஒரு படைப்பாளி பேசலாம்…. ஆனால் கண்டபடி பேசக் கூடாது. பேச்சைக் குறைக்கணும்.. படைப்பு பேசணும்

  ரஜினியை ஆதரிக்கிறவர்களைப் பாராட்டுவதும், அவர் மீது காரணமின்றி காழ்ப்புணர்ச்சி காட்டுபவர்களை நார்நாறாக கிழிப்பதும் என் சுபாவம்.

  good vino super

 15. Rams

  இதை படி…..மிஷ்கின்

  அயோத்தி தீர்ப்பு. காமன்வெல்த் குளறுபடிகள். தஞ்சை கோயிலின் ஆயிரமாவது பர்த் டே. தடியூன்றும் வயதிலும் இளவரசராகவே இருக்கும் சார்லஸ் வந்தது. கொடநாட்டு தேவதை குடியிருப்புக் கேந்திரங்களுக்கு இறங்கிவந்து போராடத் தொடங்கியது. மதராசில் மழை. ஈக்வடாரில் புரட்சி. பர்வேஸ் முஷரஃபின் புதுக்கட்சி –

  எதையாவது தங்கத் தமிழர்கள் பொருட்படுத்தினார்களா? இவையெல்லாம் எந்திரன் ரிலீஸ் சமயம் நடந்தது யார் பிழை? அலகாபாத் நீதிபதிகளில் தொடங்கி இங்கிலாந்து இளவரசர் வரைக்கும் யாருக்குமே விவரம் போதாது. அட, கலைஞர் கூட ராஜராஜன் திருவிழாவைக் கொஞ்சம் தள்ளியோ முந்தியோ வைத்திருந்தால்தான் என்ன?

  தொலைக்காட்சிகள், வானொலிகள், தினசரிகள், வாராந்திரிகள், மாசாந்திரிகள், இணையத் தளங்கள், வலைப்பதிவுகள், ட்விட்டர், ஃபேஸ்புக், எருமை சாப்பிடும் போஸ்டர்கள், ஹோர்டிங்குகள், பேனர்கள், பிட் நோட்டீசுகள் யாவிலும் எந்திரன். ஒரு பரம்பொருள் மாதிரி தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட ஒரே செய்தி. ஒரே பேச்சு. ஒரே சிந்தனை.

  படம் ரிலீசாகி, அதிகாலை நாலு மணிக்கு சிறப்புக் காட்சி பார்த்துவிட்டு சூப்பர் ஹிட் என்று முதல் எஸ்.எம்.எஸ். அனுப்பியபிறகுதான் தமிழகத்தின் ஜுரவேகம் சற்று மட்டுப்படத் தொடங்கியது.

  ஒரு காலத்தில் வடவர் தேசத்தில் அமிதாப் பச்சனுக்கும் காவிரி பாயும் கர்நாடகத்தில் ராஜ்குமாருக்கும் இதே மாதிரியான தொடக்கம் சித்தித்திருக்கிறது என்று பழங்கால சூப்பர் ஸ்டார் ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கு மேலாக ஒரு நடிகரின் படம் வெளியாகும்போதெல்லாம் மாநிலத்தையே பண்டிகை ‘மோடு’க்குத் திருப்பிவைக்கும் சங்கதி அதிகம் நிகழ்வதில்லை. அட ஒரு ஆர்நால்டோ, லியனார்டோ டிகாப்ரியாவோ எத்தனை மெனக்கெட்டாலும் அவர்களுக்கு கட்டவுட் பாலாபிஷேகப் பிராப்தி உண்டாகுமா? தியேட்டர் வாசலில் கற்பூரம் ஏற்றி, தேங்காய், பூசனிக்காயெல்லாம் உடைத்து, சரம் வெடித்து, காசு, காகிதம் பறக்கவிட்டு, தலைவா என்று நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுந்து அங்கப்பிரதட்சணம் செய்து அங்கீகரிப்பார்களா?

  சென்னை கமலா தியேட்டர் வாசலில் ஒரு ‘பக்தரு’டன் சற்றுப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் அதிகாலை அல்லது நள்ளிரவு ஒரு மணிக்கே குளித்து முழுகி மயிலை கற்பகாம்பாள் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். பொறுப்பற்ற கோயில் நிர்வாகம், அந்நேரத்தில் சன்னிதியைத் திறந்து வைத்திருக்கவில்லையாதலால் வெளியிலிருந்தே விழுந்து வணங்கி மானசீக பூஜை நிகழ்த்தியிருக்கிறார். காவி வேட்டி, வெள்ளைச் சட்டை. இடுப்பிலொரு காவித் துண்டு. தேசிய நெடுஞ்சாலையை விண்வெளியிலிருந்து படமெடுத்தாற்போல நெற்றியில் துலங்கிய வெகுநீள விபூதிப்பட்டை. நடுவே குங்குமமும் சந்தனமும்.

  அவர் செருப்பு அணிந்திருக்கவில்லை. வழக்கமில்லாமல் இல்லை. ஆனால் ஏனோ தமிழ் சமூகம் வழிபாட்டினுள் பாதுகையைச் சேர்ப்பதில்லை.

  ‘இதுதான் சார். இந்த ஒரு நாளுக்காகத்தான் சார் ரெண்டு வருசமா காத்திருக்கேன்’ என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார். அவரது கண்கள் கலங்கியிருந்தன. எதற்காக உணர்ச்சிவசப்படுகிறார் என்று எளிதில் புரிந்துகொண்டுவிட முடியாது. ஆராதனை மனோபாவத்தின் உச்சத்தை உணர்தல் அத்தனை எளிதல்ல. சீ என்று புறந்தள்ளுவதும் நகர்ந்துசென்று கிண்டல் செய்வதும் தலையில் அடித்துக்கொண்டு பரிதாபப்படுவதும் அநாவசியம். இது தமிழகம். நாம் தமிழர்கள்.

  இன்னொரு ரசிகர் தன் பாக்கெட்டிலிருந்து நான்கு டிக்கெட்டுகளை எடுத்துக் காட்டினார். காலை சிறப்புக் காட்சிக்கானது ஒன்று. காலை ரெகுலர் காட்சிக்கானது மற்றொன்று. மதியக் காட்சிக்கு ஒன்று. மாலைக் காட்சிக்கு ஒன்று. ‘நைட் ஷோ டிக்கெட்டை என் தங்கச்சி எடுத்துக்கிச்சி சார்’

  இது என்னவிதமான மனநிலை என்று ஆராயவேண்டியது அவசியம். ஓர் இந்துத்துவ இணையத்தளத்தில், படத்துக்கு விமரிசனம் வெளியாகியிருந்தது. அறிவு ஜீவிகள் தம் வழக்கப்படி ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்க, வீறுகொண்ட ஒரு ரசிகர், இந்துத்துவத்துக்காக ரஜினியை எதிர்ப்பீர்களெனில், எனக்கு இந்து மதமே தேவையில்லை என்று அறிவித்தார். இன்னமும்கூட ஒரு படி மேலே போகலாமே? ‘என் தாய் எனக்குத் தமிழைத்தான் சொல்லிக்கொடுத்தாள். தமிழ்ப் பண்பாட்டை போதித்தது என் தலைவன்தான்.’

  ரஜினி போதித்த தமிழ்ப் பண்பாடு குறித்து ஏதாவது பல்கலைக் கழகத்தில் யாராவது முனைவர் பட்டத்துக்கு அவசியம் ஆய்வு செய்யவேண்டும். குறைந்தது, இந்த ரசிகர்களின் மனோபாவத்தைப் பற்றியாவது. வெட்டி விடலைகள் என்று புறந்தள்ளிவிட்டுப் போவது நிச்சயமாக ஆபத்து என்று சொல்லுவேன். இவர்கள், ரசிகர் சமூகத்திலேயே மெஜாரிடிகள். தி.மு.ககாரர்கள், அ.திமுக காரர்கள், பாமககாரர்கள், பாஜககாரர்கள், காங்கிரஸ்காரர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிருத்தவர்கள், ஆத்திகர்கள், நாத்திகர்கள், நல்லவர்கள், வல்லவர்கள், நோஞ்சான்கள், ஆபீஸ் போகிறவர்கள், தொழில் செய்பவர்கள், கூலி வேலையாட்கள், வேலையில்லாதவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பிரிவிலிருந்தும் வருகிறவர்கள். ஒரு பொழுதுபோக்குத் துறை சார்ந்த கலைஞரைத் தம் வாழ்வின் ஆதர்சமாக ஏற்றுக்கொண்டு ஆயுள் சந்தா விசுவாசம் செலுத்துபவர்கள். அவர் ருத்திராட்சம் அணிந்தால் இவர்கள் ருத்திராட்சம் அணிவார்கள். அவர் ராகவேந்திரரை வணங்கினால் இவர்கள் ராகவேந்திரரை வணங்குவார்கள். அவர் பாபா என்றால் இவர்கள் இரண்டு விரலை உயர்த்துவார்கள். அவர் தலை வாராவிட்டால் இவர்கள் வாரமாட்டார்கள்.

  தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள், ரஜினியைக் காட்டிலும் முக்கியமானவர்கள். அவர்களது ஆற்றல் பிரமிப்பூட்டக்கூடியது. தமது அரசியல், சமூக, மத அடையாளங்களை நகர்த்திவைத்துவிட்டு ரசிகன் என்னும் ஒற்றைப் புள்ளியில் யாரோடும் இணைந்து அவர்களால் என்னவும் செய்ய முடியும். இந்தச் சக்தியின் முக்கியத்துவத்தை முன்னதாக ஒரு தேர்தலே நமக்கு நிரூபித்திருக்கிறது. ஆனபோதிலும் தமிழ்நாட்டு அறிவுஜீவிகள் ரஜினி ரசிகர்களைப் பொருட்படுத்தமாட்டார்கள். விசிலடிச்சான் குஞ்சுகள் என்று சொல்லிவிடுவார்கள். விசிலடிக்கும் கலை எத்தனை கஷ்டமானது என்பது அவர்களூக்குத் தெரியாது.

  ஆராதனை மனோபாவம் என்பது அத்தனை எளிதில் கூடிவிடுவதல்ல. தன் சுயத்தை அழித்து அல்லது மறைத்து அல்லது பின்னுக்குத் தள்ளி இன்னொருவரைத் தோளில் ஏந்திக்கொள்வது எல்லோருக்கும் சாத்தியமல்ல. வெட்க உணர்வு, அவமான உணர்வு, குற்ற உணர்வு போன்றவற்றுக்கு இங்கே இடமில்லை. மனம் விரும்பும் ஒன்றை மூடி மறைக்காமல் அப்பட்டமாக வெளிப்படுத்துவது ஓர் உன்னத நிலை.

  சென்னை மெலோடி தியேட்டர் வாசலில் எழுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவரை முதல்நாள் முதல் காட்சி சமயம் காண நேரிட்டது. அவரால் நிற்கவோ, நகரவோகூட முடியவில்லை. தள்ளாமை. எதிரே உள்ள போஸ்டர் எழுத்துகளைக்கூட அவரால் சரியாகப் படிக்க முடியவில்லை. முண்டியடிக்கும் கூட்டத்தில் பேலன்ஸ் தவறாமல் நிற்க முடியவில்லை.

  ஆனாலும் அவருக்கு முதல் நாள் படம் பார்க்க வேண்டியது அவசியம். முதல் காட்சியே பார்க்கவேண்டியது அவசியம். நிச்சயமாக இது இருபது, இருபத்தி ஐந்து வருடங்களாக நீளும் வழக்கமாக இருக்கக்கூடும். ரஜினிக்குமுன் அவர் எம்.ஜி.ஆர். ரசிகராகக்கூட இருந்திருக்கலாம். அதற்கும்முன்னால் பாகவதர் ரசிகராக.

  சூப்பர் ஸ்டார்களல்ல. அவர்களைத் துதித்துக் கொண்டாடும் மனநிலை மட்டுமே இங்கு முக்கியம்.

  இம்மாதம் முதல் தேதி, எந்திரன் வெளியான கணத்தில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்தேன். மிகக் குறுகலான அச்சாலையில் சட்டென்று போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கார்களும் பேருந்துகளும் இரு சக்கர வாகனங்களும் பாதசாரிகளும் தேசியகீதம் இசைத்தாற்போல அப்படி அப்படியே நின்றார்கள். ஒரு மாபெரும் கூட்டம் திரையரங்க வாசலில் வந்து கூடியது. மிகப்பெரிய பட்டாசுக் கட்டு ஒன்றைப் பிரித்து சாலையெங்கும் பரப்பியது. காவலுக்கு இருந்த போலீஸ்காரர் அவர்களுக்கு உதவி செய்து, கூட்டத்தை ஒழுங்கு படுத்தினார்.

  வினாடிப் பொழுதில் சாலையை நிறைத்த வாகனங்கள் வெகு தொலைவுவரை நீண்டுவிட்டன. யாரிடமும் ஒரு முணுமுணுப்பும் இல்லை. அலுத்துக்கொள்ளவில்லை. பட்டாசு பற்றவைக்கப்பட்டது. படபடபடபடவென்று வெடித்துச் சிதறிய சத்தமுடன் ஏராளமான விசில் சத்தங்களும் சேர்ந்துகொண்டன. போலீஸ்காரரும் தம் பங்குக்கு அரசு கொடுத்த விசிலை ஊதினார். உள்ளே படம் ஆரம்பித்துவிட்டது.

  ஒருநாள் திருவிழாதான். குறைந்தது இரண்டாண்டுகள் இதற்காகக் காத்திருக்கும் மனநிலையை என்னவென்பீர்?

  ரஜினி ரசிகர்களை நம் கலாசார அடையாளங்களுள் ஒன்றாக அரசு அறிவித்துவிடலாம்.

 16. M.MARIAPPAN

  சூப்பர் வினோ மிக அழகாக கூறியுள்ளீர்கள் ஆனால் அதே விழாவில் சாருநிவேதா என்ற பன்னிப் பய, ரஜினி இனி படத்தில் நடனம் ஆடக்கூடாது என்று கூறி உள்ளது மேலும் அமிதாப் மாதிரி குணசித்திர வேடத்தில் தான் நடிக்க வேண்டுமாம் அட நாயே தலைவர் எப்படி நடித்தால் சாருநிவேதாவுக்கு என்ன இவன் எல்லாம் ஒரு எழுத்தாளரே கிடையாது . தலைவரை பத்தி இவனுக்கு குறை சொல்வதே ஒரு வேலையா போச்சு சாருநிவேதாவை பத்தி அவன் காதில் நல்ல உரைக்கற மாதிரி எதாவது எழுதுங்க MR .வினோ என்றும் தலைவர் வழியில்….

  ________
  அதான் நீங்களே சொல்லிட்டீங்களே மாரியப்பன், அது என்ன பிறவியென்று….

  அந்த ஜென்மங்களைப் பற்றி எழுதுவதே நமக்குத்தான் கேவலம்.
  -வினோ

 17. chozhan

  வினோவின் பதிலுக்கு நன்றி! நீங்கள் பத்திரிகை துறையில் இருப்பதால் உங்களிடம் ரஜினி ரசிகர் என்பதையும் மீறி நடுநிலையான கருத்துகளை மட்டுமே எதிர்பார்க்கிறோம். கடந்த ஒருவருடமாக இதைத்தான் நான் உங்களிடம் பார்த்து வருகிறேன். அதிலும் குறிப்பாக பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் இல்லாத தமிழ்நாட்டில் அனேக பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் ஒரே மாதிரியாக/ஒருதலை பட்சமாக எழுதிவருகின்ற இந்த காலத்தில் தைரியமாக எடுத்துரைக்கின்ற உங்களை, நான் பாராட்டியும் எழுதி இருக்கிறேன். மேலும் நான் பல தமிழ் பத்திரிகைகள் எழுதுவதை நம்புவதே இல்லை. ஸ்ரீலங்கா இறுதி சண்டையோடு தமிழ் பத்திரிகை துறையின் நம்பகத்தன்மை சுத்தமாக காணாமல் போய்விட்டது. இப்பொழுது நீங்கள் கூறுவது மாதிரி //ஹம்சாவிடம் கையூட்டுப் பெற்றுக் கொடுத்த, உங்களைப் போன்றவர்கள் மெச்சிக் கொள்கிற ‘பத்திரிகையாளர்களிடம்’ போய் சொல்லுங்கள்//.அந்த பத்திரிக்கைகளை படிப்பதே இல்லை.

  உங்கள் மனதை புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. நன்றாக எழுதும் போது பாராட்டுவதும் விமர்சனம் செய்வதும் என் போன்ற உங்களின் எழுத்தை தினமும் படிக்கின்றவர்களுக்கு இயல்பே என்பதை மறக்கவேண்டாம்.

  சிறிலங்காவில் இனஅழிப்பு நடந்து கொண்டு இருக்கின்ற சமயத்தில் உங்களின் மனித உரிமை ஆணையம் தொடர்பான பதிப்பை printout எடுத்து பல பிரதி போட்டு மும்பையில் நடந்த மனிதசங்கிலி போராட்டத்தில் நானும் எனது நண்பர்களும் விநியோகித்து இருக்கிறோம். என்பதை இங்கே பதிய விரும்புகிறேன்.
  _________
  என் எழுத்தை தாராளமாய் விமர்சிக்கலாம். ஆனால், சன் டிவி எனக்கு விருது கொடுப்பதாகவெல்லாம் எழுதுவது விமர்சனம் அல்லவே. ரஜினியை ஆதரிப்பது, சன்’னை ஆதரிப்பதாகாது. எனது பேனா முனை எந்த விதத்தில் மழுங்கிவிட்டது?

  எந்திரன் இதுவரை வந்த படங்களில் சிறந்த படம். ஹாலிவுட்டுடன் போட்டி போடும் முயற்சி என்று கூறியதில் என்ன தவறு… இதை நான் மட்டும் சொல்லவில்லை. நேர்மையாக, நடுநிலையாக எழுதும் அனைத்து விமர்சகர்களும் சொல்லிவிட்டார்கள். அதை ஒரு தனி பதிவாகவே தந்திருக்கிறேன். வட இந்தியாவில் இந்தப் படத்தை ஒருவரும் குறை சொல்லவில்லை. ஆனால் தமிழகத்தில்… எத்தனை பொறாமையாளர்கள், எத்தனை காழ்ப்புணர்ச்சிக்காரர்கள்!

  இந்த தளத்தில் நான் தருபவை நேர்மையான செய்திகள்தான். வெறும் ஹிட்ஸுக்காக கண்டதையும் இங்கே தருவதில்லை. சொல்லும் கருத்துக்களிலும் 100 சதவீதம் எனக்கு சரி என்று படுவதையே முன்வைக்கிறேன். ஆதரவுக்கு நன்றி.

  -வினோ

 18. Nattu

  வினோ,

  இந்த மாதிரி கருத்துக்கள் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்பது உங்களை ஓரளவுக்கு புரிந்து வைத்திருக்கிற என்னை மாதிரியான தலைவர் ரசிகர்களுக்கு நன்றாக தெரியும்.

  தொடர்ந்து தலைவரின் மீது பொறாமையுடனும், வயித்தெரிச்சளுடனும் விமர்சிக்கும் ஈன பிறவிகளை தொடர்ந்து நார் நாராக கிழித்து தொங்க விடுங்கள். நன்றி.

  //ஆம்… நான் ரஜினி ரசிகன்தான். அவரை நன்கறிந்த ரசிகன். ரஜினியை ஆதரிக்கிறவர்களைப் பாராட்டுவதும், எதிர்ப்பவர்களை, அவர் மீது காரணமின்றி காழ்ப்புணர்ச்சி காட்டுபவர்களை நார்நாறாக கிழிப்பதும் என் சுபாவம். அதில் எனக்குப் பெருமையே!//

  ஒரு ரஜினி ரசிகனாக இதை படித்து பெருமை படுகிறேன். நன்றி.

  -நட்டு.
  _______
  நன்றி நண்பா!
  -வினோ

 19. jawahar

  //ஆம்… நான் ரஜினி ரசிகன்தான். அவரை நன்கறிந்த ரசிகன். ரஜினியை ஆதரிக்கிறவர்களைப் பாராட்டுவதும், எதிர்ப்பவர்களை, அவர் மீது காரணமின்றி காழ்ப்புணர்ச்சி காட்டுபவர்களை நார்நாறாக கிழிப்பதும் என் சுபாவம். அதில் எனக்குப் பெருமையே!//

  ஒரு ரஜினி ரசிகனாக இதை படித்து பெருமை படுகிறேன். நன்றி.

  ஜவஹர்.T

 20. balaji

  சாரு யர்ர்?

  நித்தியானந்தா புகழின் உச்சியில் இருந்த பொது, அவரின் அடிவருடி என்று தம்பட்டம் அடித்து, அடுத்தவர் புகழில் குளிர் காய்ந்துகொண்டு இருந்தார்… நித்தியானந்தா விஷயம் வெளிய தெரிந்தவுடன், நான் ரொம்ப நல்லனவன், அவன்தான் கேட்டவன் என்று சொல்லி தப்ப்பிக்க பார்த்தார். இன்னும் ஒரு படி மேல பொய், தான் ஒரு வுமனைசெர் என்று சொல்லி, அடுத்த நாளே, எனக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்று சொன்னார்!

  தான் செய்யும் தொழிலில் எந்த அளவுக்கு ஒருவன் மரியாதை வைத்து இருப்பான் என்பதை அவன் அடுத்தவர் தொழிலில் வைக்கும் மரியாதையை வைத்தே சொல்லலாம். என் தலைவர் இப்ப்படிதான் நடிக்க வேண்டும் என்று சொல்லும் இவனை, இப்படிதான் எழுத வேண்டும என்று சொன்னால் ஒத்துகொல்வனா?

  மிச்க்கின் என்று ஒருவர் இருப்பது நமக்கு தெரிந்தது அந்த இரண்டு படங்கலத்தான்! நன்றி மறப்பது நன்றன்று!

 21. santhosh

  விநோஜி இந்த மாதிரி கருத்துக்கள் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்றாலும் சற்று மன அழுத்தம் ஏற்படும். இவர்களுக்கு தலைவரை பற்றி பேசினால் தான் இவர்கள் பெயர் வெளி உலகத்துக்கு தெரியும் என்று தெரிந்து தான் பேசுகிறார்கள்.

  *********படம் எடுப்பது மட்டும்தான் படைப்பாளியின் வேலை. அதை நேர்மையாக எடுங்கள். நல்ல படமா, கீழ்த்தரமான படமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

  ராம் நட்டு போன்ற சக ரசிகர்கள்ளுக்கு என் நன்றிகள். வினோ என்றும் தன் மனதில் சரி என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே இதுவரை எழுதி வருகிறார்…. நாங்கள் என்றும் உங்கள் தோலுக்கு துணையாக இருப்போம்………….என்றும் தலைவர் வழயில்……….

 22. SEELAN, DUBAI

  வினோ நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன், ஒரு வார காலமாகத்தான் இந்த இணைய தளத்தை பார்கிறேன், தலைவருடைய செய்திகள் ரசிகர்களின் கட்டுரைகள் மிகவும் அருமை,இத்தனை காலம் என் வழியை பற்றி தெரியவில்லையே யென்று வருந்துகிறேன், தலைவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் நம்மை அவரிடமிருந்து பிரிக்க முடியாது,ஏன் யென்றால் இந்த கூட்டம் அன்பால் சேர்ந்த கூட்டம் இதை யாராலும் பிரிக்க முடியாது, ரஜினி ரசிகனாக நீங்கள் தரும் கருத்துக்கள் பதிலடிகள் மற்றும் பதிவுகளை படிக்கும் போது பெருமைபடுகிறேன், நம் தலைவரை விமர்சிக்கும் அனைவருக்கும் பதிலடி கொடுங்கள் உங்கள் பின்னால் ரஜினி என்னும் மூன்றெழுத்து மந்திரம் படிக்கும் கோடானு கோடி ரசிகர்கள் இருக்கிறோம், வாழ்க தலைவர் ரஜினி வளர்க ரஜினி புகழ்.

 23. Rajan

  மிஸ்கின், நாலு படம் கூட ஹிட் ஆகல ..

  அதுக்குள்ள தலைக்கனம் தலைவிரித்து ஆடுகிறது இவர்களுக்கு.

  இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் இவ்வளவு பேரும் புகழும் அடைந்த பிறகும் அடக்கத்தின் சொருபமாக இருக்கும் தலைவரின் பெயரை கூட சொல்ல உரிமை இல்லாதவர்கள் . இவர் படத்தை இவரே கேவலமான third grade படம்னு சொல்லுறாருன்ன எவ்வளவு கேவலமா போயிட்டாருன்னு தெரியுது . இசைஞானி இளையராஜா அவர்கள் ஒரு இசை வெளியீட்டு விழாவில் வருத்தப்பட்டு பேசியதற்கு கூட இந்த மிஸ்கின் தான் காரணம் என்று நினைக்கிறேன் எனக்கு தெரிந்த வரையில் . வினோ சரி தானே ?.

  கலி காலத்தில் தர்மம் நொண்டி நொண்டி நடக்கும் என்று தலைவர் ஒரு வீடியோவில் சொன்னது மிகவும் சரி தான் போல ……..

 24. simple fan of superstar!

  எனக்கும் அப்படித்தான் தெரிந்தது. ப்ளடி அறிவு ஜீவிக் குசும்பு அது. பா ராகவன் என்பவர் அவரது பிளாக்கில் எழுதியது. ரஜினிபேன்ஸிலும் பார்த்தேன்! நமக்கு இவனுங்க ‘ஜர்ட்டிபிகேட்’டே தேவையில்லை. இது அன்பு சாம்ராஜ்யம்!

 25. KICHA

  Thanks simple fan of superstar.

  Nethike padikumbodhu kovam vandhadhu. Aanalum naandhan sariya purinchukalayonu innikum padichen. Neradiya thakaradhai vida kevalamana thakudhal idhu.

  Idhai Purinchukama nanbarkal silar avaruku nandri vera solranga. Pls read it once again. Stupid fellow.

 26. raj

  வினோ,
  உங்கள் கோபத்தை சற்று தனித்து கொள்ளுங்கள். விக்னேஷ் போல மலம் தின்றும் பன்றிகள் எனும் வார்த்தைகளும், முகத்தில் உமிழ்தல் போன்ற வார்த்தைகளும் மிக மட்ட ரகமாக இருக்கின்றன. வினோ, இனி சற்று நிதானமாக வார்த்தை பிரயோகம் இருக்கட்டும். ரஜினி மீது இருக்கும் சில தவறுகளையும் ஒப்பு கொள்ளுங்கள். நடிகர்களுக்காக அனைவரும் அடித்து கொள்வது சரியாக படவில்லை. மிஸ்கின், அமீர் போன்றவர்கள் உலக சினிமாவை உருவி இங்கே வியாபாரம் செய்வதும் தவறுதான். தமிழ் சினிமாவின் நிஜ ரசிகன்…. ரஜினி படம் என்றதும் ஓடிபோய் பார்க்க போவதுமில்லை. உலக சினிமாவை சுட்டு இங்கே தமிழில் எடுப்பவர்களை அறியாமலும் இல்லை. வினோ, என்னை பொறுத்தவரை தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த யதார்த்த நடிகன் என்பதை ரஜினி எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், தில்லுமுல்லு உள்ளிட்ட படங்களில் என்றோ நிரூபித்து விட்டார். நான் சிவாஜி மற்றும் கமலின் தீவிர ரசிகன். ஆனாலும் இவர்களிடம் இல்லாத யதார்த்தம் ரஜினியிடம் இருந்ததை இப்படங்களில் கண்டேன். ரஜினி என்ற ஒரு மனிதரை சுற்றி ஏன் இத்தனை வசவுகள். முதல் பாதி சினிமா வாழ்க்கையில் யதார்த்த நடிப்பும், பிறகு ஜனரஞ்சக நடிப்பும் நடிப்பதில் என்ன தவறு. சன் க்ரூப்பை திட்டுபவர்கள் அதை அவர்களிடமே சொல்லலாமே. எல்லாத்துக்குமே ரஜினி தான் கிடைத்தாரா. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி போல. ஏதோ ரஜினி படம்தான் சமூகத்தை சீரழிப்பது போல ஒரு போலி பிரமையை உருவாக்காதீர்கள் அறிவாளிகளே. சில வருடங்களாக வந்து கொண்டிருக்கும் படங்களில் எத்தனை வன்முறை, ஆபாசம். அதை ஏன் யாரும் கேட்பதில்லை. எனக்கு தெரிந்து எந்திரன் வரை ரஜினி படங்கள் எதுவுமே ஆபாசம், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் கொண்டு அமைந்ததே இல்லை. இதை விட ஒரு முன்னணி நடிகரிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். தற்போதைய சூழலில். அமிதாப் மாதிரி ஏன் ரஜினி நடிக்க வேண்டும்? அமிதாப்பால் பரட்டை, ராகவேந்திரா பாத்திரங்களில் நடிக்க இயலும். ஆனால் ரஜினிபோல் இயற்கையாக நடிக்க இயலுமா. அப்படியே நடித்தாலும் ஓடுமா. ரஜினி போல் அமிதாப்பால் எந்திரன் போன்ற வெற்றியை தர முடியுமா என்று ஏன் கேட்க மறுக்கிறீர்கள்? முட்டாள் தனமான விவாதங்களை செய்யாதீர்கள். ரஜினி ஒரு என்டர்டைநேர். சினிமா ஒரு பொழுதுபோக்கு. அவ்வளவுதான். நான் ஒன்றும் ரஜினி ரசிகன் இல்லை. சிவாஜி, கமல் ரசிகன்தான். ஆனால் கமலின் நண்பர் ரஜினியை ‘அர்த்தமின்றி’ ‘ஆதாரமின்றி’ இழிவாக பேசினால் வாயில் லாலிபாப் வைத்து சூப்பி கொண்டு இருப்பவனல்ல. நன்றி. அது உங்கள் மனசாட்சிக்கு தெரியும். வாழ்க தமிழ் சினிமா.

  __________
  //உங்கள் கோபத்தை சற்று தனித்து கொள்ளுங்கள். விக்னேஷ் போல மலம் தின்றும் பன்றிகள் எனும் வார்த்தைகளும், முகத்தில் உமிழ்தல் போன்ற வார்த்தைகளும் மிக மட்ட ரகமாக இருக்கின்றன..//

  -இப்படி எழுதியது யார்?

  -வினோ

 27. sella

  இந்திரன் இதுவரை வந்த படங்களில் mika சிறந்த படமா? ரஜினி நடித்த முன்னைய படங்களை இப்படியா கிண்டல் செய்வது. உண்மையில் நீங்கள் ரஜினி ரசிகரா அல்லது வெறியரா ? ஏன் விமர்சனங்களுக்கு பயப்படுகிறீர்கள்?
  ஏதோ குத்துகிறது அல்லவா . டெக்னாலஜி இருக்கு அனா அதுக்காக இதை விட சிறந்த படம் இல்லை என்று சொன்னால் உங்கள் மூளையை என்னவென்பது. இன்னும் ஐந்து வருடம் கழித்து சொல்லுங்கள். இந்த படம் காணாமல் போய் விடும். நல்ல கதை இல்லை. நல்ல அர்த்தம் உள்ள பாடல்கள் இல்லை. மனதுக்கு பிடித்த இசை இல்லை. புதிய பறவை என்ற படம். இது ஒரு உதாரணம் மட்டுமே. எப்பேர்ப்பட்ட பாடல்கள்.அதனால் தான் நாற்பது வருடங்களுக்கும் மேலாக மட்டும் அல்ல இன்னும் பலப்பல வருடங்களுக்கு நிலைத்து நிக்கும். ஓடுகிற படம் எல்லாமே நல்ல படங்கள் அல்ல என்பது தெரியாதா?

 28. Sangamesh.S

  மிஸ்கின், சாரு போன்ற குடிகார, சைக்கோ, கஞ்சாகொடுக்கி பசங்க கூட்டம் போட்டால் யாரு கண்டுக்க போறாங்க…அது அவனுகளுக்கே நல்லா தெரியும்..அதனால தான் தலைவரை பத்தி நாலு வார்த்தை பேசினால்….அது உடனே ஒரு செய்தியாகி..ஒரு விவாதமாகி…ஆதரவா ஒரு கூட்டம் ..எதிர்ப்பா ஒரு கூட்டம் … சொல்லப்போனா ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே திரும்பிப்பார்க்கும்…

  இவ்வளவு பெரிய விளம்பரம்…இவனுகளாளெல்லாம் காசு கொடுத்து செய்ய முடியுமா…..

  எறும்பு ஊர கல்லு தேயலாம்….இமயமலை தேயாது…அது இந்த எறும்புகளுக்கும் தெரியும்….

 29. KICHA

  @ sella
  இந்திரன் இதுவரை வந்த படங்களில்
  mika சிறந்த படமா?
  Rajini nadippil miga sirappana padangalil idhuvum ondru.

  /ஏன் விமர்சனங்களுக்கு பயப்படுகிறீர்கள்?
  ஏதோ குத்துகிறது அல்லவா .//
  vimarsanathuku bayandhu irundha ungaloda indha comment inga anumadhichirupara? Unmayil thannai patri varum vimarsanangalai veliyidum thunivu VINO vuku mattume undu.

  //டெக்னாலஜி இருக்கு அனா அதுக்காக
  இதை விட சிறந்த படம்
  இல்லை என்று சொன்னால் உங்கள்
  மூளையை என்னவென்பது . //
  ippadi sonnadha therilaye sir

  /ஐந்து வருடம் கழித்து சொல்லுங்கள்.
  இந்த படம் காணாமல் போய் விடும்./
  kaalathin ootathil ellame kanamalthan pogum. Naama kuda oru naal saagathan porom. Adhukaga pudusa pirakara kuzhandaya konja mattoma? Innum sila varushathil saga poravana ean konjanumnu ninaipoma?
  Inniku vazhkaya vazhunga sir.

  Pudhiya paravai sirandha padamdhan. Maatru karuthe illai. Aana inraya thalai murayinar ippo andha padalgalai kekarangala? Adhu pola oru naal ellame marum. Adhu varaikum nanga sandhoshama irundhuttu porom. Rajini than pazhaya padangalin perumaya pesama, indha padathukaga oru pudhu mugam pola uzhaichirukar. Adhula vetrium petrukar.
  Idhuku oru rajini rasigan perumai pada kudadha? Ennanga unga nyayam?

 30. நாஞ்சில்மகன்

  வினோ சார்
  ரஜினி ஒரு அதிசயம்தான். யாரிடமும் இல்லாத ஒரு திறமை அவரிடம் இருக்கிறது. இந்த 35 வருட சினிமா வாழ்க்கையில் அவரிடம் இருந்து யாருமே அதை காப்பி செய்ய முடியவில்லை. அது ஆண்டவன் அவருக்கு கொடுத்த மிகப்பெரிய வரம். ஆனால் சில நேரங்களில் ரஜினி என்னும் மகா சக்தி எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கும். எந்திரன் படம் வந்த ஒரு வாரத்திற்கு 1000 ரூபாய் என்கிற அளவில் டிக்கெட்டை விற்றார்கள். இன்றும் 200 ரூபாய்க்கு குறைந்து டிக்கெட் கிடைப்பதில்லை. என் பட டிக்கெட்டை அதிக விலை வைத்து விற்க கூடாது என்று ரஜினி எப்போதாவது சொன்னது உண்டா? எப்படியோ எனக்கு சம்பளம் வந்தாச்சு சன் பிக்சர்ஸ் என்ன செய்தால் எனக்கு என்ன என்று எண்ணிக்கொண்டுதான் ரஜினி சார் இருக்கிறார். உன்மையில் சொன்ன போனால் 318 கோடி வசூல் பணமும் ரஜினி ரசிகர்களால்தான் வந்து இருக்கிறது. பெண்களில் 75 சதவீதம் போ் இந்த படத்தை இன்னும் தியேட்டரில் போய் பார்க்கவே இல்லை எனென்றால் அதிக விலை கொடுத்து படம் பார்க்க அவர்கள் தயாராக இல்லை. இதனால்தான் எந்திரன் திருட்டு டிவிடி சக்கை போடு போடுகிறது. தியேட்டர்கள் அதிபர்கள் நிலைமையோ இன்னும் கொடுமை . நாகர்கோவில் கார்த்திகை தியேட்டரில் எந்திரன் பெட்டியை வாங்கிய தொகை 90 லட்சம். இதுவரை ஆன கலெக்சன் 35 லட்சம். இத்தனைக்கும் நாகர்கோவிலில் ஒரே ஒரு தியேட்டரில்தான் போட்டு இருகக்கிறார்கள். தீபாவளி வந்தால் அவ்வளவுதான். இந்த படத்தால் மிகப்பெரிய வெற்றி பெற்றவர் ரஜினி கிடையாது சன் டிவி கலாநிதி மாறன்தான் அதற்கு ரஜினி சார் உடந்தை. நான் சொல்வது சரியா தப்பா ? நான் ரஜினி ரசிகன் கிடையாது. ஆனால் ரஜினி என்னும் அதிசயத்தை பார்த்து பயப்படும் முரட்டு பக்தன்.

 31. புகழேந்தி

  உன்னை பற்றி யாரு அட என்ன சொன்னால் என்ன
  இந்த காதில் வாங்கி அதை அந்த காதில் தள்ளு
  மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும்
  ஆகாயம்தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு!

 32. கடலூர் எழில்

  padhivai veliyidungal
  _______________

  வாதத்தை வெளியிடலாம்… விதண்டாவாதத்தை? ஆரோக்கியமாக உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். நிச்சயம் இடம் உண்டு!

  -Vino

 33. எப்பூடி

  இந்த பதிவிற்கு லேட்டாக வந்திருந்தாலும் என்கருத்து இதுதான்.

  சத்தித்யராஜ், T.ராஜேந்தர், விகடன், தங்கர் பச்சான், சாரு, ஞானி, மிஸ்கின் முதல் இங்கு கடுப்பில் உளறியிருக்கும் சில நண்பர்கள் முதல் எல்லோரும் தங்கல்லால் முடிந்த அளவு ரஜினியை பற்றி விமர்சித்துக்கொண்டுதான் இருப்பார்கள், இவர்களால் ரஜினியையும் ரஜினியின் வளர்ச்சியையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லப்போனால் எமக்குத்தான் bp அதிகமாகும்.

  ஒருவிடயம் மட்டும் நிதர்சனம்; தலைவர் ராமாயணத்து வாலி மாதிரி, இவர்கள் தலைவரை தாக்கதாக்க இவர்களது பலம் குறைவடைந்து தலைவரது பலம் அதிகரித்துக்கொண்டு போகும்.

  இதுதான் நடந்தது, நடக்கிறது, நடக்கும்…..

  தலைவரை யாராலையும் அளிக்க முடியாது.

  be cool வினோ.

 34. raj

  //உங்கள் கோபத்தை சற்று தனித்து கொள்ளுங்கள். விக்னேஷ் போல மலம் தின்றும் பன்றிகள் எனும் வார்த்தைகளும், முகத்தில் உமிழ்தல் போன்ற வார்த்தைகளும் மிக மட்ட ரகமாக இருக்கின்றன..//

  -இப்படி எழுதியது யார்?

  -வினோ

  இதே பக்கத்தில் மேலே எழுதியது……. rajini vignesh

  rajini vignesh says:
  October 29, 2010 at 8:58 pm

  //………இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் பேசினால் விளம்பரமும் கிடைகதே ? அதனால் தான் இந்த ஈழம் நாடகம் …இந்த நாய்கள் எல்லாம் …ஈழம் நிவாரண நிதிக்காக பத்து லக்சம் கொடுத்த என் தலைவரை பற்றி பேசுகிறார்கள் …நீங்கள் எல்லாம் மனுஷங்களே கெடையாது …மலம் தின்னும் பன்றிகள் .. தமிழன் ரஜினி விக்னேஷ் …//

  vino please dont publish these kind of words. rajini also will not like these words. very low class. lets maintain a decent argument. rajini is a very religious person. dont allow these kind of comments in your site. hope u understand. Tamil font is not working now. thats why i typed in english. lets love good cinema…rajini or kamal both are great friends and gift to tamilnadu.

 35. parthiban

  அய்யா போதும் அய்யா விடுங்கள்.
  தமிழர்களே தமிழர்களே உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரிய வில்லை.

 36. குமரன்

  அது சரி மிஷ்கின் என்பது தமிழ்ப் பெயரா?
  என்ன பொருள்?

  ரஜினியைப் பற்றிப் பேசி அதனால் பத்திரிகைகளில் இடம் பெறவேண்டிய நிலையில் உள்ள இவரெல்லாம் எது நல்ல படம் என்று சொல்ல வந்து விட்டார்.

 37. நாஞ்சில் மகன்

  மிஷ்கினின் யுத்தம் செய் படம் என்னாயிற்று? அதுவும் கீழ்த்தரமான படம்தானா ? அல்லது நந்தலாலா போல் நல்ல படமா என்பதை தெரியபடுத்துங்கள். நமது என்வழியில் வந்திருக்கும் வரிகளை இங்கு கொடுத்து இருக்கிறேன்.

  படத்தின் டிஸைன்கள் ஒவ்வொன்றும், இந்தப் படம் இன்னுமொரு அஞ்சாதே டைப் ஆக்ஷன் த்ரில்லர் என்பதை சொல்லாமல் சொல்கின்றன.
  இந்தப் படம் குறித்து மிஷ்கின் கூறுகையில், “படம் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று இப்போதே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்க விரும்பவில்லை. இது எனக்கும் சேரனுக்கும் ஒரு புதிய முயற்சி. நிச்சயம் தமிழ் ரசிகர்கள் விரும்பும் அளவுக்கு தருவேன். மீதியை படம் பேசும்…” என்றார்.

  யுத்தம் செய் ஆண்டவனுக்கே வெளிச்சம்? குடும்பபடமா? நல்ல படமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *