BREAKING NEWS
Search

‘மிரட்டிட்டீட்ட சிட்டி’ – ரஜினிக்கு முதல்வரின் பாராட்டு மழை!!

‘மிரட்டீட்ட சிட்டி’ – முதல்வரின் பாராட்டு மழை!

ந்திரன் படத்தில் சிட்டியாக வந்து மிரட்டிட்டீங்க ரஜினி’ என்று பாராட்டினார் முதல்வர் கருணாநிதி.

சென்னையில் சத்யம் திரையரங்கில் அதிகாலை 5 மணிக்கு எந்திரன் படத்தின் சிறப்புக் காட்சி முதல்வர் கருணாநிதிக்காக திரையிடப்பட்டது.

இந்தக் காட்சியில் முதல்வர் கருணாநிதி, சூப்பர் ஸ்டார் ரஜினி, மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், சன் குழும நிறுவனத்தின் தலைவர் கலாநிதிமாறன், தயாளு அம்மாள், செல்வி செல்வம் , காந்தி அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்த்தனர்.

மூன்று மணிநேரம் படம் ஓடியது. கலைஞருக்கு அருகில் ரஜினி அமர்ந்து பார்த்தார். ரோபோ ரஜினி வரும் சில காட்சிகளில் ரஜினிடம் முதல்வர் ஏதோ கூற, ரஜினி சிரித்துக் கொண்டார்.

படம் முடிந்ததும் கைதட்டி பாராட்டிய முதல்வர், ரஜினியிடம் “நடிப்பில் மிரட்டிட்டீங்க ரஜினி. எந்திரன் அனைவரையும் கவரும் மந்திரன்தான்” என்றார்.

பின்னர் நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்தார் முதல்வர்.

எந்திரன் படம் எப்படி இருந்தது?

அருமையாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பு, இயக்குநர் ஷங்கரின் அபார கற்பனைத் திறன் மற்றும் ஒளிப்பதிவாளரின் உழைப்பு மூன்றும் இந்தப் படத்தின் தனிச் சிறப்புகள்.

எந்திரன் என தமிழில் பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்து?

ஒரு விஞ்ஞானப் படத்துக்கு தூய தமிழில் பெயர் வைத்திருப்பது பெருமையாக உள்ளது. அதனால்தான் இந்தப் படத்துக்கு முழுமையான வரிவிலக்கும் தரப்பட்டுள்ளது.

சிவாஜி – எந்திரன் ஒப்பிடுங்கள்?

சிவாஜியை விட எந்திரன் சிறப்பாக உள்ளது…, என்றார் கருணாநிதி.

முதல்வருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் ரஜினி.

முன்னதாக வியாழக்கிழமை இரவுக் காட்சியில் கலாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் சத்யம் குழுமத்தின் எஸ்கேப் சினிமாவில் எந்திரன் படம் பார்த்தனர்.

படம்: தினகரன்




4 thoughts on “‘மிரட்டிட்டீட்ட சிட்டி’ – ரஜினிக்கு முதல்வரின் பாராட்டு மழை!!

  1. kicha

    Rajiniyai parthu Mirandar mudhalvar nu potralaama?
    __________________
    உண்மை அதுதானே!! 🙂
    -வினோ

  2. kicha

    /Rajiniyai parthu Mirandar
    mudhalvar nu potralaama?
    __________________
    உண்மை அதுதானே!!
    -வினோ/

    Adhedhan. Indha padaya parthu arandu dhan poyirukaru.
    Get ready folks

  3. சகோதரன்

    மக்கள் சொல்லிவிட்டார்கள். இனி ரஜினிதான் யுனிவர்சல் சூப்பர் ஸ்டார்.

    இது எப்படி இருக்கு….

    சூப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *