BREAKING NEWS
Search

மாலை முரசு அதிபர் பா ராமச்சந்திர ஆதித்தன் மரணம்!

மாலை முரசு அதிபர் பா ராமச்சந்திர ஆதித்தன் மரணம்!

ayya-1

சென்னை: மாலை முரசு அதிபரும், தேவி வார இதழின் நிர்வாக ஆசிரியருமான பா ராமச்சந்திர ஆதித்தன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவருக்கு வயது 80.

தமிழர் தந்தை என்று போற்றப்பட்டவரும் தினத்தந்தி நிறுவனருமான சி பா ஆதித்தனாரின் மூத்த மகன் பா ராமச்சந்திர ஆதித்தன். தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்தவர்.

தந்தையின் வழியில் பத்திரிகைத் துறையில் நுழைந்த இவர் மாலை முரசு பத்திரிகையின் அதிபரானார். தேவி வார இதழைத் தொடங்கினார். தொடர்ந்து தேவியின் கண்மணி, பெண்மணி போன்ற இதழ்களையும் தொடங்கி நடத்தி வந்தார்.

தமிழ் நாளிதழ் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய புதுமையான நாளிதழான ‘கதிரவனை’ சென்னையிலும் நெல்லையிலும் தொடங்கினார். அன்றைக்கு மிக மிக வேகமாக வளர்ந்த நாளிதழ் என்ற பெருமை கதிரவனுக்கு உண்டு.

பெரிய அய்யா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் ராமச்சந்திர ஆதித்தன். தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜாம்பவனாகத் திகழ்ந்த ராமச்சந்திர ஆதித்தனுக்கு கண்ணன் ஆதித்தன், கதிரேசன் ஆதித்தன் என இரு மகன்களும், கீதா என்ற மகளும் உள்ளனர். மனைவி பெயர் பங்கஜம் அம்மாள்.

சென்னை அடையாறில் வசித்து வந்த ராமச்சந்திர ஆதித்தன், இன்று காலை லேசாக நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிர் பிரிந்துவிட்டது.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை மீட்டதில் முக்கியப் பங்காற்றியவர் ராமச்சந்திர ஆதித்தன். தொண்ணூறுகளில் இதற்காக பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைத்து, வங்கியை மீட்டார். அதன் இயக்குநராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.

ராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபங்களும் முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் அடையாறில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை சொந்த ஊரான காயாமொழியில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தம்பியைத் தொடர்ந்து…

சில மாதங்களுக்கு முன்புதான் தமிழ்ப் பத்திரிகை உலகின் அசைக்க முடியாத தூணாகத் திகழ்ந்த டாக்டர் சிவந்தி ஆதித்தன் மறைந்தார்.

அவர் மறைந்த சில தினங்களிலேயே அவரது மூத்த சகோதரர், பத்திரிகையுலகின் இன்னுமொரு பெரும் தூண் பா ராமச்சந்திர ஆதித்தன் நம்மைவிட்டுப் பிரிந்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *