BREAKING NEWS
Search

தீவுத் திடலில்… மாறுவேடத்தில் ரஜினி!

மாறுவேடத்தில் வந்து கவிதையை ரசித்த ரஜினி!

சென்னை தீவுத்திடல்…

தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் அங்கே ஒரு செயற்கை தாஜ்மகால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்க்க ஆவலுடன் நிறையப் பேர் வருகிறார்கள்.

அதைப் பார்க்க விரும்பியவர்களுள் ரஜினியும் ஒருவர். ஆனால், தாஜ்மகாலைப் பார்க்கப் போகும் தன்னைப் பார்க்க பெரும் கூட்டம் கூடி, சூழ்நிலை கெட்டுவிடுமே என்பதால், சமீபத்தில் அங்குபோனபோதுகூட அய்யன் அருவியை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பினார்.

இந்த நிலையில், சமீபத்தில் கவிஞர் வைரமுத்து தலைமையில் அந்த தாஜ்மகாலில் ஒரு காதல் கவியரங்கம் நடந்தது. தமிழக அரசின் சுற்றுலாத்துறைதான் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

தாஜ்மகால் மீது அழகான மேடை… அதில் முகலாயர் கால ஸ்டைலில் வெள்ளைத் திண்டுகள். மேடையில் கவிஞர் வைரமுத்து அமர்ந்திருக்க, காதல் கவியரங்கம் தொடங்கியது.

நல்ல கூட்டம். தாஜ்மகால் நிரம்பி வழிந்தது. பெரும்பாலும் இளைஞர்கள்.

அதில் ஒரே ஒரு முதியவர் மட்டும் வித்தியாசமாக தெரிந்தார். தள்ளாத வயது, நரைத்த தலை, கூரிய பார்வை. கவியரங்கத்தின் மீதே கண்ணும் காதும் வைத்து லயித்து இருந்தார்.

வைரமுத்துவின் கவிதை வரிகள் மழையாய் விழுந்தன. வரிக்கு வரி கூட்டம் கைத்தட்ட, அந்த வயதான முதியவர் மட்டும் அடிக்கடி தலையாட்டினார். தாடியை தடவியடி சிரித்துக்கொண்டார்.

“இதுதான் காதலுக்கு சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த்துளி” என்ற வரியையும், “கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது” என்ற வரியையும் ஆரவாரத்தோடு சபை ரசித்தபோது, அவரும் ரசித்தார்.

“யமுனையை விட கூவம் தாஜ்மகாலே கொடுத்து வைத்தது…

யமுனை வற்றிவிடும்…கூவம் வற்றாது”

-என்று வைரமுத்து கவிதை சொன்னபோது எழுந்த சிரிப்பின் அலைகளில், முதியவரும் மிதந்தார்.

கவியரங்கம் முடிந்தது. தடியை ஊன்றிக்கொண்டே முதியவர் கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விட்டார்.

அந்த முதியவர் வேறு யாருமல்ல. ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த்!!

நேரடியாக வந்தால் பரபரப்பு ஏற்படும் என்பதால், ரஜினிகாந்த் மாறுவேடத்தில் மின்னலாய் வந்து ரசித்துவிட்டுப் போனார்.

யாரும் அவரை அடையாளம் காண முடியவில்லை. அவரை அறிந்துகொண்டவர் ஒரே ஒரு அதிகாரி.. அவரும் காட்டிக் கொடுக்கவில்லை.

முன்பெல்லாம்… நாட்டின் நல்லது கெட்டதுகளை மாறுவேடத்தில் வந்து அறிந்து கொள்வார்கள் ஆட்சியாளர்கள். மக்களின் சுக துக்கங்களில் அப்படி பங்கேற்ற நிகழ்வுகளை கல்வெட்டுகளிலும் அது சார்ந்த புனைவுகளிலும் பார்க்க முடிந்திருக்கிறது.

ரஜினியும் பல முறை, பல இடங்களில் மக்களுடன் மக்களாய் மாறுவேடத்தில் இருந்திருக்கிறார். எம்எல்ஏ ஹாஸ்டலில் இரவு நேரங்களில் ஒரு போர்வையைப் போர்த்தியபடி, அங்கு வரும் ஊர்க்காரர்களுடன் உரையாடியிருக்கிறார்… நடைபாதைவாசிகளுடன் தங்கி அவர்களின் குறைகளை அறிந்திருக்கிறார்… திருவல்லிக்கேணி குடிசை மக்களில் பலர் தங்களுடன் இருந்தவர் ரஜினிகாந்த் என்று தெரியாமலே அவரைப் பற்றி விமர்சனம் செய்ததை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு போயிருக்கிறார்…

அடுத்தமுறை ஏதேனும் விசேஷ கூட்டங்களில், நிகழ்வுகளில் உங்கள் பக்கம் நிற்பவரை எதற்கும் உற்றுக் கவனியுங்கள்… உங்கள் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறவும் வாய்ப்புள்ளது!!

-என்வழி
8 thoughts on “தீவுத் திடலில்… மாறுவேடத்தில் ரஜினி!

 1. இனியவன்( இனியா அன்பு)

  மன்னர் மாறுவேடத்தில் கிளம்பி விட்டார்…… என்னைக்கு சுயரூபத்தில் காட்சி தருவார்…….தெரிய வில்லை….. அந்த நாள் எப்போ வரும்….. அரியனை ஏறும் நேரம் வேகு விரைவில்……. காத்து இருப்போம்……..

 2. Arun

  Vino,
  Yerkanave intha qs ketten neenga busy ya irukeenga pola athan marubadiyum kekuren… please share your answer… Neenga SS direct ta pathu pesi irukeengala? yeppa first SS direct ta patheenga unga experince mudincha yengaluku share pannunga vino sir…

  ____________________
  ஆம்.. 5 முறை சந்தித்துள்ளேன்.

  அதில் ஒரு அனுபவத்தை இங்கே தந்துள்ளேன். மீதியை அடுத்த கேள்வி பதிலில் தருகி்றேன்.

  http://www.envazhi.com/?p=6969

  -வினோ

 3. r.v.saravanan

  அடுத்தமுறை ஏதேனும் விசேஷ கூட்டங்களில், நிகழ்வுகளில் உங்கள் பக்கம் நிற்பவரை எதற்கும் உற்றுக் கவனியுங்கள்… உங்கள் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறவும் வாய்ப்புள்ளது!!

  காத்து கொண்டிருக்கிறேன்

  வினோ சூப்பர் ஸ்டில் இந்த இடுகைக்கு சேர்த்திருக்கீங்க

 4. Alaguraja

  i think rajini have a master plan to know people needs. Once he knows people needs through that type of visit, future it will be very useful for rajini. really this is a very good trend and good approach for a genuine leader. In india when compare for lot of political leaders he is in very UNIQUE. Different approach – different thought – in depth knowldge in particular area (politics) All these characters is very good for indian politics. I pray god he will become Cheif Minister of Tamil Nadu and serve a good goverene.

 5. khalifa

  இருண்டு போயிருக்கும் தமிழகத்திற்கு ஒளி விளக்கு ஏற்ற வா என் தலைவா!
  காவியங்கள் உன்னை பாட காத்து கிடக்கிறது…………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *