BREAKING NEWS
Search

மாமன் மச்சானும் விகடனின் ‘குறை விமர்சனமும்’!

விகடனின் குறை விமர்சனம்!

ந்த வாரம் ஒரு வாரப்பத்திரிக்கையில் முரட்டுக்காளை படத்திற்கு அவர்கள் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு எழுதிய விமர்சனத்தை மறுபிரசுரம் செய்திருந்தார்கள்.

இந்த பத்திரிக்கையின் விமர்சனக் குழுவினர் ரஜினிகாந்த் படங்களை பார்க்கச்செல்லும் போது பூதக்கண்ணாடி அணிந்து சென்றால் பரவாயில்லை. அன்று முதல் இன்று வரை கருப்புக் கண்ணாடியைத்தான் அவர்கள் அணிந்து செல்கிறார்கள் என்பதற்கு முரட்டுக்காளை விமர்சனம் ஓர் உதாரணம்.

விமர்சனத்தின் ஓர் பகுதி,

“சுமலதா, காட்டில் பாடிக்கொண்டு வர, உடனே அதை ரஜினி புரிந்துகொள்வதைப் பார்க்கும் போது, இந்தப் பாடல் ஏற்கனெவே கதையில் பாடப்பட்டிருக்கவேண்டுமே என்று தோன்றுகிறது! இல்லையென்றால் சுமலதா ரஜினியைத் தேடிக்கொண்டு வரும்போது, இந்தக் காதல் ரசம் ததும்பும் பாடல் எங்கிருந்து வந்தது?”

விமர்சனக் குழுவினர் படம் ஆரம்பித்து அரைமணிநேரம் கழித்து சென்றார்களோ, இல்லை படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவ்வப்போது அச்சுமுறுக்கு சாப்பிட எழுந்து சென்றார்களோ என்னவோ!

ரஜினியும் சுமலதாவும் விசிலால் இந்தப்பாடலின் மெட்டை பாடிக்கொண்டு தென்னந்தோப்பில் காதல் வளர்க்கும் காட்சி மட்டும் திரையில் சுமார் 5 நிமிடத்திற்கு மேலாக வருமே….

“இன்னொரு இடத்தில், “மாட்டுச் சண்டையில் கூடவா ரஜினியின் கராத்தே ஸ்டைல்? தன்னைப் பார்த்துவிட்டுக் காளைமாடும் தன் முன்னங்கால்களைத் தூக்கி குங்ஃபூ போஸ் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறாரா? போகிறபோக்கில், கோவிலுக்குச் சென்று சுவாமியை வணங்குவதுபோல் படமெடுத்தால்கூட, கராத்தே ஸ்டைலில் நான்கு தடவை கையை சுற்றிவிட்டுத்தான் ரஜினி, கடவுளுக்கே வணக்கம் தெரிவிப்பார் போலிருக்கிறது!”

என்று தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டியுள்ளனர்.

இதற்கு ஏற்கெனவே எஸ்பிஎம் பதில் கூறியிருந்தார். வழக்கமாக மாட்டின் மேல் பாய்வது போல படமாக்காமல், அதனுடன் நேருக்கு நேர் நின்று மோதுவதாக எடுக்க வேண்டும் என்பதற்காக படமாக்கப்பட்ட காட்சி அது. அன்றைக்கு ரசிகர்கள் அமர்க்களமாக வரவேற்ற காட்சியும் அது. கோயிலுக்குப் போய் கடவுளை ரஜினி எந்த ஸ்டைலில் வணங்கினால் இவர்களுக்கென்ன… அது அவர் தனிப்பட்ட விஷயம். இது படத்துடன் சம்பந்தப்பட்ட சமாச்சாரமில்லையே.

இன்னொரு முக்கியமான விஷயம், முரட்டுக்காளையில் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட, படத்துக்கே தனி மரியாதையை ஏற்படுத்திய இசைஞானி இளையராஜா பற்றி ஒரு வரி சொல்லவில்லை. ரஜினி, இளையராஜா போன்ற ஈடுஇணையில்லா கலைஞர்கள் மீது இவர்களுக்கு இன்று நேற்றல்ல.. காலகாலமாக இருந்து வரும் காழ்ப்புணர்வின் வெளிப்பாடுதான் இந்த விமர்சனம்.

Cult Classic என்பதற்கு அட்டகாசமான உதாரணம் முரட்டுக் காளைதான். இந்தப் படத்துக்கு நிகராகக் கூட வேண்டாம்.. அட, ஒரு 20 சதவிகிதம் சுவாரஸ்யமான ஒரு ஆக்ஷன் படத்தை இன்றைக்கு உதாரணம் காட்ட முடியுமா!

குறிப்பு: முரட்டுக்காளை படத்தின் தென்னந்தோப்பு காட்சியில் பார்த்த ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

சுமலதா: உங்களுக்கு மாடுபிடிக்கிறத தவிர என்ன தெரியும்?

ரஜினிகாந்த்: எனக்கா….ஹா ஹா ஹா(தலைவரின் டிரேட் மார்க் சிரிப்பு) நான் ஒரு “சகலகலா வல்லவன்” தெரியுமா?

தலைவர் வாயில் இருந்துதான் “டைட்டில்” அங்க போயிருக்கு பார்த்தீர்களா….

-காத்தவராயன்
14 thoughts on “மாமன் மச்சானும் விகடனின் ‘குறை விமர்சனமும்’!

 1. udhay

  தலைப்பு அவர் வாயில இருந்தா போச்சு…எதோ ரஜினி காந்த சொந்தமா வசனம் எழுதி பேசற மாதிரி சொல்றீங்க …? வசன கர்த எழுதி கொடுத்தத பேசி இருக்காரு .

 2. Rajan

  //தலைப்பு அவர் வாயில இருந்தா போச்சு…எதோ ரஜினி காந்த சொந்தமா வசனம் எழுதி பேசற மாதிரி சொல்றீங்க …? வசன கர்த எழுதி கொடுத்தத பேசி இருக்காரு .//

  வசன கர்த்தா எழுதியதுதான் யாரும் மறுக்க வில்லை இருந்தாலும் யாருக்கு முதலில் எழுதப்பட்டது என்பதை தான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறார் ….

 3. krish

  நெறய பேர் வாயில இருந்து என்னனமோ வருது
  அதெல்லாமே …. பெரிசா பேசப்படவில்லையே

  இதான் ரஜினி

  அப்பொழுது தொலைக்காட்சி ponra media vimarsanam illai
  விகடன் vimarsanathiyum meeri இது velivila kandathu
  ரஜினி ippa இருக்கிற இடம் உழைப்பால் adainthathu

  ippa irukura ……. padam எந்த விமர்சனம் செய்தும் ஓட மாடேங்குதே

 4. கிரி

  சுமலதா பாடல் பற்றி அவர்கள் கூறியது அர்த்தமற்ற விளக்கம்.

  மாட்டுச்சண்டை பற்றி ..

  ரஜினி ஒரு மாஸ் ஹீரோ அவர் அல்லது அவரைப்போல ஹீரோக்களின் படங்கள் அந்த காலக்கட்டத்தில் இதைப்போல எடுக்கப்படுவதை ரசிகர்கள் ரசித்தார்கள், அதனாலையே அதைப்போல காட்சிகள் வைக்கப்படுகிறது. அதைப்போல காட்சிகள் விகடன் போல ஒருசிலரால் கிண்டலடிக்கப்பட்டாலும் மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  ரஜினி இதைப்போல காட்சிகளை காலத்திற்க்கேற்றாப்போல மாற்றிக்கொண்டார். இப்போதும் சிவாஜியில் கூட சண்டை காட்சியில் தான் ஒரு சில மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருக்குமே தவிர மற்றபடி அளவுக்கு மீறி தன் நடிப்பை மற்ற காட்சிகளில் (ஹீரோயிசத்தை) மிகைப்படுத்தி காட்டியதில்லை. இதனாலையே இன்னும் சூப்பர் ஸ்டாராக மிளிர்ந்து கொண்டு இருக்கிறார்.

  தற்போதெல்லாம் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலே தன்னை பெரிய ஸ்டாராக நினைத்துக்கொண்டு ஒரு சில நடிகர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை. அவ்வாறு செய்யும் படம் வந்த வேகத்தில் பெட்டிக்குள் போவது தெரிந்தும் அப்படி செய்கிறார்கள். இவர்களுடன் ஒப்பிடும் போது 150 படங்கள் நடித்தும் தன் நிலை உணர்ந்து நடித்து தற்போது மக்கள் எதை விரும்புகிறார்கள் எதை கிண்டலடிக்கிறார்கள் என்பதை அறிந்து அதன் படி நடிப்பதால் தான் இன்னும் மக்களிடையே ரசிக்கும்படி விருப்ப நடிகராக ரஜினி உலா வருகிறார்.

  இது பற்றி ஒரு பதிவே எழுதலாம் அவ்வளவு விஷயம் உள்ளது.

 5. peraveen

  //ரஜினிகாந்த்: எனக்கா….ஹா ஹா ஹா(தலைவரின் டிரேட் மார்க் சிரிப்பு) நான் ஒரு “சகலகலா வல்லவன்” தெரியுமா?//

  சூப்பர் சூப்பர் சூப்பர் …

 6. கிரி

  //kamalfan says:
  2009 ஒரு அதிசய ஆண்டு. கமலை ரஜினியும் ரஹ்மானை ராஜாவும் வெகுவாக, உலகமே பார்க்க, மேடையில் வைத்து புகழ்ந்த ஆண்டு. இந்த நாலு பேரும் வெவ்வேறு வகையில் மிகப்பெரிய திறமைசாலிகள். இவர்களில் யாரையும் யாரோடும் ஒப்பிட்டு குறைத்து பேச முடியாது. ஏனென்றால், நாலு பேரின் திறமைக்கும், அவர்களிடையே மட்டுமல்ல, வெளியிலும் எந்த மாற்றும் கிடையவே கிடையாது//

  வழிமொழிகிறேன்.

 7. kiri

  விகடன் மட்டும் தான் ரஜினியை செரியாக புரிந்துகொண்ட உள்ளது.

  Weel done Vikatan..

 8. devraj

  vikatan is always against Rajini, Shame on them.Muratukalai was one of the great hits of Thaliver.

 9. r.v.saravanan

  முரட்டுக் காளை இந்தப் படத்துக்கு நிகராக ஒரு 20 சதவிகிதம் சுவாரஸ்யமான ஒரு ஆக்ஷன் படத்தை இன்றைக்கு உதாரணம் காட்ட முடியுமா!

  good kaathavaraayan

 10. r.v.saravanan

  கமலை ரஜினியும் ரஹ்மானை ராஜாவும் வெகுவாக, உலகமே பார்க்க, மேடையில் வைத்து புகழ்ந்த ஆண்டு. இந்த நாலு பேரும் வெவ்வேறு வகையில் மிகப்பெரிய திறமைசாலிகள். இவர்களில் யாரையும் யாரோடும் ஒப்பிட்டு குறைத்து பேச முடியாது. ஏனென்றால், நாலு பேரின் திறமைக்கும், அவர்களிடையே மட்டுமல்ல, வெளியிலும் எந்த மாற்றும் கிடையவே கிடையாது//

  நன்றி கிரி நானும் வழிமொழிகிறேன்.

 11. SEELAN, DUBAI

  ரசிக்க தெரியாதவர்கள் ரஜினியை குறை சொல்ல வேண்டுமென்றே விமர்சனம் எழுதுபவர்கள் அப்படி தான் எழுதுவார்கள், உண்மையில் ரஜினி தான் சகல கலா வல்லவன், அவர் கமலை அப்படி குறிப்பிட்டது அவரது தன்னடக்கத்தையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது, அது தான் சூப்பர் ஸ்டார்.

 12. மிஸ்டர் பாவலன்

  கிட்ட தட்ட பஜ்ஜி சாப்பிடக் கொடுக்கும் பேப்பரை
  போல தான் நான் விகடன், ஜூனியர் விகடன் இதை
  படிக்கிறேன். நீங்கள் இவ்வளவு சீரியசாக எடுத்துக்
  கொள்வது வியப்பாக உள்ளது.

  -மிஸ்டர் பாவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *