BREAKING NEWS
Search

மாப்பிள்ளை படத்தை ரீமேக் செய்ய என்னைவிடப் பொருத்தமானவர் யாருமில்லை! -தனுஷ்

மாப்பிள்ளை படத்தை ரீமேக் செய்ய என்னைவிடப் பொருத்தமானவர் யாருமில்லை! -தனுஷ்

னிதனின் தலை ரொம்பச் ரொம்பச் சின்னதாக படைக்கப்பட்டது ஏன் தெரியுமா… சின்ன வெற்றிகளைக் கூடத் தாங்க முடியாமல் நிலை தடுமாறி, கீழே விழுந்து எழுந்து நிதானத்துக்கு வரவேண்டும். அந்த வலி அடிக்கடி நினைவுக்கு வந்து கொண்டே இருக்கவேண்டும் என்பதற்குத்தான். புத்திசாலிகள் ஓரிருமுறை விழுந்து எழுந்து பின் நிதானப்பட்டு வாயை மூடிக் கொள்வார்கள். மற்றவர்கள் விழுந்து கொண்டே இருப்பார்கள்….

rajini-danushjpg

-இந்தக் தத்துவக் கதையை முன்பு ஒரு பேட்டியில் சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆன்மீக குரு சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்.

நடிகர் தனுஷ் குறித்து கீழ்வரும் செய்தியைப் படித்த போது, நண்பர்களுகள் சிலர் மேலே குறிப்பிட்ட கதையை நினைவுபடுத்தினார்கள்.

ஒரு முறை சுவாமி தயானந்த சரஸ்வதியைப் பார்த்துவிடுங்கள், தனுஷ்…!

‘கோவணத்தில் இருந்த பொழுதும், கோபுரத்தில் இருந்த பொழுதும்… அதுக்கொரு மதிப்புமில்ல அழுக்கு அழுக்குதான்!’ என்ற வரிகள் ஏனோ இப்போது நினைவுக்கு வருகின்றன.

மற்ற நடிகர்களுக்கு இல்லாதது… ரஜினிக்கு மட்டுமே உரியது, மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும் கலந்த உரிமைதான். அதை உரசிப் பார்ப்பதுபோல் பேட்டிகள் அமைவதை நிறுத்திக் கொள்ளவாவது தனுஷ் முயற்சிக்கலாமே!

இன்னொன்று இதுபோன்ற பேட்டிகளை தனுஷ் தருவது இது முதல் முறை அல்ல என்பது ரசிகர்களான எங்களுக்கும் நினைவிருக்கிறது!

தனுஷ் நேற்றும் அதற்கு முன்தினமும் அளித்த பேட்டிகள் மற்றும் அது தொடர்பிலான செய்தி (தட்ஸ் தமிழ், டைம்ஸ் ஆப் இந்தியா):

சுய புராணம் பாடுவதில் தமிழனுக்கு… ஸாரி தமிழ்நாட்டிலிருப்பவர்களுக்கு இணை யாருமில்லை. தங்களைத் தாங்களே அவதாரமாக நினைத்துக்கொண்டு அள்ளி விடுவதில் மன்னர்கள். அதிலும் சிம்பு – தனுஷ்-பரத் போன்ற சுள்ளான்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

சிம்பு வாயைத் திறந்தாலே சுய புராணம் பங்கிங்காம் கால்வாய் ரேஞ்சுக்கு ஓடும். சமீப காலமாகத்தான் சற்று அடக்கி வாசிப்பது போல நடிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் அவரது தொழில் எதிரி தனுஷ் இப்போது ஆரம்பித்துள்ளார். இரண்டு படங்கள் ஓகோவென்று ஓடிவிட்டதாக அவரே நம்பிக் கொண்டதன் விளைவு போலிருக்கிறது!

படிக்காதவன் என்ற தலைப்பை வைத்ததற்கே தனுஷ் மீது பல தீவிர ரஜினி ரசிகர்கள் கடுப்பிலிருக்கிறார்கள். ‘இவர் ரஜினி மாப்பிள்ளைன்னா இவர் பண்ற சேட்டையையெல்லாம் ரசிக்கனும்னு தலை எழுத்தா?’ என பலர் வெளிப்படையாகவே விமர்சித்தார்கள்.

இப்போது, ரஜினியின் ‘பிளாக் பஸ்டர்’ படமான மாப்பிள்ளையை ரீமேக்குகிறாராம் தனுஷ். அதுமட்டுமல்ல, இந்த ரீமேக் குறித்து அவர் நாளிதழ்களுக்கு அளித்துள்ள பேட்டிதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

‘தொடர்ந்து இரண்டு சுமாரான படம் கொடுத்ததற்கே இந்த பில்டப் என்றால், இன்னும் ரஜினி மாதிரி தொடர் வெற்றிகளைக் கொடுத்திருந்தால், தமிழ்நாட்டையே விலை பேசுவார் போலிருக்கே!’ என்கிறார்கள் திரைப்பட விமர்சகர்கள்.

அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி:

“நான் ரஜினியின் மருமகன் என்ற உரிமையில் இந்தப் படத்தைப் பண்ணவில்லை. ரஜினிகாந்த் நடித்தவற்றிலேயே எனக்கு இந்தப் படம்தான் மிகவும் பிடிக்கும் அதனால் விரும்பிச் செய்கிறேன். நான் ஒரு நடிகர், என்ற முறையில் ரஜினியிடம் இதற்கான அனுமதி பெற்றுவிட்டேன்.

இதைவிட முக்கியம், இந்தப் படத்தை ரீமேக் செய்ய என்னைவிடத் தகுதியான ஆள் வேறு யார் இருக்கிறார்கள் இங்கே?

நிறைய பேர் என்னை அடுத்த ரஜினி என்கிறார்கள் (?!). ஆனால் ரஜினியின் கார்பன் காப்பியாக நான் இருக்க விரும்பவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு ரஜினிதான். நான் என் ஸ்டைல்ல கதைகளைத் தேர்வு செய்கிறேன்… நடிப்பில் பெரிய அளவுக்கு வரணும். எங்க அப்பா அம்மாவுக்கு பெருமை தேடித் தரணும்…”, என்று கூறியுள்ளார்.

அதுக்கு ஏன் ரஜினி படங்களை ரீமேக் பண்ணனும்… சொந்தமா கஸ்தூரிராஜா செய்த படங்களை ரீமேக் செய்து நீங்கள் விரும்பும் பெயரையும் புகழையும் உங்க அப்பா அம்மாவுக்கு பெற்றுத் தர முயற்சிக்கலாமே தனுஷ்!!

குறிப்பு: இந்தச் செய்திகள் வெளியான இன்று (செவ்வாய்க்கிழமை) தனுஷின் பிறந்த நாள்!

-ரசிகன்
10 thoughts on “மாப்பிள்ளை படத்தை ரீமேக் செய்ய என்னைவிடப் பொருத்தமானவர் யாருமில்லை! -தனுஷ்

 1. harisivaji

  நிறைய பேர் என்னை அடுத்த ரஜினி என்கிறார்கள் (?!).

  yaaravathu oruthana enta kaami paakalam

 2. r.v.saravanan

  இந்தப் படத்தை ரீமேக் செய்ய என்னைவிடத் தகுதியான ஆள் வேறு யார் இருக்கிறார்கள் இங்கே?

  danush inda mathiri solla kudathu
  rajini sir avargalidam irukkum adakkam danushkku yen illai

 3. Manoharan

  இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் தனுஷ் தன்னை திருத்திக்கொள்வது நல்லது. ரஜினியின் பெயரை கெடுக்கவேண்டாம். மாப்பிள்ளை படத்தை ரஜினியை தவிர வேறு யார் நடித்தாலும் அது வெறும் படம்தான். சூப்பர்ஹிட் படம் அல்ல.

 4. Guevara

  யாரிடம் போய் சொல்லி அழுவது? சின்ன சுள்ளான் இப்ப பெருசா துள்றான் !!

 5. arul

  anru thalaivarin padikkathavan petra vetri patri unnakku theriyuma.onrai therinthu kol nee naditha padikkathavan padathin vetrikku thalaivarin pada thalaipputhan karanam.thalaivarin super duper hit pada peyarai vaithu appadi yenna kilithirukkirai yendru parpatharkakarthan anaithu thalaivar rasigargalum vanthu parthom.adakkamthaan unnai melnokki nadathum.illai aadathan seiven yendral vijaikku kidaitha hatrick aaputhan unakku kidaikkum.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *