BREAKING NEWS
Search

‘மான் கண்ட சொர்க்கங்கள்…. காலம் போகப் போக யாவும் வெட்கங்களே!’

‘மான் கண்ட சொர்க்கங்கள்…. காலம் போகப் போக யாவும் வெட்கங்களே!’

மிழ் சினிமாவில் மெல்ல மெல்ல வெளிப்பட்டு பின் இன்னிசைச் சக்கரவர்த்தியாக இளையராஜா ஆட்சி செலுத்த ஆரம்பித்த நேரம் அது.81da4_msv240609_1

தமிழ்த் திரையிசையின் ஆதார ஸ்ருதியாக இளையராஜாவே போற்றும் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனும் தன் பங்குக்கு வெகு அரிதான பாடல்களை, முற்றிலும் புதிய பாணியில் தந்து கொண்டிருந்தார்.

ராஜா – எம்எஸ்வி இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் எப்படியெல்லாம் நேசித்துக் கொள்கிறார்கள் என்ற உண்மையை அன்றைக்கு வெளிப்படுத்த மீடியா இல்லாத நிலையில், ராஜா ரசிகர்கள் என்றும் எம்எஸ்வி ரசிகர்கள் என்றும் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்த எண்பதுகளின் ஆரம்ப வருடம் அது.

vlcsnap01zf9

அப்போதுதான் (1981) இந்தப் பாடல் வெளிவந்தது.

திடீரென்று முகத்தில் அறையும் பூந்தூரல் மாதிரி அத்தனை புதிதான உத்தியுடன், மாறுபட்ட மெட்டாக இந்தப் பாடல் வெளிவந்தது. பொதுவாக எம்எஸ்வியின் பாடல்களில் தபேலாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தப் பாடலில் டிரம்ஸ் மற்றும் பேஸ் காங்கோ மட்டுமே முழுக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

படம் கே பாலச்சந்தர் இயக்கிய 47 நாட்கள். இதே பெயரில் தொடர்கதையாக வெளியான சிவசங்கரியின் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். சிரஞ்சீவி இதில்தான் ஒரு எதிர் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். ஜெயப்ரதா கதாநாயகி.

vlcsnap03qy6

இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள்தான். ஆனால் அதில் ஒன்று காலத்தை வென்ற காவியமாகிவிட்டது. ஒரு காரணம் மெல்லிசைமன்னர் எம்எஸ்வி என்றால், இன்னொரு காரணம் கவிச் சக்கரவர்த்தி கண்ணதாசன்.

ஒவ்வொரு வரிகளும் மனதின் ஆழம்வரை ஊடுருவின. அத்தனை எளிமை, ஆனால் எக்கச்சக்க அர்த்தங்கள்… தமிழில் வெளியான மிக நீளமான பாடல்களில் ஒன்று இது. நான்கு சரணங்கள். ஆனால் சிவசங்கரி 47 வாரங்கள் தொடர்கதையாக எழுதியதை, கண்ணதாசன் அவர்கள் நான்கு சரணங்களுக்குள் சொல்லி முடித்திருப்பார். தெய்வீகப் புலவன் திருவள்ளுவன் ஜாதியல்லவா…(கவிஞர் ஜாதி என்பதைச் சொல்கிறேன்)

vlcsnap10co3

பாடலை தொடர்ச்சியாகக் காட்டாமல், ஒவ்வொரு சரணத்தையும் பொருத்தமான சூழலுக்கு பயன்படுத்தியிருப்பார் கேபி.

மான் கண்ட சொர்க்கங்கள்…
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே…
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே…

சென்னையில் கட்டுப்பெட்டித்தனமான மிடில்கிளாஸ் பெண்ணான நாயகி, கணவனை நம்பி பிரான்ஸுக்குப் போகிறாள். போன இடத்தில்தான் அவனது மன்மத லீலைகள் ஒவ்வொன்றாக முடிச்சவிழ்கின்றன.

அந்த சூழலை கவிஞர் வார்த்தெடுக்கும் விதம் பாருங்கள்….

…தாமரைப் பூவென்றான்
காகிதப் பூவானான்
ராமனைப் போல் வந்தான்
ராவணன் போலானான்
பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது
ஊருக்கு ஒரு உள்ளம்
ஊருக்கு ஒரு எண்ணம்
யாருக்கு அவன் சொந்தம்
யாருக்கு அவன் மஞ்சம்
கண்ணீரில் நீராட கடல் தாண்டி வந்தாலே பொன்மங்கை….

நம்ப வைத்து கழுத்தறுக்கும் கயமை குணம் கொண்ட கணவன் பற்றிய வர்ணனைகளை கவியரசர் சொற்களுக்குள் இப்படி சிறைப்பிடித்திருப்பார்…

…வேதங்கள் அறிகின்றான்
வேதனை தருகின்றான்
நல்லவன் செல்லாத பாதையில் செல்கின்றான்
அப்பாவி பெண்ணுள்ளம்
இப்பாவி செயல் கண்டு தள்ளாடுது
காலையில் ஓர் வண்ணம்
மாலையில் ஓர் வண்ணம்
மாறுது அவள் பாதை
வாடுகிறாள் பாவை
பூச்சூடி வந்தாளே புரியாமல் நின்றாளே இப்போது!

சோகம், விரக்தியின் உச்சம் என்னவென்பதை கீழ் வரும் வரிகள் படித்தால்… கேட்டால் புரிந்து கொள்ளலாம்.

“ஏன் இந்த சேய் என்று தாளாத நோய் கொண்டாள் இப்போது…”  – எத்தனை கொடுமையை தன் கணவனிடம் அனுபவித்திருந்தால் ஒரு பெண் இப்படியெல்லாம் எண்ணுவாள்…

இந்தக் கேள்வியை, பாடலைக் கேட்பவர் ஒவ்வொருவர் மனதிலும் எழ வைத்திருப்பது கவிஞரின் வரிகளுக்கு மட்டுமே உள்ள வலிமை.

…ஆசையில் ஓர் நாளில்
பாடிய ஓர் பாட்டில்
தாயென ஆனோமே சேயினைத் தந்தோமே…
ஏன் இந்த சேய் என்று தாளாத நோய் கொண்டாள் இப்போது…
பாசத்தில் நீராடி
பந்தத்தில் போராடி
வேஷத்தைத் தொடர்வாளா
வேதனைப் பெறுவாளா
ஊரில்லை உறவில்லை
தனியாக நின்றாலே பூமாது!

எப்படியாவது அந்த கொடியவனிடமிருந்து தாய்நாட்டுக்கு தப்பித்துப் போய்விட வேண்டும்… ஆனால் போக வழி தெரியாது… இத்தனைநாள் வழிபட்ட கடவுளாவது காப்பாற்ற வரமாட்டாரா? – இதுதான் இயலாமையின் உச்ச கட்டம். அந்தக் கடைசி வரிகளைக் கேட்பவர் கண்ணோரங்கள் நிச்சயம் கசிந்துவிடும்… பாடலை அத்தனை பாவத்துடன் பாடியிருப்பார் எஸ்பிபி.

தன் வழி செல்கின்றாள்
சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ

எவ்விதம் செல்வாளோ

எங்கெங்கும் மேகங்கள் எங்கெங்கும் பனிமூட்டம் இப்போது
இந்தியத் தாய்நாட்டை எண்ணுகிறாள் மங்கை
சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
தாய்வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதோ இப்போது!

-இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்டு முடிக்கும் போதும், 20 வருடங்கள் பின்னோக்கிப் பயணித்துவிட்டு திரும்ப வந்த ஒரு உணர்வு. யாரோ நமக்கு நெருக்கமான உறவை சிக்கலிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துவிட்ட நிறைவு…!

பாடல் (ஆடியோ மட்டும்):

பாடலின் ஒரு பகுதி… (வீடியோவாக)

-சங்கநாதன்
7 thoughts on “‘மான் கண்ட சொர்க்கங்கள்…. காலம் போகப் போக யாவும் வெட்கங்களே!’

 1. r.v.saravanan

  இந்தியத் தாய்நாட்டை எண்ணுகிறாள் மங்கை
  சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
  தாய்வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதோ இப்போது!

  sanganathan sirm, indha varigal arumai

  msv,kannadasan,spb mumurthigal seitha isai yagam than indha padal

  ungalin isai padivu yen idayathil padigindrathu

  thanks

 2. r.v.saravanan

  vino sir,

  again thanks for you

  regarding ninaivugalai meetum isai paguthi

  nam envazhikku oru varaprasadam
  thanks
  kudandhai r.v.saravanan

 3. Malar

  உண்மையைச் சொல்கிறேன்…

  இந்தப் பாடலை இப்போதுதான் நான் இத்தனை நிதானமாக, கவனித்துக் கேட்டேன்… பிரமாதம்.

  முன்பெல்லாம் வானொலியில் இந்தப் பாடல் வரும்போது, மிக நீளமாக இருக்கிறதே என அடுத்த ஸ்டேஷனுக்கு தள்ளி விடுவோம்.

  ஆனால் இந்த வரிகள், அந்த இசை, எஸ்பிபியின் குரல் மூன்றையும் இத்தனை கவனமெடுத்துக் கேட்கும் பக்குவம் வர கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குமேல் தேவைப்பட்டிருக்கிறது எனக்கு.

  “”””இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்டு முடிக்கும் போதும், 20 வருடங்கள் பின்னோக்கிப் பயணித்துவிட்டு திரும்ப வந்த ஒரு உணர்வு. யாரோ நமக்கு நெருக்கமான உறவை சிக்கலிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துவிட்ட நிறைவு…!””””

  -சத்தியமான வார்த்தைகள் சங்கநாதன் சார்!

 4. Manoharan

  This is one of my most favourite song. I use to hear this one more frequently. Everytime i hear this song the feeling will be totally against giving our girls to a person living abroad. If a parent is intend to give their girl to abroad then they should hear this song. I m sure most of them will change their mind.
  That is the impact of this song. It creates a panic feeling in our mind.

 5. lakshminarayanan c

  kannadasanin vaira varigal kaalathai vendru nirkiradhu. maraindhum maraiyadha mamanithar kaviyarasar ippaadalil moolam nam mathil vazhndhu kondirukkiraar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *