BREAKING NEWS
Search

மனிதமாவது மண்ணாங்கட்டியாவது…!


அவர்கள் வியாபாரிகள்… வருவார்கள், தருவார்கள்… சுருட்டுவார்கள்!

திருவள்ளூர்: இந்தப் புகைப்படம் காட்டும் காட்சிக்குரிய பின்னணியை முதலில் தெரிந்து கொள்வோம்…

11-arani200

இடம் – திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம். ஜமாபந்தி என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர் நடத்தும் கட்டப்பஞ்சாயத்து நாள் அது…

அதோ  ஓரத்தில் படுத்துக் கிடக்கிறாரே அந்த முதியவர்… அவர் ஓய்வாகப் படுத்திருக்கவில்லை. வெயில் கொடுமையால் வந்த மயக்கத்தால் விழுந்து கிடக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த அந்த 68 வயது முதியவரின் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விட்டனர்.

தனது நிலத்தை மீட்டுத் தருமாறு கோரி  மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுப்பதற்காக வந்திருக்கிறார். கடும் வெயிலில் வந்ததால், வாசலிலேயே மயங்கி விழுந்து விட்டார்.

நாம்தான் மனிதாபிமானத்தை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தவர்களாயிற்றே… மனிதசாபிமானம் ஒரே இடத்தில் பதுங்கிக் கொண்டதால், மற்றவர் யாரும் அந்தப் பெரியவரைக் கண்டு கொள்ளவில்லை. அவரவர் வேலையைப் பார்த்து போய்க் கொண்டிருந்தனர்.

அந்தக் காருக்கு முன்பு கும்பலாக நிற்கிறார்களே…

இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை காலால் இட்ட பணியை தலையால் செய்யக் காத்திருப்பதாக தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்தவர்கள். அடடா… தப்புத் தப்பு… அப்படி சொல்லிக் கொண்டே குவார்ட்டரும், பிரியாணியும் கரன்சியுமாக நம் தெருக்களை வலம் வந்தவர்கள்.

இந்த முதியவரைப் போன்ற ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வாக்காளர்களிடம் ஓட்டுக்களை வாங்கி பதவியில் அமர்ந்து இப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது வேறு ஏதாவதுஅரசுத் துறை அலுவலகங்களின் முன்னாள் தங்கள் அடிப்பொடிகளுடன் அந்த பணத்தை வசூல் செய்துகொண்டிருப்பவர்கள்.

இவர்களுக்கு பெயரும் உண்டு. அரசு ஜெஸட்படி… கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார், பொன்னேரி எம்எல்ஏ பலராமன், அதிமுக எம்பி வேணுகோபால் என்பது இந்த நபர்களின் பெயர்.

இவர்களுக்கு வேறு பெயர்களும் உண்டு: ஓட்டு வியாபாரிகள். .. தண்டல்காரர்கள்!

இவர்களிடம் போய் மனித நேயம் எதிர்பார்க்க முடியுமா…

மனிதமாவது மண்ணாங்கட்டியாவது… சக மனிதன் செத்தால் சந்தோஷமாக சிடி போட்டுப்  பார்க்கும் கலாச்சாரத்தை வளர்த்தெடுத்த தமிழக் கூட்டம்தானே இது…

பிணத்தின் மேல் வைத்து பிரியாணி திண்ணும் காட்சியைப் பார்க்க வேண்டியது மட்டும்தான் பாக்கி!
9 thoughts on “மனிதமாவது மண்ணாங்கட்டியாவது…!

 1. endhiraa

  சே..ரொம்ப கொடுமை..இவர்களுக்கெல்லாம் நிச்சயம் தண்டனை கிடைக்கும் ! ஆண்டவன் இருக்கிறான் !

 2. murugan

  According to social studies, Non-White people (such as Asians, Africans etc.) are primarily highly Selfish and have little or no Society responsibility at all.

 3. m

  all Tamil nadu political people money makining business

  இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை காலால் இட்ட பணியை தலையால் செய்யக் காத்திருப்பதாக தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்தவர்கள்.

 4. SenthilMohan K Appaji

  ஓரிரு வருடங்களுக்கு முன் ஆங்கில தொலைக்காட்சிகளில் இது போல் செய்தியினை ஒளிபரப்பினார்கள். ஒரு வயோதிக பெண்மணி மருத்துவமனை ஒன்றின் முன் மயங்கி விழுந்ததனை பற்றியும், அவருக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஏதும் உதவி செய்ய வில்லை என்று கூறிக்கொண்டு, மயங்கி கிடந்தவரை live-coverage செய்து மருத்துவ தர்மத்தினை பற்றி கிழித்துக் கொண்டு இருந்தார் ஒரு நிருபர், தமது மனிதாபிமானத்தின் லட்சணம் பற்றி அறியாமல். பெரும்பாலான பத்திரிகைகாரர்களுக்கு, தாம் மற்றவர்களிடமிருந்து தனிப்பட்டவர் என்ற நினைப்பு எப்போது இருக்கத்தான் செய்கின்றது. மேற்கண்ட இதனை போட்டோ எடுக்க வேண்டும் என்று தோன்றிய Photographer-க்கு, அந்த பெரியவருக்கு முதலில் தண்ணீர் கொடுக்கவேண்டும் என்றோ, முதல்உதவி செய்ய வேண்டும் என்றோ தோணாமல் போய் விட்டது. அல்லது போட்டோ எடுத்த பின்பாவது ஏதாவது செய்தாரா?

 5. ss99@gmail.com

  Yes,

  Photographer must have done something after he took the snap, atleast.. Then he is the worst of the whole lot, because he is also interested in sensational picture than humanity..

 6. Manoharan

  பெரும்பாலான பத்திரிகைகாரர்களுக்கு, தாம் மற்றவர்களிடமிருந்து தனிப்பட்டவர் என்ற நினைப்பு எப்போது இருக்கத்தான் செய்கின்றது. மேற்கண்ட இதனை போட்டோ எடுக்க வேண்டும் என்று தோன்றிய Photographer-க்கு, அந்த பெரியவருக்கு முதலில் தண்ணீர் கொடுக்கவேண்டும் என்றோ, முதல்உதவி செய்ய வேண்டும் என்றோ தோணாமல் போய் விட்டது. அல்லது போட்டோ எடுத்த பின்பாவது ஏதாவது செய்தாரா?
  100% TRUE. This photographer also has used this episode to make money. Its paining that humanity is dieing in India.

 7. harisivaji

  nanpargale naama mathavangala kurai solvathu orupakkam irukattum
  naamum intha mathri sollnilayil irukum pothu intha mathriyaana kevalamaana kudumyaana visyangalai seiayamal irunthal sari
  ithu seithi yaga matum parkaamal aalnthu sinthika vendya visyam.
  anga irunthaavanga kavanikala photgrapher kavainkala
  naama yosikrathu thapilla
  entha oru soolnilyalum naamalum intha thavarai seithida koodathu

 8. r.v.saravanan

  vino
  sammatiyal aditadhu pondru irukkudu ungal katturai namakku

  arasiyalwathigalukku andhellam kidaiyadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *