BREAKING NEWS
Search

மனசுக்குள் பெய்த மழை!

மனசுக்குள் பெய்த மழை!

னசுக்குள் பெய்த மழை!

மழைக்காலம் சுகமானது…
சுற்றிலும் மழைஈரம் நசநசத்தாலும்,
கிடைத்த கதகதப்பில் ஒண்டிக்கொண்டு
மண்ணைத் துளைக்கும் மழைத்துளியைப்
பார்ப்பதில் தனி பரவசம்…

மழையைப் பார்த்தபடியே,
சில பழைய மழை நாட்களுக்குப் பயணிப்பது
அதைவிடப் பரவசம்…

மழைக்காலம் வந்துவிட்டால்
மாநிலக் கல்லூரி வளாகத்துக்கே
இளமைச் சிறகு முளைத்துவிடும்..

கைக்கெட்டும் தூரத்தில்
மெரீனாவின் ஆவேச அலைகள்…
மஞ்சளும் வெள்ளையுமாய் பூத்துக் குலுங்கும்
அந்த தேவலரிச் செடிகள்…
மணிக்கூண்டின் மீதிறங்கும் மேகம்…
கல்லூரி வனத்தின் கிளைகள் சொரியும்
மழைத்துளிகளில் தாகம் தீர்க்கும் அதிசயம்…
அந்த ‘மலையாள டிபார்ட்மெண்ட்’ ஜன்னலைப்
பார்த்துக் கொண்டே மதியப் பசியைத்
தணித்துக் கொண்ட இளமை நாட்கள்…
பொருளியல் விதிகளைப் புறக்கணித்து
சோம்பல் முறிக்கும் வகுப்புகள்…

வெயில் தற்காலிகமாய் ஓய்வெடுத்துக் கொள்ளும்
அந்த சீஸனில்
வெளிர் காட்டன் புடவையில், வண்ணச் சுடிதார்களில்
புத்தம் புதுசாய் மிதந்து வரும் தேவதைகள்…
சற்றே அறிமுகமானதும்,
சாரலில் நனைந்தபடி
கேண்டீனில் ஒரே டீயை அவர்களுடன்
பகிர்ந்து பருகும் தருணங்களில்
மனசுக்குள் பெய்யுமே ஒரு மழை… ஆஹா!

-சங்கநாதன்




2 thoughts on “மனசுக்குள் பெய்த மழை!

  1. r.v.saravanan

    மழைக்காலம் வந்துவிட்டால்
    மாநிலக் கல்லூரி வளாகத்துக்கே
    இளமைச் சிறகு முளைத்துவிடும்..

    கவிதை மழை அருமை சங்கநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *