BREAKING NEWS
Search

மங்களூரில் ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறியது… 159 பேர் பலி!

மங்களூரில் ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறியது… 159 பேர் பலி!


பெங்களூர்: துபாயிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா போயிங் 737-800 விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 159 பேர் பலியானார்கள். 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மங்களூரில் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது விமானத்தில் திடீரென தீப்பிடித்து வெடித்தது.

தரையிறங்கியபோது, குறிப்பிட்ட வேகத்தைக் காட்டிலும் ஓடுபாதையில் வேகமாகச் சென்றது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுதளத்தை விட்டு பக்கத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் பாய்ந்தது (மங்களூர் விமான நிலையத்தில் ரன்வே  முடிந்து சிறிது தூரத்திலேயே பெரிய பள்ளத்தாக்குப் பகுதி வந்துவிடும்). அப்போது விமான டயரில் தீப்பிடித்து எஞ்ஜின் பகுதியில் வேகமாகப் பரவியது. அடுத்த சில நொடிகளில் விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

அப்போது விமானத்தில் 160 பேரும், பைலட்டுகள் உள்ளிட்ட விமான பணியாளர்கள் 6 பேரும் இருந்தனர். இவர்களில் 158 பேர் தீயில் கருகிவிட்டனர். 8 பேர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.  தப்பியவர்களில் ஒருவர் மருத்துவமனைக்குப் போகும் வழியில் இறந்தார்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் கர்நாடகா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இதையடுத்து விமான நிலையத்தில் இருந்த தீயணைப்புத் துறையினர், அவசர காலப் படையினர் அனைவரும் தீயை அணைத்தனர்.

விமானத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. மங்களூர் பகுதியில் பலத்த மழை பெய்வதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதிக்கு மத்திய அமைச்சர்கள் பிரபுல் பட்டேல், வீரப்ப மொய்லி ஆகியோர் விரைந்துள்ளனர். கர்நாடக முதல்வர் எடியூரப்பா விபத்துப் பகுதியில் முகாமிட்டுள்ளார். மாநில உள்துறை அமைச்சர் விஎஸ் ஆச்சார்யா சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

சமீப காலத்தில் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய விமான விபத்து இதுவே.

இச்சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தெரிந்து உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அவசர உதவிக்கு இந்த எண்களைத் தொடர்பு கொண்டு விபத்து மற்றும் அதில் பலியானவர்களின் விபரங்களைத் தெரிந்துகொள்ள  அவசர உதவி தொலைபேசி எண்களை மங்களூர் விமான நிலையம் அறிவித்துள்ளது.

அந்த எண்கள்:

டெல்லி: 011-25656196, 25603101

மங்களூர்: 0824-2220422, 2010167

பெங்களூர்: 080- 66785172, 22273310

துபாய்: 00971-4-2165828, 00971-4-2165829

பலியானோர் விவரங்களை வெளியிட்டு வருகிறது ஏர் இந்தியா நிர்வாகம்.

பிரதமர் துயரம்

இந்த விமான விபத்து குறித்து அதிர்ச்சியும் துயரமும் வெளியிட்டுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்று இரண்டாண்டு பூர்த்தியாவதைக் கொண்டாடும் வகையில் கூட்டணித் தலைவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்ச்சியை, இந்த விமான விபத்து காரணமாக ரத்து செய்துள்ளது காங்கிரஸ்.

-என்வழி
6 thoughts on “மங்களூரில் ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறியது… 159 பேர் பலி!

 1. eelam tamilan

  Sad to see this news. I doubt with Air India flights maintenance and service. If you see nearest country Malaysia where airlines are really reasonable and much maintained well too as i seen. Try to remove these industries out of politicians….In SL too same history… you all know both are good friends..

 2. Logan

  அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

 3. thinnu-kuwait

  List
  1. Harshini Poonja; 2. Aaron Joel Fernandes; 3. Niha Imthiaz; 4. Bhaskaran T.V.; 5. Komalavally Alinkeel; 6. Narayana Kanthav Rao; 7. Vani Narayana Rao; 8. Vaishnavi Narayana Rao; 9. Mohammad Ishaque Rafique Ahmed; 10 Hasanabba Abubakkar; 11. Hiba Azeena (child); 12. Mushina (child); 13. Haifa Hasha (infant); 14. Joyanrichard Saldanha; 15. Ummer Farook Mohammed; 16. Shahida Nushrathar; 17. Zeshan Abdul Rehman (child); 18. Kannur Zulekha Banu; 19. Nazeema Muhammad Ashraf; 20. Satyanarayana Ballakuraya; 21. Sujatha Rao; 22. Fathimamehzan Shafqat; 23. Rashaad Shafqatmahmood (infant); 24. Khader Ammangod Mohammed Shafy; 25. Suhaib Mohammed Naseer (child); 26. Bibi Sara (child); 27. Nabeeha Mohammed Nasir (child); 28. Mohammad Asraf; 29. Maimoona Asraf; 30. Ashaz Abdulla (child); 31. Ayesha Afsheen (child); 32. Plaviashakunthala Lobo; 33. Venishanikola Lobo; 34. Vishalfloid Lobo (child); 35. Abdullah K.M.; 36. Rosly Shibu; 37. Godwina Thomas (child); 38. Gloria Thomas (child); 39. Bhagali Prabhakar; 40. Kammadam Kunhabdulla; 41. Shashikanth Punja; 42. Manirekha Punja; 43. Abdulbarr Damudi (child); 44. Mahesh Shetty; 45. Mohamed Naser; 46. Anwar Sadiq; 47. Hassan Kutty; 48. JoelPratap DSouza; 49. Arunkumar Shetty; 50. Abdul Samad; 51. Prasadand Manjrekar; 52. Krishnan Koolikunnu; 53. Mullachery Balakrishnan; 54. Shanthi Olivera; 55. Chethana Mukeshkumar; 56. Ahmednaushad Abbu; 57. Rajan Pulikodan; 58. Jayaprakasha Devadiga; 59. Jayaram Kotian; 60. Chitra Jayaram; 61. Rahul Jayaram (child); 62. Prabhavati Karkera; 63. Ashitha Bolar; 64. Akshay Bolar; 65. Suresh Kunder; 66. Soman Narayani; 67. Pradeep G.K.; 68. Kallingalabullah 69. Thalangara Ebrahimkhaleel; 70. Naziya Afarin; 71. Mohammed Abaanruknuddin (child); 72. MohammedRafi Beliyapura; 73. Abdullah Mohammed; 74. Ibrahim Saheb; 75. Sameena Saheb; 76. Issam Ibrahim; 77. Rida Ibrahim (child); 78. Perumbalamohammed; 79. Shivakumar Nagaraj; 80. Meenu Gupta; 81. Shetty K.K.; 82. Gangadharan Nair; 83. Prabathkumar Attavar; 84.Sathisha Shetty; 85. Irshad Ahmed; 86. Neha Parveen; 87. Affan Ahmed (infant); 88. Sameerbeerran Moideen; 89. Abdunnazir Avinja; 90. Riju John; 91. Sabrina Nasrinhuq; 92. Mahammooda Abdulla Kanyana; 93. Althafahmed Moolana; 94. Lokeshasadananda Belchada; 95. Hameed Pookayam; 96. Mayankutty K.P.; 97. Vipin Kattoor; 98. Kishorekumar Kudpapoojary; 99. Chandukutty Nair K.; 100. NM Bharatham; 101. Abdulazeez Anchikatta; 102. Umashan Vijayan; 103. Cavin Sequiera; 104. Reshmasanthosh Rai; 105. Nalandshaunsantosh Rai (child); 106. Vihasantosh Rai (infant); 107. Vamana Prabhu; 108. Ganesh Prabhu; 109. Qazi Abdulsalam; 110. Qazizulekah Khuddus; 111. Jackson Periera; 112. Mahammed Ismail; 113. Naveen Kumar; 114. Sanjaykumar Mahabal; 115. Mahendra Kodkany; 116. Indumathi Nayak; 117. Vijesh Kovval; 118. Ramakrishna Nayak; 119. Ajesh Mottathil; 120. Navid Ibrahim; 121. Ignatius DSouza; 122. Sukumara Kuzhiyamkottuchal; 123. Abdul Basheer KM; 124. Mohiddin Farasusman; 125. Mahim Mohammedpalli; 126. Mohammedashraf KA; 127. Mohamed Usman; 128. Naveenwalter Fernandes; 129. Saritaphilomena Dsouza; 130. Ullas Dsilva; 131. Mannapadupuashraf Abdul; 132. Safdharali Sheik; 133. Mahesh Shetty; 134. Abdulharish Koppalamhouse; 135. Abdul Jebran; 136. Parambathkunhi Krishnan; 137. Prabhakaran Pachikaran; 138. Nekkareibrahim Ismail; 139. Melwynkiran Menezes; 140. Siddeeque Choorisulaiman; 141. Putturismail Abdulla; 142. Somashekhar Potyalsrinivasa; 143. Lokesh Narayanan; 144. Lolitta Dias; 145. Lilly Dias; 146. Praveena Sundar; 147. Hilda Douza; 148. Pradeep Deepanivas ; 149. Denis Saldanha; 150. Ashton Saldanha (child); 151. Manthur Hassainar; 152. Rama Satish; 153. Mohammed Basheer ; 154. Aboobacker Siddeeq 155. Mohammed Usman; 156. Shaileshrao Brahmavara; 157. Mohammed Ziad; 158. Sameena Abdul Karim; 159. Zainab Mohammedziad (child); 160. Mohammed Subairzaid (child).

 4. r.v.saravanan

  பலியானவர்களின் குடும்பங்களுக்கு எவ்விதத்தில் ஆறுதல் கூறினாலும்
  இது மிக பெரிய சோகம் தான்

  அந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *