BREAKING NEWS
Search

மகாதீராவை மிஞ்சும் வசூல்… தெலுங்கில் அதிர வைக்கும் ரோபோ!!

மகாதீராவை மிஞ்சும் வசூல்… தெலுங்கில் அதிர வைக்கும் ரோபோ!!

தெலுங்கில் ‘ஆல் டைம் ரெகார்ட்’ எனப்படும் மகாதீராவின் துவக்க வசூலை ரஜினியின் ரோபோ முறியடித்துள்ளதாக தெலுங்கு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஆந்திரா முழுவதும் ‘ரோபோ மேனியா’ தொடர்வதாகவும், திரையிட்ட அனைத்து இடங்களிலும் 100 சதவீத பார்வையாளர்களுடன் ரோபோ புதிய சரித்திரம் படைத்து வருவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆந்திர சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் அளவுகோலாகக் கருதப்படும் நிஜாம் பகுதியில் முதல் மூன்று நாட்களில் மகாதீரா 4 கோடி வசூலித்துள்ளது. ஆனால் எந்திரன் ஒரு நாளைக்கு ரூ 1.6 கோடி வீதம் மூன்று நாட்களில் ரூ 4.8 கோடியை வசூலித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் இது 8 கோடியைத் தாண்டும் என விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர்.

சிறு நகரங்களிலும் ரோபோவின் வசூல் சாதனை தொடர்கிறது. குடிவாடாவில் ரோபோ 4 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நான்கு திரையரங்குகளிலுமே இன்றுவரை ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஊரில் மட்டும் விநியோகஸ்தர்கள் பங்காக ரூ 11 லட்சம் வசூலாகியுள்ளது.

மச்சிலிப்பட்டிணத்தில் 3 திரையரங்குகளில் வெளியாகியுள்ள ரோபோ, ரூ 8 லட்சம் வரை வசூலித்துள்ளது. தமிழக வசூலுக்கு நிகரானது இது.

வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஆந்திராவில் மட்டும் ரூ 16.5 முதல் 20 கோடியை வசூலித்துவிடும் எந்திரன் என ஆந்திர விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதில் வெளிநாடுகளில் வசூலாகியுள்ள தொகை சேராது. வெளிநாடுகளில் ரோபோ தெலுங்கு மூலம் மட்டுமே முதல் வாரத்தில் ரூ 10 கோடி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் இந்த புதிய வசூல் சாதனை, ஆந்திர மாநில தயாரிப்பாளர்களை சற்றே யோசிக்க வைத்துள்ளது. தங்களின் புதிய படங்களை உடனே வெளியிடுவதா, தள்ளிப் போடுவதா என அவர்கள் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மகேஷ்பாபு 3 ஆண்டுகளுக்குப் பின் நடித்துள்ள கலீஜா படம் வரும் 7-ம் தேதி  வெளியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி ரோபோ 700க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால், மகேஷ்பாபு படத்துக்கு அரங்குகள் கிடைப்பது சிரமமாகியுள்ளது. பெரும்பாலான திரையரங்குகள் ரோபோவே ஓடட்டும் என கூறியுள்ளது தயாரிப்பாளர்களை அதிரவைத்துள்ளது. அடுத்த வாரம் வெளியாகவிருந்த ஜூனியர் என்டிஆரின் பிருந்தாவனம் படம் தள்ளிப் போகக் கூடும் எனத் தெரிகிறது.

-என்வழி




6 thoughts on “மகாதீராவை மிஞ்சும் வசூல்… தெலுங்கில் அதிர வைக்கும் ரோபோ!!

  1. MS_lon

    பிருந்தாவனம் Jr .NTR வினோ ..
    _____________

    Yes… corrected.. thanks.
    -Vino

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *