BREAKING NEWS
Search

போர் நிறுத்தம் வலியுறுத்தி ரஜினி சேவை சமிதியினர் மோட்டார் சைக்கிள் பயணம்!

போர் நிறுத்தம் வலியுறுத்தி ரஜினி சேவை சமிதியினர் மோட்டார் சைக்கிள் பயணம்!


பெங்களூரு:
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பெங்களூர் ‘ரஜினி சேவா சமிதி’யினர் நேற்று சென்னைக்கு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்தனர். இந்த ஊர்வலத்தை கோலார் தங்க வயல் நகரசபை தலைவர் பக்தவச்சலம் தொடங்கி வைத்தார்.sebgl805p3ph5

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும், அங்கு தமிழர்களுக்கு தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் பெங்களூர் ரஜினி சேவா சமிதி சார்பில் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்னைக்கு புறப்பட்டு தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் நேற்று மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் நேற்று காலை பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுர் சிலையில் இருந்து புறப்பட்டது. ஊர்வலத்தை கோலார் தங்கவயல் நகரசபை தலைவர் மு.பக்தவச்சலம் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கர்நாடகத்தில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணிக்கு ரஜினி சேவா சமிதியின் தலைவர் முருகன் தலைமை தாங்கி சென்றார். பேரணிக்கு கர்நாடக மாநில மனித உரிமை சங்க தலைவர் வரதராஜன் முன்னிலை வகித்தார். இந்த ஊர்வலம் பெங்களூர் அல்சூர் ஏரிக்கரையில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சென்னையை சென்று அடைகிறது.

பின்னர் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து அவரிடம் இலங்கையில் போரை நிறுத்த வழியுறுத்தியும், அப்பாவி தமிழர்களை காப்பாற்றி, இலங்கையில் தனி ஈழம் அமைக்க வேண்டும் என்று கூறி மனு ஒன்று கொடுக்கப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சகத்திடமும் மனு ஒன்று கொடுக்கப்படுகிறது.

தனி ஈழம்

முன்னதாக ஊர்வலத்தை தொடங்கி வைத்த மு.பக்தவச்சலம் தொடங்கி பேசியதாவது:

தமிழர்களுக்காக நடத்தப்படும் இந்த மோட்டார் சைக்கிள் வாகன பயணத்தை நான் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில், கலந்து கொண்டதன் மூலம் என்னுடைய தமிழ் உணர்வையும் இதன் மூலம் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்கள் மீது குண்டுகளை வீசி அவர்களை கொன்று குவித்து வருகிறது.

மத்திய அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஏற்படுவதற்கும், அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்காள தேசப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு அங்கு எப்படி தனிநாடு உருவாக்கி கொடுத்ததோ, அது போல இலங்கை பிரச்சினையிலும் தலையிட்டு தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்து கொடுக்க வேண்டும், என்றார் பக்தவச்சலம்.

கமல் ரசிகரும் பங்கேற்பு!

இந்த நிகழ்ச்சியில்,கர்நாடக மாநில கமலஹாசன் ரசிகர் மன்ற தலைவர் வேலு பங்கேற்றார்.

ரஜினி சேவா சமிதி உறுப்பினர்கள் சுந்தர மூர்த்தி, சதிஷ், அகில இந்திய மனித உரிமை கழகத்தின் இளைஞர் அணி தலைவர் சுகுமாறன், கர்நாடக மாநில கன்னடர் தமிழர் சங்க தலைவர் மணிவண்ணன், கர்நாடக பெரியார் திராவிடக் கழகத் தலைவர் பழனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-தகவல்: அருள் கண்ணன், பெங்களூர்




6 thoughts on “போர் நிறுத்தம் வலியுறுத்தி ரஜினி சேவை சமிதியினர் மோட்டார் சைக்கிள் பயணம்!

  1. கிரி

    //மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்னைக்கு புறப்பட்டு தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்தனர்//

    ஏம்பா! கொடுக்கிறதுக்கு வேற ஆளே கிடைக்கலையா!

  2. mukesh

    ஏம்பா! ஜெயலிலிதாவிடம் கொடுங்கப்பா. அவர்தான் தமிழ் ஈழம் வாங்கி தருவதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஒண்ணே ஒண்ணு. தேர்தலுக்கு முன்பாகவே பாருங்கள். இல்லையென்றால் போய்ஸ் கார்டன் பக்கம் நம்மை எல்லாம் சேர்க்க கூட மாட்டாங்க.

  3. arul

    நல்ல முடிவு.முகேஷ் அவர்களே கலைஞரும் சோனியாவும் தனி ஈழத்தில் அக்கறை காட்டுகிறார்களோ இல்லையோ ஆனால் மனுவை தற்பொழுது ஆட்சியில் இருக்கும் கலைஞரிடம் கொடுப்பதுதான் முறை. மற்றவர்கள் இலங்கை பிரச்சினையில் அக்கறை காட்டுவது ஓட்டுக்காக ஆனால் ரஜினி ரசிகர்கள் இந்த விசயத்தில் அக்கறை காட்டுவது இலங்கையில் போர் நிறுத்தமும் தனி ஈழமும் எற்படவேண்டுமென்ற நல்ல எண்ணத்திற்காக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *