BREAKING NEWS
Search

சீமானுக்கு சிறைச்சாலை… அசினுக்கு சிவப்புக் கம்பளம்! – என்ன கொடுமை இது!!

போராளி சீமானுக்கு சிறைச்சாலை… உளவாளி அசினுக்கு சிவப்புக் கம்பளம்! – என்ன கொடுமை!!

டந்த வாரம் இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அது, சில மாதங்களுக்கு முன் கொழும்புவில் இந்திய ஆதரவோடு நடந்த ஐஃபா எனும் சர்வதேச இந்திய திரைப்பட விழா நிகழ்ச்சிக்கான செலவு மற்றும் வரவு குறித்த அறிக்கை.

இந்த நிகழ்ச்சிக்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டுத் துறை ரூ 475 மில்லியன் செலவழித்துள்ளது. ஆனால் நிகழ்ச்சி மூலம் கிடைத்த வருமானம் வெறும் ரூ 10.6 மில்லியன்தான்.

இந்த நிகழ்ச்சிக்காக இந்திய – தமிழக திரைக் கலைஞர்கள் 84 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அனைவரும் அதில் பங்கேற்க உறுதியும் அளித்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினியையும் அழைக்க முடிவு செய்து, இந்தியாவுக்கான இலங்கை தூதர் அழைப்பிதழ் தந்தபோது, அதை வாங்க மறுத்துவிட்டார் ரஜினி. இலங்கை அதிபர் ராஜபக்சே நேரடியாக அழைக்க முயற்சித்த போதும், அவருடன் தொலைபேசியில் பேசவும் மறுத்து முதல் பரபரப்பை ஏற்படுத்தியவர் ரஜினிதான்.

அதுவரை இந்த விழா குறித்து பெரிதாக எதுவும் பேசப்படாமல்தான் இருந்தது. ரஜினியின் புறக்கணிப்பு செயலுக்குப் பிறகு, பிற நடிகர்களும் தமிழுணர்வாளர்களும் ஐஃபா புறக்கணிப்பை ஒரு இயக்கமாகவே தொடர்ந்தனர்.

அதை முன்னெடுப்பதில் முதலில் நின்றவர் இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான்.

ரஜினியின் புறக்கணிப்பு குறித்த தகவல் வெளியான உடனே, நாம் தமிழர் இயக்கத்தினர் மும்பையில் அமிதாப் பச்சன் வீட்டு முன் பெரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்தி தங்கள் உணர்வை தெரிவிக்க, ஒரு புரிதலோடு ஐஃபா அமைப்பிலிருந்தே விலகிக் கொண்டார் அமிதாப் (ஐஃபா விருது விழா ஆரம்பித்த நாளிலிருந்து இவர்தான் அதன் விளம்பர தூதர். அமைப்பாளர்களில் ஒருவரும் கூட!).

இதனைத் தொடர்ந்து ஷாரூக் கான், கமல்ஹாஸன், அமீர் கான், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் என முன்னணி கலைஞர்கள் இந்த விழாவுக்குப் போகாமல் தவிர்த்தனர்.

இதனால், வருவதாக வாக்கு தந்த 84 கலைஞர்களில் வெறும் 38 பேர் மட்டும் ஐஃபா விழாவில் பங்கேற்றனர்.

ஒரு நாட்டு அரசே (பிராந்திய வல்லரசு இந்தியாவின் உதவியுடன்) நடத்திய மிகப் பெரிய நிகழ்ச்சி என்ற முறையில் இலங்கைக்கு நேர்ந்த அவமானம். மிகப்பெரிய நஷ்டம் (இந்த நஷ்டத்தை இந்தியா வேறு வகையில் ஈடுசெய்துவிட்டது தனி கொடுமை…!) இந்த விழா.

‘இந்திய கலைஞர்கள்தானே… அவர்களுக்குள் ஏது ஒற்றுமை… இந்திய அரசு சொன்னால் கேட்டுக் கொண்டு வரப்போகிறார்கள்’ என்ற ராஜபக்சே கோஷ்டிக்கும் அவர்களுக்கு போஷாக்கு தந்துவரும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் கிடைத்த செருப்படி இது!

இன்னொன்று, இந்த நஷ்டம் காரணமாக, ஐஃபா விழாவுக்கு மேடை அமைத்தது, அலங்கார வேலைப்பாடுகள் செய்தது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு இலங்கை அரசு இன்னும் சம்பளமே தரவில்லையாம்.

ஐஃபா விருது என்பது சாதாரணமானதல்ல. ஆசியாவின் ஆஸ்கர் என்று பெருமையுடன் சொல்லப்படுவது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த விழாவை ஒன்றுமில்லாமல் செய்ததன் மூலம் இலங்கைக்கு சர்வதேச அரங்கில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தினர் மனிதாபிமிக்க கலைஞர்கள். “தமிழர்களைக் கொன்று குவித்த, போர்க் குற்றவாளியான இலங்கையை பெரும்பாலான இந்திய திரைக் கலைஞர்கள் புறக்கணித்தனர்” என்று சர்வதேச பார்வையாளர்களே சொல்லும் அளவுக்கு நிலைமை மாறியது.

ஆனால் அந்த நிலைமையை நீடிக்க விடுவார்களா இந்திய – தமிழக ஆட்சியாளர்கள்?

‘இலங்கை ஒரு போர்க் குற்றவாளி நாடு; இறுதிப்போரில் 1 லட்சம் தமிழர்களைக் கொன்று, 3 லட்சம் தமிழர்களை சொந்த நாட்டிலேயே முள்வேலி சிறைக்குள் அடைத்த ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி; அவருக்கு உடந்தையாகத் திகழ்ந்த அவரது தம்பிகளும் போர் குற்றவாளிகளே. இவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றப்பட வேண்டும். சிங்களவருடன் இனி சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையில் தமிழர்களுக்கு இறையாண்மையுள்ள தனி நாடு வேண்டும்’, என்று சர்வதேசத்தை அறிவிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தப்பட்ட காலகட்டத்தில்தான், அவற்றை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை – இந்திய ஆட்சியாளர்கள் இறங்கினர்.

தொடர்ந்து கவர்ச்சிகரமான இரையை மாட்டி திரையுலகுக்கு தூண்டில் வீச, அதில் தானாகவே விரும்பிப் போய் விழுந்தவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர்தான் நடிகை அசின்.

இலங்கையில் நடக்கும் படப்பிடிப்புக்கோ, விழாக்களுக்கோ எந்த கலைஞரும் செல்லக்கூடாது என்ற திரையுலகின் கட்டுப்பாடு, ஒருமித்த முடிவையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு சல்மான்கானுடன் ரெடி படப்பிடிப்புக்குப் போனார் அசின்.

போனவர் தன் வேலையை மட்டும் பார்க்காமல், ராஜபக்சே அரசின் ஊதுகுழலாகவே மாறினார். தமிழர் பகுதிகளில் கண்சிகிச்சை முகாம் நடத்துவதாகக் கூறிச் சென்றவர், அங்குள்ள தமிழர்கள் எல்லாம் சூர்யா, விஜய் போன்றவர்களை பார்க்க விரும்புவதாகக் கூறி, இலங்கைக்காக ஆள்பிடிக்கும் வேலையில் இறங்கினார்.

தமிழகத்தில் தனக்கு எதிராகக் கிளம்பிய எதிர்ப்பை கொழும்பிலிருந்தபடி நக்கலடித்தார், அலட்சியப்படுத்தினார் அசின்.

ஆனால் அவருக்கு எதிராக எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை தமிழ்த் திரையுலகம். அவரும் இலங்கையிலிருந்து எந்த எதிர்ப்புமின்றி (இந்திய – தமிழக போலீஸ் பாதுகாப்புடன்) சென்னை வந்தார். காவலன் படத்தில் விஜய்யுடன் நடித்தார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தது காவலன் யூனிட்.

இப்போது எந்த அசினை தமிழர்களும் தமிழ் உணர்வாளர்களும் கடுமையாக விமர்சனம் செய்தார்களோ, அதே அசினை ஒவ்வொரு தமிழன் வீட்டு வரவேற்பறை வரையிலும் கொண்டு சென்றுள்ளது சன் டிவி. தமிழனைக் கொன்ற சிங்கள ஓநாய்களுடன் கொஞ்சிக் குலவி வந்த கர்வத்துடன், அவரும் சன் டிவியில் கெக்கே பிக்கேவென சிரித்தபடி பேட்டி கொடுக்கிறார். தமிழ் ரசிக மகா ஜனங்களும் வெட்கமின்றி அதைப்பார்த்து ரசிக்கிறார்கள்.

தமிழக மீனவர்களைச் சித்திரவதை செய்து அடித்து விரட்டும் சிங்கள கடற்படையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த சீமானை சிறையில் தள்ளிவிட்டது கருணாநிதியின் அரசு. ஆனால் தமிழர் உணர்வை காலில் போட்டு நசுக்கும் செயல்களைச் செய்துவிட்டு, வெட்கமே இல்லாமல் அதே தமிழகத்துக்கு வந்து பிழைப்பு நடத்தப் பார்க்கும் ஒரு மலையாள நடிகைக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ள கொடுமையை என்னவென்பது?

இப்போது நாம் உடனடியாக செய்ய வேண்டியது, அசின் தொடர்பான அனைத்து விஷயங்களையும் – வரப்போகிற விஜய் படமான காவலன் உள்பட- புறக்கணிப்பதே அவருக்கும் ராஜபக்சேவலுக்கு ஜால்ரா போடும் நடிகர்களுக்கும் சரியான பாடமாக அமையும்.

எல்லோரையும், எல்லாவற்றையும் இப்படி புறக்கணித்துக் கொண்டே இருக்க முடியுமா… அது சரிதானா? என்ற கேள்வியை சிலர் எழுப்பக் கூடும்.

போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அடக்கப்படுகிறபோது, ஒரு மவுனமான புறக்கணிப்பு கூட ஆட்சியாளர்களை அசைத்துப் பார்த்துவிடும் என்பது சரித்திரம் சொல்லும் பாடம். ஐஃபா விழா புறக்கணிப்பின் எதிர்விளைவுகளே அதற்குச் சான்று. அந்த வகையில் அசினுக்கு மட்டுமல்ல, ராஜபக்சேயின் ஏவலாளிகளாக இந்தியாவில் செயல்படும் நடிகர்கள் மற்றும் அவர்களின் படங்களுக்கு நாம் காட்டும் எதிர்ப்பு, அவர்களைப் போன்றவர்களை பின்னால் நின்று இயக்கும் சிங்கள – இந்திய ஆட்சியாளர்களுக்கு சவுக்கடியாய் அமைய வேண்டும்!

-என்வழி
20 thoughts on “சீமானுக்கு சிறைச்சாலை… அசினுக்கு சிவப்புக் கம்பளம்! – என்ன கொடுமை இது!!

 1. tamilan

  சன் டிவி பிசிநோடே பேட்டி வேற .கொடும. வாழ்க தமிழ் உணர்வு

 2. sakthivel

  சீமான் ஒரு சீமாட்டியாக இருந்திருந்தால் கொலைஞர் சிறையில் வைக்காமல் தன் அறையில் விருந்து வைத்திருப்பார்… எதையும் மறக்கும் தமிழன் இருக்கும் வரையில் இவர்களுக்கு என்ன கவலை….

 3. eelam tamilan

  நன்றி வினோ …
  ___________

  நன்றி… உங்களுக்கும்!

  வினோ

 4. palPalani

  பட்சேஸ் பாராட்டு விழா எடுத்தாகூட, குஷ்பூவோட குத்தாட்டத்தை ஆறு மணி நேரம் அசராம பார்க்க ரெடியிருக்குற எங்க தலைவரை போயி இப்படி கேட்கலாமா??

 5. பாலா

  விஜய் படம் காவலனை நாம் முற்றிலுமாக புறக்கணிப்போம். விஜயையும் அந்த படத்தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து சினிமாவையும் வரும் காலத்தில் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்..

 6. ESWARAN

  நான் ஏற்கனவே அசின் நடித்த படத்தையும்…விளம்பர பொருட்களையும் புறக்கணித்து கொண்டு தான் உள்ளேன்……இருந்தாலும் பதிவுக்கு நன்றி

 7. P.G.R

  சீக்கியனின் மயிருக்கு இருக்கும் மதிப்புகூட தமிழனின் உயிருக்கு இல்லை என்ற சீமானின் பேச்சில் தவறு இருப்பதாக தெரியவில்லை… ஆனால் இதெல்லாம் புரிந்துகொள்ளாமல் இருக்கும் தமிழர்களின் நிலையை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது…….

 8. palPalani

  @பாலா: காவலனை புறக்கணிக்கலாம், ஆனால் விஜய்யின் அனைத்து படங்களையும் இந்த காரணத்திற்க்காக புறக்கணிப்பது சரியா?

 9. eelam tamilan

  Hey all, Donot mislead this to vijay against or any such.. Main problem for our people is start with some thing and then go some where else.. We need to focus on Asin and all people go supported and wanted to stay behind Mahinda.. I really feel bad for Vijay on this. but, it is his call and why still they wanted to her in his film… Every one has to pay for their actions… Pls spread the news and prove that we can break up this Sun TV’s cover up plan for Asin (not sure who is behind this plan)

 10. Manoharan

  அசினை எல்லாம் நான் ஒரு நடிகையாகவே நினைப்பதில்லை. அவளின் படம் மட்டுமல்ல அவள் வரும் விளம்பரங்களை கூட நான் பார்ப்பதில்லை. சேனல் மாற்றி விடுவேன். ஆனால் அவள் தமிழ்நாட்டுக்கு வந்து நடித்துவிட்டுப் போயிருக்கிறாள், ஒரு எதிர்ப்பைக்கூட காணோம். சல்மானின் Dabangg படமும் இங்கே ரிலிசாகிவிட்டது. அதற்கும் எந்தவித எதிர்ப்பும் இல்லை. அவர்களுக்கு இப்போது நம்மை கண்டால் இன்னும் இலக்காரமாகியிருக்கும்.

 11. Krishnamoorthy

  வணக்கம்
  நீங்கள் சொல்வது 100 /100 உண்மை. ஆனால் புறக்கணிப்பு என்றால் அது எல்லோருக்கும் பொதுவானதே .. அப்படி இருக்கையில்
  1. என் தம்பி சூர்யா நடிக்கும் “ரத்த சரித்திர ” வுக்கு மட்டும் அனுமதி கொடுப்போம் என்று திரு சீமான் அவர்கள் சொல்வது சரியோ ???
  2. விஜய் மற்றும் காவலன் படகுழுகுவினர் எப்படி அசினை வைத்து படபிடிப்பு நடத்த எப்படி தமிழ் சினிமா சங்கம் எப்படி ஒத்துழைத்தது ???
  இதெற்கெல்லாம் யாரிடம் பதில் உள்ளது ???
  இதுவும் அரசியலாகி போனதே!!!!!!

 12. Sasi

  வணக்கம்…!!!

  அசின், விஜய் இருவரையும் புறக்கணிப்பு செய்வோம்….!

  காவலன் படம் திருட்டு விசிடியை அன்றே இலவசமாக தியேடர்லேயே விநேயோகிப்போம்….!!!

  சன் டிவிகாரன் இன்னும் பாடம் கற்கவில்லை…..
  ஈழம் பற்றிய செய்திகள்; இருட்டடிப்பு செய்யும் போதே லேசாக சந்தேகம் வந்தது…. இப்பொது, அசின்னுக்கு கொடுக்கும் புனித நீராட்டு விழாவை பார்க்கும் போது அவர்களின் ராஜபக்சே தொடர்பை உறுதி செய்கிறார்கள்…!!!!

  இருக்கிறது எந்திரன் படம்…. திருட்டு விசிடியை ஊக்குவிக்குப்போம்…!!
  இதனால், ரஜினிக்கு ஒன்றும் நஷ்டம் வரபோவது இல்லை….!!

  ரஜினி கூட இர்வர்களுடன் இருப்பதை பார்த்தால் வெறுப்பே மிஞ்சுகிறது…..!!!!

  சிவன்(மக்கள்) சொத்து குல நாசம்…. சன் டிவிகாரனுக்கு புரிந்தால் நல்லது…!!!!

 13. கடலூர் எழில்

  புறக்கணிப்போம் “மலையாள மற்றும் சிங்கள விபச்சாரி” அசினை தமிழர்கள் இனி ஓட ஓட விரட்டவேண்டும், அதாவது நடிகர் ஜெயராம் கேரளாவுக்கே ஓடியது போல(கருத்த தடிச்ச எருமைமாடு தமிழச்சி என்று சொன்ன தே…… ).
  அவர் நடிக்கும் படங்கள் “காவல்காரன் ” உட்பட விளம்பரங்கள் அனைத்தையும் புறக்கணிப்போம்.
  தமிழனின் உணர்வுகளை மதிக்காத எந்த நடிகனும் தமிழ்நாட்டில் இருக்க அனுமதி கிடையாது.
  இந்த தே.அசினுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் விபச்சாரியும், சிங்களாச்சி ராதிகாவின் மூன்றாவது கணவனும்மாகிய சரத்குமார்(நடிகர் சங்கத் தலைவர்) பதவியை விட்டு விரட்ட வேண்டும்.
  அது என்னாடா தென்னிந்திய நடிகர் சங்கம்?
  தமிழ் நடிகர் சங்கம் என்று மாற்றியாக வேண்டும்.மாற்றுவோம் அனைத்தையும்.
  சீமான் சிறையில்! விரைவில் திரையில்! – ‘மகிழ்ச்சி’ திரைப்படம் விரைவில்

 14. Muku

  நான் ஒரு தேசிய விஜய் ரசிகனாக மாற்றிகொண்டவன், கவனிக்கவும் அது மதுரை என்ற ஒரு படம் வெளியாவதற்கு முன்பு. அவருடைய அதீத பில்டப்பை பார்த்து அன்றே ரத்த கண்ணீர் வடித்து ஒதுங்கி கொண்டவன் நான்.
  என்று விஜய் ராகுல் காந்தியிடம் சேர்ந்தானோ அவனை ஒரு நாயை போல பார்கிறேன். விஜய் படத்தை அதில் இருந்தே நான் தெயியாடேரில் பார்ப்பதை விட்டு விடேன். அப்படி இருக்கும் போது அசின் உடன் விஜய் நடித்த படம் ரிலீஸ் அவத்தில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்.
  கண்டிப்பாக புறகணிப்போம் இருவரையும்.

 15. shanmuga

  தவறு அவர்கள் மீது மட்டும் இல்லை..அவர்களை கொண்டாடும்,அதிகாரம் கொடுக்கும் தமிழர்களான நம் மீதும் இருக்கிறது..
  அவர்கள் செய்தது தவறு என்றால்,தமிழர்கள் செய்தது பாவம்…
  இதில் அடுத்தவர்களை சொல்லி என்ன பயன்.

 16. Muthu

  தமிழ் இனத்திற்கு சூடு சொரணை இல்லை என்று பலரும் நினைப்பது போலவே இந்த சப்பை நடிகை அசினும் நினைக்கிறாள். ஏன் இப்படி நினைக்கிறாள் என்றால் இவளை எதிர்ப்பது நம்மை போன்ற சில தமிழ் உணர்வுள்ள மக்களே ஆனால் அந்த வெள்ளை தோலை ஆதரிப்பதோ மக்களை சுரண்டி வாழும் ஆட்சியாளர்களும், அந்த ஆட்சியாளனை ஒண்டி வாழும் டிவி காரர்களும் நடிகர்களும் தான். மேலும் இத்தகைய நடிகைகள் தமிழர்களுக்கு எதிராக பேட்டி கொடுத்து இந்த தமிழ் நாட்டில் வசூல் ராணிகளாக, குண்டு பெருச்சாளிகளாக வலம் வந்து கொண்டு இருப்பதால் தான் (அந்த பெருச்சாளி கருணாநிதி கட்சியில் ஒன்றி விட்ட குஷ்பு தான்.

  இப்படிப்பட்ட நடிகைகள் மராட்டியத்தில் இப்படி கொழுப்பு பிடித்து எதாவது கூறி இருந்ததால் இந்நேரம் இருக்கும் இடம் காணாமல் போயிருப்பார்கள் சிவசேனாகாரர்களால். எதனையும் சில மாதங்களுக்கு பிறகு மறந்து விடும் இளிச்சவாயர்கள் கூட்டம் அல்லவா நம் தமிழ் கூட்டம்.

  இப்பொழுதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. தமிழர்களை ஏளனத்துடன் பார்க்கும் இப்படி பட்ட நடிகைகளின் படங்களையும் டிவி நிகழ்சிகளையும் நாம் புறகணித்தால்… இந்த வட, மலையாள நாய்கள் துண்டை காணும் துணியை காணும் என்று தமிழகத்தை விட்டு ஓடுவது உறுதி.

 17. eelam tamilan

  Looks this topic going to forgot and Asin film promotion going well…really sad to see our current position… Vino, What you think… I think we are not strong enough for any thing… no point of write or expect we will change ….really hared to write comment…
  _____________________

  அசின் விவகாரத்தையே பேசக்கூடாது என்கிறார் சரத்குமார். இதுபற்றி தனியாக மீண்டும் எழுதுகிறேன் நண்பா. இந்த விவகாரத்தில் யாரும் ஆர்வம் காட்டியதாகவே தெரியவில்லை. ஆனாலும் நம் பணியை சரியாக செய்வோம்.

  -வினோ

 18. பாலாஜி குவைத்

  நம் தமிழையும் தமிழ் மக்களின் உணர்வையும் புரிந்து கொள்ளதா (பிசினை) சீ அசினை எந்த தமிழ் படத்திலும் சரி தமிழ் நாட்டிலும் சரி விடக்கூடாது . அவள் நடிக்கும் படங்களையும் மற்றும் நண்பர் பாலா சொன்னது போல விஜய் படம் காவலனை நாம் முற்றிலுமாக புறக்கணிப்போம். விஜயையும் அந்த படத்தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து சினிமாவையும் வரும் காலத்தில் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்..இஹ்யு தன நாம் தமிழுக்கு தர மரியாதை, மற்றும் அரயசியளுக்கு மட்டும் தமிழை பயன்படுத்தும் அரசியல் பிரமுகர்கலயும் மற்றும் ஈழதிக்கு உண்ணா விரதம் என்று சொல்லி நன்கு குளிர் சாதனா பெட்டிகளுடன் விரத நாடகம் ஆடும் அரசியல் தாளை வலிகளியும் புறக்கணிப்போம் . அன்னன் சீமான் அவர்களுக்கு தோல் கொடுப்போம் …………. தமிழ் தமிழ் என்று நாடகம் ஆடும் அரசியல் நடிகர்களை ஆஸ்கார் போகட்டும் அரசியல் எதுக்கு ……………………வாழ்க தமிழ் …………வளர்க ……….தமிழ்…………… இனம்…………..

 19. பாலாஜி குவைத்

  ஏன் அசின் அசின் விவகாரத்தையே பேசக்கூடாது என்கிறார் சரத்குமார் எதாவது இருக்க சரத் ………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *