BREAKING NEWS
Search

போதை மருந்து விவகாரத்தில் த்ரிஷா… உண்மை என்ன?

திருநங்கையாக விஷால்!

பாலாவின் அவன் இவன் படத்தில் திருநங்கையாக நடிக்கிறார் விஷால். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவான ஆர்யா, வட்ட கிராப் தலையுடன் பக்கா கிராமத்தானாக நடிக்கிறாராம்.

இருவரும் படத்தில் அண்ணன் தம்பிகள் என்பது உபரித் தகவல்!

கண்தானம் செய்த ஐஸ்!

னது அழகிய கண்களை, மரணத்துக்குப் பிறகு மக்களுக்கே தானம் செய்ய வேண்டும் என்று கண்தான இயக்கத்துக்கு உயில் எழுதித்தந்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த செயலைச் செய்தாராம்.

‘என்னிடம் மக்கள் அதிகம் நேசித்த என் கண்களை அவர்களுக்கே திருப்பித் தருகிறேன்’, என்றும் அவர் கூறியுள்ளார்.

திருப்தியில்லை… லிங்குவைத் திருப்பி அனுப்பிய விஜய்!

சிம்புவை வைத்து தான் இயக்கவிருந்த படத்தில், அவருக்குப் பதில் விஜய் நடிப்பார் என தன்பாட்டுக்கு செய்தியை லீக் செய்துவிட்டார் லிங்குசாமி.

ஆனால் விஜய்க்கு லிங்குசாமி சொன்ன எந்தக் கதையும் பிடிக்கவில்லையாம். ‘இன்னும் கதையே முடிவாகல, அதுக்குள்ள இவரை யாரு விஷயத்தை வெளியே சொல்லச் சொன்னது?’ என கடுப்பானவர், லிங்கு படத்தில் நடிக்கும் ஐடியாவே தனக்கு இல்லை என்று கூறிவிட்டாராம்!

போதை மருந்து விவகாரத்தில் த்ரிஷா… உண்மை என்ன?

போதை மருந்து கடத்தல் விவகாரம் தெலுங்கு சினிமாவையே புரட்டிப் போட்டுள்ளது. ரவிதேஜாவின் தம்பிகள் போதை மருந்து வாங்கியபோது கையும் களவுமாக போலீஸில் பிடிபட்டனர்.

அப்போது போதை மருந்து சப்ளை செய்த நைஜீரிய இளைஞரின் டைரியைப் புரட்டியபோதுதான் த்ரிஷா உள்பட சில முன்னணி நடிகைகள், நடிகர்களின் நம்பர்களைப் பார்த்தார்களாம் போலீசார்.

இந்த நம்பர்கள் எப்படிக் கிடைத்தன? என்று கேட்டதற்கு, ஒரு நபர் மூலம் இந்த நம்பருக்குரியவர்கள் தன்னிடம் போதை மருந்து கேட்டதாகக் கூறியுள்ளார். இதனால் அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது ஆந்திர போலீஸ்.

இதில் சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தொழிலதிபர்களின் செல்போன் எண்களும் உண்டாம்!

நடிகர் சொன்ன ரூ 100 கோடி… 150 கோடி கணக்கு… மிரண்ட பள்ளி நிர்வாகம்!

சென்னை வருமான வரி மண்டல அலுவலகம் தூங்கிக் கொண்டிருக்கிறதா…? தெரியவில்லை.

வாரிசு நடிகர் ஒருவர், சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு பெரிய்ய்ய பள்ளியை வாங்க பேரம் பேசிக் கொண்டிருக்கிறாராம்.

பல ஏக்கர்களில் பரந்து விரிந்துள்ள இந்த பள்ளியின் இன்றைய மதிப்பு ரூ 300 கோடி என்கிறார்கள்.

ஆனால் பள்ளியை தொடர்ந்து நடத்துவதில் சற்று சிரமத்தைச் சந்தித்துள்ள நிர்வாகிகள், அதை வேறு நிர்வாகக் குழுவுக்கு மாற்ற முடிவு செய்திருந்த நிலையில், விஷயம் கேள்விப்பட்ட வாரிசு அவர்களை அணுகியுள்ளார். ரூ 100 கோடிக்கு முதலில் கேட்டவர், பின்னர் அந்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை, பரப்பளவு, கட்டடங்கள், வாகனங்கள் என எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, ரூ 150 கோடிக்கு பேரம் பேசினாராம்.

பள்ளியின் நிஜ மதிப்பை விளக்கிய நிர்வாகிகள், “சரி… உங்க குடும்பமே சம்பாதிச்சாலும் இவ்வளவு பணம் கிடைக்காதே, எப்படி அவ்வளவு பணம் புரட்டுவீர்கள்?” என்று கேட்டதற்கு நடிகர் காட்டிய விவரங்களைப் பார்த்து நிர்வாகம் மிரண்டு விட்டதாம். ஆளும்கட்சி மற்றும் அதிகாரிகளின் ஆதரவையும் ‘சற்றே’ கோடி காட்ட, மேலும் சில கோடிகள் கூடுதலாகக் கிடைத்தால் கைமாற்றிவிடும் உத்தேசத்தில் உள்ளதாம் பள்ளி நிர்வாகம்!

திரும்ப முதல் வரியைப் படியுங்க!

-என்வழி
6 thoughts on “போதை மருந்து விவகாரத்தில் த்ரிஷா… உண்மை என்ன?

  1. Kumar

    த்ரிஷா போதைல இருந்தா என்ன? போதைல இல்லாட்டி என்ன? நம்ம வேலைய பாப்போம் வாங்க

  2. unmai vilambi

    த்ரிஷா கன்னகின்னு ஏற்கனேவே தெரிஞ்ச விஷயம் தான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *