BREAKING NEWS
Search

“பொதுநலத்துக்காக வேலை செய்பவர்களுக்கு களைப்பு ஏற்படாது” – ரஜினி

“பொதுநலத்துக்காக வேலை செய்பவர்களுக்கு களைப்பு ஏற்படாது” – ரஜினி

சென்னை: “சுயநலத்துக்காக வேலை செய்பவர்கள் ரொம்ப சீக்கிரம் களைப்பு அடைந்து விடுவார்கள். பொதுநலத்துக்காக வேலை செய்பவர்கள் களைப்பு அடையவே மாட்டார்கள்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறினார்.

பையனூரில் உருவாக இருக்கும் கலைஞர் நகரத்துக்கான அடிக்கல்நாட்டு விழாவில், ஞாயிற்றுக் கிழமை ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியது:

“தாசரி நாராயணராவ் தெலுங்கில் பேசியதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு ரசிக்கிறார்களே என்று ஜிதேந்திரா என்னிடம் வியப்பாக கூறினார். தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாத பாஷையே கிடையாது. அவர்களின் அறிவுக்கு எட்டாத விஷயமே கிடையாது. தமிழ் மக்களின் மனதை ஒருவர் ஜெயித்தால், அவர்களின் பாராட்டை பெற்றால், இந்தியாவிலேயே பெயர் வாங்கின மாதிரி. அது சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி.

மிக அருமையான குடும்ப விழா இது. இந்த திட்டம் நடக்குமா? என்று சிலர் சந்தேகப்பட்டார்கள். கலைஞர் ஒரு முடிவு எடுத்தால், அது முடிந்த மாதிரிதான். அவரை பாராட்ட தேவையில்லை. அவர் நம் குடும்பத்தில் ஒருவர்.

நான் மலேசியா போனாலும், சிங்கப்பூர் போனாலும், எந்த ஊருக்கு போனாலும், எல்லோரும் என்னிடம் வியந்து கேட்பது கலைஞரை பற்றித்தான். இந்த வயதில் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்? எப்படி இவ்வளவு வேலைகளை செய்கிறார்? என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

எனக்கு ஒரு புத்தகத்தில் மகான் சொன்னது நினைவுக்கு வருகிறது. சுயநலத்துக்காக வேலை செய்பவர்கள் ரொம்ப சீக்கிரமே களைப்பு அடைந்து விடுவார்கள். பொதுநலத்துக்காக வேலை செய்பவர்கள் களைப்பு அடையவே மாட்டார்கள். கலைஞர் பொதுநலத்துக்காக வேலை செய்வதால், அவருக்கு களைப்பே ஏற்படுவதில்லை.

வீடு-நிலம் வந்தா வாங்காம விடாதீங்க!

பையனூரில் வீடுகள் கட்டுவது பற்றி ஒரு பேச்சு வந்தது. அது ரொம்ப தூரமாமே… பணம் அதிகம் கட்ட வேண்டுமாமே…99 வருடங்களுக்கு குத்தகையாமே…என்றெல்லாம் பேச்சு வந்தது.

எப்போதுமே வீடு, நிலம் வாங்கும்போது, அதைப்பார்த்துவிட்டு வாங்காமல் திரும்பி வரக்கூடாது. மூதேவி வாங்காமல் திரும்பி போகிறான் பார் என்று சொல்வார்கள். பூமி, இடம் வந்தால் விட்டுவிடாதீர்கள்.

பையனுக்கும், பொண்ணுக்கும் கல்யாணம் வரும்போது தாலியை விற்றாவது கல்யாணத்தை முடித்து விடுகிறீர்கள். அதுபோல் நிலம் வாங்கி வீடு கட்டும்போதும் முயற்சி எடுக்க வேண்டும்.

தாசரி நாராயணராவ் பேசும்போது, வங்கி கடன் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக கூறினார். அவர் பேசிவிட்டு திரும்புவதற்குள், வங்கி கடன் முடிவாகி விட்டது. கடன் கிடைப்பதற்கு உத்தரவு போட்டுவிட்டார், கலைஞர்.

இது, மிக அருமையான திட்டம். கலைஞர், பெரியார் சமத்துவபுரம் கட்டி வருகிறார். இது, கலைஞர் சமத்துவ நகரம்…,” என்றார்.

எல்லோரும் ரஜினி – கமலாகிவிடுவலதில்லை!

எப்படி சமாளித்தாரோ? -மம்முட்டி:

மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி பேசுகையில், “கலைஞர் இருக்கும் பெரும்பாலான மேடைகளில் நான் இருப்பேன். இன்று எனக்கு நோன்பு நாள். அப்படியிருந்தும் வந்துவிட்டேன்.

இன்று அடிக்கல் நாட்டியிருப்பது கலைஞர் நகரம் மட்டுல்ல; கலைஞர்களின் நகரம். சினிமா கனவுகளுடன் எல்லோரும் சென்னைக்கு வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் பாரதிராஜா, பாலசந்தர் ஆகிவிடுவதில்லை. ரஜினி,கமல் ஆகிவிடுவதில்லை. அதற்காக எல்லோரும் சென்னையை விட்டு திரும்பி விடுவதில்லை. இங்கேதான் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டு, சினிமாவில் முயற்சித்துக்கொண்டிருப்பார்கள்.

நாம் எல்லோரும் வெற்றி பெற்றவர்களை மட்டுமே பேசிக்கொண்டிருப்போம். தோல்வி பெற்றவர்களை பார்க்கவே வெறுத்துவிடுவோம்.

சினிமா கனவுகளுடன் சொந்த வீடு இல்லாமல் சென்னையில் இன்றும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக முதல்வர் கலைஞர் கருணாநிதி இலவச வீடு கொத்திருக்கிறார். அதனால் அனைவரின் மனதிலும் கலைஞர் நிற்பார்.

பொதுவாக இந்த மாதிரி ஒரு திட்டத்தை நிறைவேற்ற வந்தால் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். அதையும், இதையும் கேட்டு இந்த திட்டத்தையே நிறுத்திடுவார்கள். ஆனால் கலைஞர் இப்படியொரு திட்டத்தை நினைத்ததுமாதிரி முடித்துவிட்டார். இதற்காக அவர் யாரையெல்லாம் எப்படியெல்லாம் சமாளித்தாரோ என்றார்.

தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளரும், மத்திய அமைச்சருமான தாசரி நாராயணராவ் பேசுகையில், சினிமா கலைஞர்களுக்கு மதிப்பில்லா காலம் இருந்தது. நடிகர்கள் என்றால் வாடகைக்கு வீடு கூட தரமாட்டார்கள். அப்படிப்பட்ட தொழிலில் உள்ள திரைக்கலைஞர் களுக்கு கேட்டதுமே வீடு கட்டி தரும் திட்டத்தை வழங்கியவர் முதல்வர் கலைஞர்தான்.

திரைக்கலைஞர்களுக்கு முதல்வர் அளித்த இந்த சிறப்பால் நாங்கள் எல்லோரும் பெருமிதம் கொள்கிறோம். திரைக்கலைஞர்களுக்கு வங்கிக் கடன் எளிதில் வழங்கப்படவும் முதலமைச்சர் உதவவேண்டும்,” என்றார்.
2 thoughts on ““பொதுநலத்துக்காக வேலை செய்பவர்களுக்கு களைப்பு ஏற்படாது” – ரஜினி

  1. ஆகாய மனிதன்...

    இத்தனை கொள்ளு, எள்ளு, பேரன் பேத்திகளோட கொஞ்சி விளையாடற அளவுக்கு அவருக்கு வசதி செய்து கொடுத்த எல்லாப் புகழும் இறைவனுக்கே….(அப்படின்னு சொல்லுவீங்கன்னு பார்த்தா)
    களைப்பு, எனக்கா ? இன்னும் நமீதாவை கட்சிக்கு கொண்டுவரணும் ?
    அதுக்குலாற எலக்சன் வந்திருச்சே தம்பி ரஜினி !!!

  2. pandiyan

    எல்லாம் சரி ரஜினி சார், உங்களுக்கு களைப்பு வருமா வராதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *