BREAKING NEWS
Search

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்! -இலங்கை அறிவிப்பு

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்! -இலங்கை அறிவிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு pottuஅடுத்த நிலையில் உள்ள உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக இலங்கை அரசின் உளவுத் துறை அறிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த போரில் இவர் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள ராணுவம் கூறியது. ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

அதேநேரம், இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் பொட்டு அம்மானையும் கைது செய்து தங்கள் கஸ்டடியில் இலங்கை உளவுப் பிரிவு வைத்திருப்பதாகக் கூறப்பட்டது.

இன்னும் சிலரோ ரா அதிகாரிகளின் பிடியில் பொட்டு உள்ளதாகக் கூறினர்.

ஆனால் அவர் பிரபாகரனுடன் பத்திரமாகத் தப்பிச் சென்றுவிட்டதாக, தமிழுணர்வாளர்கள் தெரிவித்தனர். ஆனால் செல்வராசா பத்மநாபன் போன்றவர்கள் பொட்டு அம்மான், சூசை போன்றவர்களும் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறிவந்தனர்.

இந்த நிலையில் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கும் தகவலை சிங்கள உளவுத்துறை சுமார் 2 மாதத்துக்கு பிறகு அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தகவல் தொடர்பை இடைமறித்து கேட்டபோது பொட்டு அம்மான் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளதாக சிங்கள உளவுத்துறை கூறி உள்ளது. இலங்கை அரசிடமும் இந்த தகவலை உளவுத் துறை உறுதிபடுத்தி உள்ளது.

பொட்டுஅம்மானை விடுதலைப் புலிகள் ‘குருவி’ என்று அழைப்பது வழக்கம்.

புலிகளுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட தகவல் ஒன்றில், “டங்கோ டங்கோ ‘குருவ’ காயப்படவில்லை… அகற்றும் நடவடிக்கைக்கு தயார்!” என சில உத்தரவுகள் வழங்கப்பட்டதை உளவுத்துறை இடை மறித்துக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.

சமீபத்தில் கொழும்பில் பிரபா என்ற விடுதலைப்புலி சிங்கள ராணுவத்திடம் சிக்கினார். அவர் கொடுத்த தகவலின்பேரில் வெள்ளவத்தையில் ஒரு வீட்டை ராணுவத்தினர் சோதனையிட்டனர்.

அப்போது விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிந்தது. இதன்மூலம் விடுதலைப் புலிகளின் உளவுப்படை இன்னமும் கொழும்பில் வலுவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பொட்டு அம்மான் இலங்கையில் உள்ளாரா, வேறு நாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டாரா என்பதெல்லாம் தெரியவில்லை என உளவுத்துறை தெரிவித்துள்ளது.

அதேநேரம் பொட்டு குறித்து அப்போதும் சரி, இப்போதும் சரி சிங்கள ராணுவத்துக்கு ஒன்றும் தெரியாது என்றும், தமிழ் உணர்வாளர்கள் வாயைக் கிளறி உண்மைகளைத் தெரிந்து கொள்ள சிங்களர்கள் சொல்லும் வழக்கமான பொய் இது என்றும் புலம்பெயர் தமிழர்கள் கருதுகின்றனர்.

பொட்டு அம்மன் நலமுடன் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதாகவும் தமிழ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




2 thoughts on “பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்! -இலங்கை அறிவிப்பு

  1. வடக்குப்பட்டி ராமசாமி

    /*
    பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்!
    */
    சொல்றது இலங்கையாச்சே. நம்பலாமா?

    —-
    இதுதான் உங்க வழியா? நாக்கமுக்க படத்தை எடுங்க தலைவா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *