BREAKING NEWS
Search

பேட்ட… தலைவர் ரஜினியின் பொங்கல் விருந்து பராக்!

பொங்கலுக்கு பேட்ட… அசத்தும் புதிய போஸ்டர்!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட பட புதிய போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பேட்ட படத்தின் இன்னொரு புதிய போஸ்டரை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டது. இளம் வயது ரஜினி, சிம்ரனுடன் ஓடி வருவது போன்ற அந்த ஸ்டில் வெளியான வேகத்தில், இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது. திரையுலகினர் அனைவரும் இந்த போஸ்டரைப் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.

‘பொங்கலுக்கு பராக்’ என்ற வாசகத்துடன் இந்த புதிய ஸ்டில் வெளியாகியுள்ளதால், படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.

பாட்ஷா படத்துக்குப் பிறகு 23 ஆண்டுகள் கழித்து பொங்கலன்று வெளியாகும் தலைவர் படம் பேட்டதான் என்பது குறிப்பிடத்தக்கது.

– என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *