BREAKING NEWS
Search

பெண்கள் சிறைக்குள் அடைக்கப்பட்ட நித்யானந்தன்!

பெண்கள் சிறைக்குள் அடைக்கப்பட்ட நித்யானந்தன்!

பெங்களூர்: கடந்த 8 நாட்களாக போலீஸ் காவலில் விசாரணை செய்யப்பட்டு வந்த நித்யானந்தன் நேற்று பெங்களூர் அடைக்கப்பட்டார். சிறையில் தியானம், சிறப்பு பூஜைகள் செய்ய அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நடிகை ரஞ்சிதாவுடன் காமக் களியாட்டம் நடத்தி வீடியோவும் சாட்சியுமாக மாட்டிக் கொண்ட நித்யானந்தன் 45 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.

கடந்த ஏப்ரல் 21-ந் தேதி இமாசல பிரதேச கிராமம் ஒன்றில் பதுங்கியிருந்த அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.

அவரை பெங்களூர் கொண்டு வந்து ராமநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 8 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். போலீசாரின் கேள்விகளுக்கு நித்யானந்தன் ஒத்துழைாக்காமல் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

போலீசார் சற்றே கடுமை காட்டிய பிறகுதான் சில உருப்படியான தகவல்களை அவர் வெளியிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் 8 நாள் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று மாலை சுமார் 3.30 மணிக்கு நித்யானந்தனை ராமநகர் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி நாராயண பிரசாத் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

கோர்ட்டில் நித்யானந்தன் சார்பில் அவரது வக்கீல் ஆஜரானார். ஐதராபாத்தில் மேற்கொள்ளப்பட்ட தடய அறிவியல் சோதனை உள்பட தங்களது விசாரணை அறிக்கையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். கோர்ட்டில் நித்யானந்தன் மற்றும் அரசு தரப்பு வக்கீல்கள் வாதம் சுமார் 20 நிமிடம் நடந்தது.

இதன்பிறகு நித்யானந்தனை வருகிற 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க நீதிபதி நாராயண பிரசாத் உத்தரவிட்டார்.

அப்போது தனக்கு ஜெயிலில் தியானம், சிறப்பு பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நித்யானந்தன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை நீதிபதி ஏற்றார். தியானம் மற்றும் பூஜைகள் செய்ய அவருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஆசிரம உணவுக்கு தடை

அவரது ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு டாக்டர் கூறும் உணவு வகைகளை தயாரித்து கொடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். அதே சமயம் ஆசிரம உணவை வழங்க கோரிய அனுமதியை நீதிபதி நிராகரித்தார். ராமநகர் போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த நித்யானந்தனின் ருத்ராட்ச மாலையை மீண்டும் அவரிடமே ஒப்படைத்துவிட்டனர்.

ராம் நகர் சிறையில் அடைப்பு

இதைத்தொடர்ந்து ராமநகரில் உள்ள மாவட்ட கிளைச் சிறையில் தனி பிரிவில் (செல்) அடைப்பதற்காக போலீசார் கிளைச்சிறைக்கு நித்யானந்தனைக் கொண்டு சென்றனர். அங்கு சிறை அதிகாரி முன்னிலையில் அவரது உடைமைகள், அங்க அடையாளங்கள் மற்றும் கோர்ட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர் அவரை ஜெயிலர்கள் சிறை அறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர்.

ஏற்கனவே நித்யானந்தனுடன் கைதான அவரது சீடர் நித்யா பக்தானந்தாவும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரையும் வருகிற 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவரும் ராமநகர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

நித்யானந்தனைப நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது ஏராளமான பொதுமக்கள் அவரைப் பார்க்கக் கூடினர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

ஒரு வழக்கில் முன்ஜாமீன்.. மற்ற வழக்குகள் நிலுவை

இதற்கிடையே பிடதி ஆசிரமத்தில் சந்தனமரம், புலித்தோல் வைத்திருந்ததாக நித்யானந்தன் மீது வனத்துறையினர் தொடர்ந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி நித்யானந்தன் ராமநகர் முதல் டிராக் கோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி லட்சுமிதேவி தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்பில் ரூ.25 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்தி முன்ஜாமீன் பெற்று கொள்ளலாம் என்றும், ராம்நகரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் நித்யானந்தனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

நித்யானந்தன் மீது பாலியல் மற்றும் மோசடி புகார் கூறி கடந்த 3-ந் தேதி அங்கையற்கன்னி உள்பட சில வக்கீல்கள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தனர். இதுபோல கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசில் விஸ்வநாத் என்பவரும், புதுச்சேரி போலீசில் அல்லாடி மகேந்திரன் என்பவரும் புகார் செய்துள்ளனர்.

இந்த 3 வழக்குகளில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி நித்யானந்தன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி நாகமுத்து முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது கோவையில் புகார் கூறப்பட்ட வழக்கு கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டு விட்டதால் அந்த வழக்கில் தமிழ்நாடு போலீசார் நித்யானந்தனை கைது செய்வார்கள் என்று கருத வேண்டியதில்லை. எனவே அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும் 2 முன்ஜாமீன் மனுக்கள் மீது விளக்கமளிப்பதற்கு அரசு வக்கீல் கால அவகாசம் கேட்டிருப்பதால் அந்த மனுக்கள் மீதான விசாரணை ஒரு வாரத்திற்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

வீடியோ எடுக்கப்பட்டது எப்படி?

இதற்கிடையே நித்யானந்தன் சம்பந்தமான வீடியோ காட்சிகள் எப்படி படம் பிடிக்கப்பட்டது என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23, 24 மற்றும் 25-ந் தேதி ஆகிய 3 நாட்களில் நித்யானந்தனின் படுக்கை அறை காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. அதற்காக படுக்கை அறையில் ரகசிய காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த காமிராவை நித்யானந்தனின் படுக்கை அறை வரை செல்லும் அதிகாரம் பெற்ற 35 வயது பெண் பக்தை ஒருவர் அங்கு பொருத்தி உள்ளார்.

அந்த பெண் வெளிநாடு வாழ் இந்திய பெண். பெயர் நித்ய கோபிகா. நித்யானந்தனின் பக்தையான அவர் நித்யானந்தன் வெளிநாடு செல்லும்போதும் அவ்வப்போது இந்தியா வந்தும் நித்யானந்தனுடன் இருந்துள்ளார். அவரும் நித்யானந்தனின் ரகசிய செக்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். வழக்கு தொடர்பான சட்டபூர்வ ஆதாரத்திற்காக அந்த பெண்ணின் அடையாளம் முழுவதும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பெண் பக்தையின் பரிசு

நித்யானந்தன் பற்றி வெளி உலகுக்கு ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ரகசிய திட்டம் தயாரானதாம். அதற்காக விலை உயர்ந்த அதிநவீன வெளிநாட்டு காமிரா வாங்கப்பட்டு உள்ளது. அந்த காமிராவை ரூம்ஸ் ஸ்பிரே பாட்டிலில் உள்ள வாசனை திரவத்தை கொட்டிவிட்டு அதன் உள்ளே பொருத்தி உள்ளனர். அந்த ரகசிய காமிரா பொருத்தப்பட்ட ரூம்ஸ் ஸ்பிரேயை பெண் பக்தையான நித்யகோபிகா நித்யானந்தனுக்கு பரிசளித்து உள்ளார்.

பின்னர் அந்த ரூம்ஸ் ஸ்பிரே படுக்கை அறையை அலங்கரித்து உள்ளது. அங்குலம் அங்குலமாக தொடர்ந்து 3 நாட்கள் நித்யானந்தனின் படுக்கை அறைக் காட்சிகளை பதிவும் செய்துள்ளது. அந்த அளவுக்கு நினைவுதிறன் (மெமரி கார்டு) கொண்ட விலை உயர்ந்த காமிரா அதில் பொருத்தப்பட்டிருந்தது.

பின்னர் அந்த காமிராவில் பதிவான காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு நித்யானந்தனின் சீடர் லெனின் கருப்பன் கைக்கு கிடைத்து உள்ளது. அதன்பிறகுதான் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் பிரச்சினைக்குரிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இந்த வீடியோ காட்சிகள் வெளியாவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே ஆசிரமத்தை விட்டும் நாட்டைவிட்டும் பெண் பக்தை நித்ய கோபிகா வெளியேறிவிட்டாராம்.
2 thoughts on “பெண்கள் சிறைக்குள் அடைக்கப்பட்ட நித்யானந்தன்!

 1. ss

  பெண் பக்தை நித்ய கோபிகா , ஆயிரத்தில் ஒருவனில் வரும் ரீமா சென்-னை நினவு படுத்துகிறாரே. செம கில்லாடி தான்..

 2. Sri

  எல்லாம் மாறனும்…………கடைசில் கடவுள் கொடுத்த பரிசு.

  Hi என்வழி,

  It is a new Social site that combines *Facebook, Twitter, Youtube,Myspace, Linked-in and more…All on one page

  It is Free to Join with an Option to Upgrade to Gold Member for$10/Mo. You Earn Residual……

  Join with this link http://Join.YourNight.com/srdhrn

  Share with u friends friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *