BREAKING NEWS
Search

பெட்ரோல் ரூ 3.73, டீஸல் ரூ 2, கியாஸ் ரூ 35 உயர்வு!

பெட்ரோல் ரூ 3.73, டீஸல் ரூ 2, கியாஸ் ரூ 35 உயர்வு!… விலையை இனி எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும்!

டெல்லி: பெட்ரோலியப் பொருள்கள் விலை மக்களுக்கு அதிர்ச்சி தரும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் – டீஸல் – சமையல் எரிவாயு விலையை இனி எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் என்பதே அது. இனி அரசு இதில் தலையிடாது. விலை உயர்வைச் சமாளிக்க மானியமும் தரப்படாது.

முதல்கட்டமாக, இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 3.73 உயர்த்தப்பட்டுள்ளது.

டீஸல் விலை லிட்டருக்கு ரூ 2 உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ 35 உயர்த்தப்பட்டுள்ளது.

இனி பெட்ரோல், டீஸல், சமையல் எரிவாயு விலைகள் சர்வதேச மார்க்கெட் நிலைமையைப் பொறுத்து உயரும் அல்லது குறையும்.

மண்ணெண்ணெய் விலை உயர்வு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் விலையை மட்டும் மார்க்கெட் நிலைக்கேற்ற நிர்ணயிக்கக் கூடாது என்றும் அது ஏழைகளைப் பாதிக்கும் என்றும் அமைச்சர் குழு பரிந்துரைத்துள்ளது. அநேகமாக மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ 3 உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.

இனி, பெட்ரோலியப் பொருள்களின் விலைக்குறைப்பு மத்திய அரசின் கையில் இல்லை. மாநில அரசுகள் வரிகளைக் குறைக்க முன்வந்தால் விலைக் குறையலாம்.

பெரும் பாதிப்பு

அரசின் இந்த முடிவும், விலை உயர்வும் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. உணவுப் பணவீக்கம் ஏற்கெனவே அதிகரித்து வருகிறது. இந்த பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

-என்வழி




5 thoughts on “பெட்ரோல் ரூ 3.73, டீஸல் ரூ 2, கியாஸ் ரூ 35 உயர்வு!

  1. sakthivel

    அம்பானி குடும்பத்திற்கு நன்றியுள்ள நாயாக காங்கிரஸ் !!!!!!!!!!

    அரசியல் விபச்சாரிகளின் அளவுகடந்த ஆசையால் இந்தியா அழிவுப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது…..

  2. saravanan

    மன்மோகன் நொவ் வி கால் அச எ தும்மி பீஸ்.

  3. Mariappan

    விலையேற்றத்தை மூன்று நாள் தள்ளி அறிவிச்சதுக்கு namma ஊர் கிழம் ஒரு காரணம். மாநாடு விளம்பரம் பாதிக்க பட கூடாது endra நல்ல எண்ணம் தாம் காரணம். அடுத்து பஸ் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம்.

  4. tljana

    100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா 33 ரூபாய் மாநில அரசுக்கும் 25 ரூபாய் மத்திய அரசுக்கும் வரி கட்டுகிறோம். இதை விட பெரிய கொள்ளை எதுவும் கிடையாது.இதுல விலை ஏற்றம் வேற.

  5. Vivek

    நம்ம ஊரில் நடப்பது ஆட்சியே இல்லை… பரதேசி பசங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *